Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 29 ஜனவரி, 2016

இயக்கத்துவ ஏகாதிபத்தியமும் அதன் சமூக பாதிப்புகளும்!. – முகம்மது புகாரி

இயக்கத்துவ ஏகாதிபத்தியமும் அதன் சமூக பாதிப்புகளும்!. – முகம்மது புகாரி
தன்னுடைய இயக்கம் முன்னிலை படுத்துவது ஒவ்வொருவரின் விருப்பம், அதற்காக தன் சகோதர இயக்கங்களை வாரி தூற்றுவதொடு , அவர்களை சமுதாயத்தின் பார்வையிலிருந்து புறம் தள்ள செய்யும் முயற்சியும், கால சூழ்நிலை மற்றும் தொலை நோக்கு இல்லாத போராட்டம் மற்றும் மாநாடுகளின் மூலம் சமுதாயத்தின் பிரதான கோரிக்கைகளை திசை திருப்பி , வலுவிழக்க செய்வதும் ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் ஆபத்து.

நாங்கள் நோட்டுக்கும் சீட்டுக்கும் அலையவில்லை
அரசியலுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்கிறார்கள் , ஆனால் இது உண்மையா ??

2014 இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அதிகப்படுத்தகோரி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினார்கள்,குழு அமைத்து விட்டார் என்ற ஒரு ஆவணத்தை காட்டி அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த மோடி ஆதரவு ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுத்தார்கள் .
பாராளுமன்ற தேர்தலில் , ஒட்டு மொத்த இந்திய இஸ்லாமியர்களின் பிரதான கோரிக்கை என்பது RSS பயங்கரவாத இயக்கத்தின் பிரதமர் தேர்வான குஜராத் படுகொலை சதிகாரன் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தலில் தோற்க்கடிப்பட வேண்டும். அனால் இவர்கள் இந்திய முஸ்லிம்களின் பிரதான கோரிக்கையை திசை திருப்பும் விதமாக , ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் இட ஒதுக்கீடு தந்தாலே, நரேந்திர மோடி ஆதரவு ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்தார்கள் ( பின்னர் அதிமுகவின் சுயரூபம் தெரிந்து , தன் சொந்த இயக்கத்தினரே எதிர்த்த காரணத்தினால் திமுகவுக்கு ஆதரவளித்து திமுக அனைத்து தொகுதிகளையும் இழந்தது வரலாறு).
உ.பி மாநிலம் தாத்ரியில் , மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி படுகொலை செய்யப்பட முஹம்மது அக்லக்கிற்காக தமிழகத்தில் போராட்டம் நடத்திய இவர்கள் இந்திய பாராளுமன்ற தேர்தலில் , இந்திய தேச முஸ்லிம்களின் பிரதான கோரிக்கையான மோடி எதிர்ப்பை திசை திருப்பியும் , வலுவிழக்க செய்யும் முடிவை எடுத்தார்கள். அது மட்டுமில்லாமல் பிஜேபி இட ஒதுக்கீடு தந்தாலும் பிஜேபி யை ஆதரிக்க தயார் என்று அறிவித்து திரும்ப பெற்றார்கள்.
முஹம்மது அகலாக் கொல்லப்பட்டது இந்த மோடி ஆட்சி தந்த ஊக்கம் தானே , ஒரு குறிப்பிட்ட மாநில இட ஒதுக்கீட்டு கோரிக்கையை, அனைத்து மாநிலங்களுக்கான பாராளு மன்ற தேர்தலில் முன்னெடுத்து சென்றது ,குறுகிய கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்ட வரலாற்று தவறில்லையா ?
அதற்கு முன்னர் நடை பெற்ற தேர்தல்களிலும் , சக இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசியல் பிரதிநிதித்துவம் பெறக்கூடாது என்பதற்காக அனைத்து எதிர் பிரசாரங்களையும் செய்தார்கள்.

முஸ்லிம்களை எதிர்த்து முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வாக்கும் கேட்டீர்கள் ,அல்லாஹ்விற்கு மட்டுமே பயப்படுவதாக சொல்லும் இவர்கள் , முஸ்லிம் சமுதாய சட்டமன்ற பிரதிநிதிகளை பார்த்து அச்சப்படுவது ஏன்?
குறிப்பாக மாற்று இயக்கத்தை சார்ந்த தலைவர்கள் அனைவரும் ஏகத்துவத்தை கொள்கையாக கொண்டவர்கள்தான் , உங்களோடு இயக்கம் கண்டவர்கள், இணை வைப்பாளர்கள் அல்ல , தங்களின் பள்ளிவாயிலுக்குள் போலீஸ் நுழைந்த உடன் , முஸ்லிம்கள் ஒரு உடலை போன்றவர்கள் , அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று கேட்ட நீங்கள் , தன் சகோதர இயக்கத்தை அரசியல் பிரதிநிதித்துவம் செய்ய விடாமல் வலுவிழக்கும் செய்யும் முயற்சி துரோகம் இல்லையா ?
இன்னும் நான்கு மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிறது. இப்போது ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்று அறிவித்தீர்கள். முஸ்லிம்களின் வாக்கு பலம் வெற்றியை தீர்மானிக்க முடியாத இந்திய அளவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழக அளவில் இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்த நீங்கள் , முஸ்லிம்களின் வாக்கு,வெற்றியை நிர்ணயிக்க கூடிய சட்ட மன்ற தேர்தலில் முன்னிறுத்த வேண்டிய தமிழக முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு மற்றும் முஸ்லிம் சிறை வாசிகளின் விடுதலை மற்றும் பிணை கோரிக்கைகளை புறம் தள்ளி ,திசை திருப்பி , வலுவிழக்க செய்து விட்டீர்கள்.
பலகோடிகளை செலவு செய்து விளம்பரத்தின் மூலம் நீங்கள் ஏற்படுத்த நினைக்கும் பிரம்மை ஆட்சியாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கும், மற்றும் நம் சமுதாயத்திற்கும், முஸ்லிம்களின் பிரதான கோரிக்கையான இட ஒதுக்கீடு மற்றும் முஸ்லிம் சிறை வாசிகளின் விடுதலை மற்றும் பிணை கோரிக்கைகள் சென்றடையாமல் இருக்க முழு முதற் காரண மாகி இருக்கிறீர்கள்.

இது பல ஆண்டுகாலம் தன் குடும்பத்தை பிரிந்து , இளமையை இழந்து, நோய், மன உளைச்சல் வயப்பட்டு வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும், நீங்கள் சொன்ன ஹதீஸில் உள்ளது போல் நமது உடலின் அங்கங்களான சக இஸ்லாமிய சிறை வாசிகளின் கொடுமைகளை , முன்னெடுத்தும் செல்லும் வாய்ப்பை தடுப்பது அவர்களுக்கு செய்யும் மறைமுக அநீதி இல்லையா ?
இன்றைய அணைத்து சிறைவாசிகளும் ஆரம்ப கால தௌஹீது பிரசாரத்தில் , உங்களோடு தோள் கொடுத்து ,நீங்கள் ஒழிக்க முயற்சி செய்யும் ஷிர்க்கை எதிர்த்து, பிரச்சாரம் செய்து, குடும்பத்திலும், சமுதாயத்திலும் சோதனைகள் பலகண்ட , இன்றளவும் தௌஹீது வாதிகள் தானே , தொலை நோக்கில்லாத , தவறான வழிகாட்டலில் வாழ்கையை தொலைத்த அந்த தவ்ஹீது சகோதரர்களை புறக்கணிப்பது நியாயமா?
ஒரு சிலபேர் உங்களுக்கு எதிராக வாக்கு மூலம் கொடுத்ததற்காக , அவர்கள் ஆணை வரையும் தண்டிப்பது தீர்வாகுமா ?

நீங்கள் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை அறிவித்துவிட்டு இந்த மாநாட்டை நடத்தினாலும் , அது தேர்தல் நேரத்தில் நடத்த படுவதினால், சமுதாயத்தின் பிரதான கோரிக்கைகளான இட ஒதுக்கீடு மற்றும் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கைகளை ஆட்சியாளர்கள், ஊடகங்கள் மற்றும் நம் முஸ்லிம் சமுதாயத்தின் முன் நீர்த்து போக செய்யும் என்று அறியாதவர்களா நீங்கள் ?
இப்போதும் நீங்கள் மாநாட்டு தீர்மானத்தில் இட ஒதுக்கிடு கோரிக்கையை போன்று முஸ்லிம் ஆயுட்கால சிறைவாசிகள் விடுதலை மற்றும் விசாரணை கைதிகளுக்கு பிணை என்கிற தீர்மானத்தையும் நிறைவேற்றுவதோடு , இட ஒதுக்கீடு மற்றும் சிறைவாசிகள் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடவில்லை என்றால் பாதிப்புக்குள்ளான சிறைவாசிகள் மற்றும் வீதிக்கு வந்துவிட்ட அவர்களின் குடும்பத்தினரின் துவாவை அஞ்சி கொள்ளுங்கள் .

3 கருத்துகள்:

  1. எவண்டா இந்த புகாரி suppera பொய் சொல்றான்
    அதையும் இந்த நியூஸ்ல போடுறிங்க இவர் சொன்னதுல எவ்வளவு பொய் இருக்குனு இந்த நியூஸ்சை நடத்துபவர்களுக்கு தெரியும் அப்படி தெரிந்தும் போடுறிங்க அப்படினா நீங்க எவ்வளு பெரிய யகூதிகள் (மற்ற நியூஸ் பேப்பருக்கும் உங்களுக்கும் அப்போ என்ன வித்தியாசம் ) அப்போ யார் இந்த மாதிரியான நியூஸ் அனுப்புனாலும் போடுவீங்களா அதுல என்ன தவறு இருக்குனு பாக்க மாடிங்களா...

    அப்போ உங்கள் வீட்டுல உள்ள பொண்ணு ஒன்னு ஓடிடுச்சுனு உங்களுக்கு நியூஸ் அனுப்புனா அதையும் போடுவிங்களா

    பதிலளிநீக்கு
  2. உண்மையை சென்னால் கசக்குதா? இந்த மாதிரி களிசடை கருத்தை எல்லாம் நீங்க ஒரு பெறுட்டாக எடுக்க வேண்டாம். ஏன் உன் வீட்டில் உள்ளவர்கள் எந்த ஒரு அடிப்படை முகாந்திரம் இல்லாமல் விசாரனை கைதியாக பல ஆண்டுகள் இருந்தா உன்னுடைய மனநிலை எப்படி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. mr . களிசடை நா சிறையில் உள்ளவர்களை பற்றி பேசவே இல்லை சிறை வாசிகளுக்காக யார் போராடினாலும் என்னுடைய முழு அதரவு அவர்களுக்கு தான் அல்லாஹு அக்பர்

    பதிலளிநீக்கு