Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

முஸஃபர்நகர் கலவர வழக்கில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் – அலஹாபாத் உயர் நீதிமன்றம்


முஸஃபர்நகர் கலவர வழக்கில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் – அலஹாபாத் உயர் நீதிமன்றம்

முஸஃபர்நகர் கலவரத்தில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அலஹாபாத் உயர்நீதி மன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தாக்கல் செய்த ரிட் மனுவின் விளைவாக வந்துள்ளது. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின்  உறவினர்களுக்கு சட்ட உதவி
அளித்து அவர்களை இந்த மனுவை அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வைத்தது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா.
முஸஃபர்நகரில் 2013ல் கலவரம் நடந்த உடனேயே கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் வகையில் அங்கு ஒரு சட்ட உதவி மையம் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவினால் நிறுவப்பட்டது. இந்த மையத்தில் இருந்து வழக்கறிஞர் குழு ஒன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி வருகிறது. இது வரை 85 குடும்பங்களுக்கு தலா இழப்பீடு  ஐந்து லட்ச இழப்பீடு தொகையை சட்ட போராட்டம் மூலம் பெற்றுத் தந்துள்ளது. இந்த சட்ட உதவி மையத்தின் மூலம் ஏறத்தாழ 50 வழக்குகள் கையாளப்பட்டு வருவதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக