Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 14 ஜனவரி, 2016

நீங்கள்தான் புத்தகங்களை பிடுங்கிக்கொண்டு அவர்கள் கைகளில் கற்களை திணித்து எரியச்சொன்னீர்கள்!


நீங்கள்தான் புத்தகங்களை பிடுங்கிக்கொண்டு அவர்கள் கைகளில் கற்களை திணித்து எரியச்சொன்னீர்கள்!..

அப்சல் குருவின் மகன் காலிப் அப்சலின் வெற்றியை பெரிதாக “பூம்” செய்கின்றன தேசிய ஊடகங்கள்!. ஆச்சர்யமாகவும் அதைவிட அதிகமாக மகிழ்ச்சியாகவும் இருந்தது உடனே நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது எல்லோருக்குமே மகிழ்ச்சி தான். சமூக வலைத்தளங்களில் கூட அனைவரும் பூரித்துப்போனார்கள்.. ஆம் எல்லோருக்கும் உணர்வுகள் இருக்கத்தான் செய்யும் தாங்கள் இயலாமையில் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தூக்கிலிடப்பட்ட ஒரு அப்பாவியினுடைய குடும்பத்தில் சிறு மகிழ்ச்சி நடக்கிறது என்றால் சந்தோஷப்படத்தானே வேண்டும்.
ஆனால் ஒரு நண்பன் மட்டும் சாதாரானமாக கேட்டான் “இப்பொழுது அதற்கு
என்ன செய்ய சொல்கிறாய் அப்சல் பாய்ஜான் கூடத்தான் ஒரு மருத்துவ பட்டதாரி அவருக்கு என்ன நடந்தது என்று கவனிச்சியா?!”
என் நண்பன் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவன், ராணுவத்தால் பாதிக்கப்பட்டவன் கூடவே அவனுக்கு பெரிதாக அரசியல் எல்லாம் தெரியாது எனவே விரக்தியில் பேசுகிறான் என்று கடந்து போய்விட முடியவில்லை..
அவன் பேசுவதில் ஏதோ நியாயமான ஒரு மெல்லிய உணர்வு இருக்கிறது.. ஆம் அப்சல் குருவின் மரணம் உணர்வுப்பூர்வமானதுதான் நான் அப்பொழுது சென்னையில் இருந்தேன். எங்கள் பல்கலைகழகத்தில் இருக்கும் ஒரே நல்ல விஷயம் இந்தியாவின் எல்லா கலாச்சாரங்களிலிருந்தும் மாணவர்களை பொறுக்கிக்கொண்டு வந்து படிக்க வைத்திருப்பார்கள்.. அப்படி சில காஷ்மீர் மாணவர்களும் கூட படித்தனர்.

அப்பொழுதெல்லாம் ஊடகங்களுடன் அவ்வளவு தொடர்பு கிடையாது ஒரு காஷ்மீரி மட்டும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் நாளை எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் அப்சல் குருவுக்காக “காயிப் ஜனாஸா” தொழுகை நடத்தப்போகிறோம் முடிந்தால் கலந்து கொள்ளவும் என்று!. பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய அப்சல் குருவுக்கான போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறோமே இது என்ன தவறென்ற ஏதோ ஒரு உந்துதளில் கிளம்பிவிட்டேன் போகும்போது நிறைய தயக்கம் இருந்தது ஏதாவது பிரச்சினைகள் வந்து விடுமோ என்று ஆனால் தாமதமாகத்தான் போனேன்.. எல்லோரும் தொழுகை முடிந்து விட்டு களைந்து விட்டார்கள் எனக்கு தெரிந்த சிலர் மட்டுமே உட்கார்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்..
பிரார்த்தனை நடந்தது உருதுவில்தான். அதனால் என்ன உணர்வுகளுக்கு மொழி தேவை இல்லை தானே, எல்லா பிராத்தனைகளின் முடிவிலும் ஏதோ “கபூல் ஃபர்மாயே” என்று முடியும். அத்தனை பேரும் தேம்பித்தேம்பி அழுதார்கள், ஒன்றும் புரியவில்லை ஆனால் எனக்கும் அழுகை வந்தது.. எனக்கு என்னுடைய மொழி இருக்கிறது அது அல்லாஹ்வுக்கு புரியும் மொழிதான் பிரார்த்தனை செய்து கொண்டேன்..
எனக்கு தெளிவாக புரிந்தது அப்சல் குரு என்பவர் சூழ்ச்சியால் செத்துப்போன ஒரு தனி மனிதர் இல்லை அவர் ஒரு “காஷ்மீரி”
ஜனநாயகம் ஏமாற்றிய, கூட்டு மனசாட்சிகள் படுகொலை செய்த ஆயிரக்கணக்கான காஷ்மீரிகளின் வலிகளை வெளி உலகிற்கு முன் நிர்வானப்படுத்திய ஒரு அடையாளம் அவர்.
தன்னுடைய பட்டப்படிப்பையும் பகட்டான வாழ்வையும் தூக்கி எரிந்து விட்டு அரசியல் போராட்டங்களுக்கு வந்தவர் அப்சல் குரு. ஒரு மருத்துவரான அவரை சமூகப்போராட்டங்களில் தள்ளிவிட்டது யார் என்று உங்களுக்கு தெரியாது. பாதிக்கப்படும் தன்னுடைய மக்களுக்கு உதவ நினைத்த அவரை இந்திய உளவுத்துறை எப்படி பயன்படுத்திக்கொண்டது என்றும் உங்களுக்கு தெரியாது.
“Closed Traget” என்று நீங்கள் கேள்விப்படிருக்கின்றீர்களா? எல்லா காஷ்மீரிகளுக்கும் தெரியும். தன்னுடைய கற்பழிக்கப்பட்ட சகோதரிகளுக்காக வீதியில் இறங்கி கற்களுடன் போராட வந்த காலிப் வயதுடைய சிறுவர்களை நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டுக்கொன்று விட்டு பாதுகாப்புக்கான தாக்குதல் என்று சொல்லும் இந்திய ராணுவம்.
“வைல்ட் ரேப்” அதாவது நீண்ட காலமாக உறவு வைத்துக்கொள்ளாமல் இருக்கும் ரானுவத்தினர்களுக்கு ஆப்பிள் தோட்டங்களுக்கு செல்லும் இளம் காஷ்மீரி பெண்களை கடத்தி வந்து கொடுத்து கூட்டம் கூட்டமாக வன்புணர்வு செய்து கொலை செய்ய சொல்லும் ராணுவத்தலைமை.
குடும்பத்துடன் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஆண்களை திடீரென்று விசாரணைக்கு அழைத்துச்செல்வார்கள் பின்னர் அவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள். கேட்டால் நாங்கள் விட்டுவிட்டோம் ஒருவேளை அவன் தீவிரவாத குழுக்களில் இணைந்து இருக்கலாம் என்று பதில் சொல்லும் அரசாங்க அதிகாரிகள்.
உங்களுடைய ஊரில் ஒரு சிறுவன் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொல்லப்பட்டால் என்ன செய்வீர்கள்? உங்களுடைய ஊரில் திடீரென சில பருவப்பெண்களை காவல்துறை கூட்டமாக சேர்ந்து கற்பழித்து விட்டால் என்ன செய்வீர்கள்? உங்களுடைய உறவினர் ஒருவரை காவல்துறை அழைத்துச்சென்று அவர் திரும்பி வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
காஷ்மீரிகளுடைய கைகளுக்கு இப்படித்தான் கற்கள் வந்தன!. அரசியல் என்பது யாரும் விரும்பி தேர்ந்தெடுப்பதில்லை அவை திணிக்கப்படுகிறது. புத்தகங்களுக்கு பதிலாக கற்களை திணிக்கிறார்கள். சூத்திரங்களுக்கு பதிலாக உரிமை கோசங்களை நமது வாய்களில் திணிக்கிறார்கள். எங்களுடைய கைகளிலும் இப்படித்தான் துண்டுப்பிரசுரங்களும் நட்சத்திர கொடிகளும் திணிக்கப்பட்டன. உலகின் எல்லா ஒடுக்கப்பட்ட இனங்களிலும் இவ்வாறுதான் அரசியல் திணிக்கப்படுகிறது.
ஷா ஃபைசல் என்ற மாணவரை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் இந்திய அளவில் அடைபெற்ற ஐ.ஏ.எஸ் தேர்வில் தேசிய அளவில் முதல் இடம்பெற்ற காஷ்மீர் மாணவன் . வருடந்தோறும் நடக்கும் மிகக்கடினமான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதல் நூறு இடங்களில் பத்து காஷ்மீரிகள் கண்டிப்பாக இடம்பிடிக்கிறார்கள்.. ரத்தங்களும் சதையுமான இடத்திலிருந்து கொண்டு அவர்கள் கல்வியில் செய்யும் சாதனைகள் எல்லாம் மறைக்கடிக்கப்படுகின்றன.
நன்றாக உற்று நோக்கினால் தெரியும்  காலிப் அப்சலின் வெற்றி செய்தியுடன் கூடவே வட இந்திய குடுமி ஊடகங்கள் மெல்லிய அறிவுரை ஒன்றையும் வழங்குகின்றன இலவசமாக , அதாவது நீங்கள் அரசியலை விட்டுவிடுங்கள்!. ஆளும் தகுதியை எங்களிடம் கொடுத்து விடுங்கள் அப்சல் குருவினை போன்று அரசியல் செய்வது எங்களுடைய கூட்டு மனசாட்சிக்கு உகந்ததில்லை!. கல்வி கற்று உங்களுடைய குடும்பத்தை மட்டும் கவனிக்கவும், என்று புத்திமதி பேசிக்கொண்டிருக்கின்றன அவை.
அது எப்படி முடியும்? நீங்கள் படுகொலை செய்த ரத்தச்சுவடுகளிளிருந்தும், கற்பழிக்கப்பட்ட பெண்களின் கருப்பைகளிளிருந்தும், ஆப்பிள் தோட்டங்களின் ரகசியங்களிளிருந்தும், இதிய நீதிமன்றங்களின் அயோக்கிய தனங்களில் இருந்தும் புத்தகங்களையும், பட்டங்களையும் வீசிவிட்டு கற்களை சேகரித்து வைக்கும் ஒரு அரசியல் பிறக்கவே செய்யும் அது ஒருநாள் அந்த மக்களுக்கு விடுதலை வாங்கிக்கொடுக்கும்.
- சஹீத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக