Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 20 ஜனவரி, 2016

எழுச்சியின் விதை….!

எழுச்சியின் விதை….!



காத்தமுன் நபியின்
வாழ்வை
பாடமாய்
படித்திடுவோம்!
மனதிலே நிறுத்திடுவோம்!


சிலைகளும்
பிழைகளுமாய் – மக்கள்
அன்று வாழ்ந்தனரே!
குலப்பெருமை
இனப்பெருமை
கொண்டாடி மகிழ்ந்தனரே!

வறியவர்க்கும்
எளியவர்க்கும்
அநீதம் இழைத்து வந்தனரே!
விபச்சாரம் மதுவும் சூதும்
மலிவாக கண்டனரே!

பெண் பிள்ளை
பிறந்துவிட்டால் – உயிரோடு
புதைத்தனரே!
அத்தனையும் கண்ட
அண்ணலார்
மனம் வெதும்பி நின்றனரே!
--
அல்லாஹ்வை வணங்கி
அவனுக்கே கீழ்படிவீர்!
சிலைகளையும், முன்னோர்
வழிகளையும் கைவிடுவீர்!

இறைவனின் வெற்றி
கண்ணெதிரே கண்டுகொள்வீர்!
மறுத்து நிராகரித்தால்
அழிவும் நாசமும் காண்பீர்!

அண்ணலாரின்
அழைப்பும் இதுவே!
இஸ்லாமிய அழைப்பின்
இலக்கணம் இதுவே!

குறைஷிகள் ஏனோ
ஏற்கவில்லை!
அறியாமை வாழ்வில்
குறையேதும் காணவில்லை!

அபூஜஹீலும் உத்பாவும்
ஆணவம் கொண்டனரே!
கோபத்தின் உச்சிக்கே
குறையாமல் சென்றனரே!

கடும் வன்சொற்களால்
கண்ணெதிரே திட்டினரே!
ஒட்டகத்தின் குடலை
ஓடி வந்து இட்டனரே!

அபூலஹபும்
அவன் பங்கை
குறையேதும் வைக்கவில்லை!
கைம்மண்ணை முகத்தில்
அடித்தான்!
பாதையெங்கும் முற்கள்
இட்டான்!

பைத்தியம் பிடித்தது
முஹம்மதை – யாரும்
பேச்சை கேட்காதீர் என்றான்!
இவர் பேச்சை கேட்டு
முன்னோர் வழியை
விடாதீர் என்றான்!

அனைத்தையும் சகித்தார் நபி!
அதைவிடவும் பொறுத்தார் நபி!
பொறுமையின் இலக்கணமாய்
வாழ்ந்தார் நபி!

பொறுமையும் சகிப்பும்
இஸ்லாத்தின் இலக்கணமன்றோ!
இவைதான் இஸ்லாமிய
எழுச்சிக்கான விதையுமன்றோ!

விதைகள்தான் விருட்சமாகும் - அது
இறைவனின் நியதியுமன்றோ!
--
வஸ்ஸலாம்.
Wassalam,
Gulam.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக