Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 9 ஜனவரி, 2016

அனைத்து கல்வி நிலையங்களையும் தன்வசப்படுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிடுகிறது – பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியர்


அனைத்து கல்வி நிலையங்களையும் தன்வசப்படுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிடுகிறது – பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியர்

பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியரான சந்தீப் பாண்டே பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஐ.ஐ.டி யில் இரண்டரை வருடங்களாக வருகை பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
பல்கலைகழகத்தில் பணியாற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் தன்னை
பல்கலைக்கழகத்தை விட்டு விரட்ட முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தன்னை நச்சலைட் எனவும் சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர் எனவும் தன் மீது குற்றம் சாட்டப்பட்டது என்றும் தன்னை பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற்றி விடவேண்டும் என்று முன்பே அவர்கள் முடிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனவரி 6 ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டதாக முறையான தகவல் அவரை வந்து சேர்ந்தது எனவும் ஆனால் அதற்கான சரியான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தன் மீது வைக்கப்படும் எந்த ஒரு குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரமில்லை என்று கூறிய அவர் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தன்னை நீக்குவதற்கான எந்த காரணங்களும் முறையாக குறிப்பிடவில்லை என்றும் கூறியுள்ளார். அப்படி அவர்கள் குறிப்பிட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
விவசாயிகள் தற்கொலை, நாட்டு மக்களின் வறுமை நிலை பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற தலைப்புகள் குறித்து தான் பல்கலைக்கழகத்தில் விவாதிப்பதாலும் தங்கள் உரிமைக்குபோராடும் சிறு விவசாயிகளுடன் சேர்ந்து போராடுவதாலும் நில அபகரிப்பு சட்டத்தை எதிர்த்ததாலும் தன்னை பல்கலைக்கழகத்தில்இருந்து அகற்ற நினைகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
தனது இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மாணவர்களிடம் வலதுசாரி சிந்தனைகளை விதைப்பதில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களுக்கு சிரமமாக இருப்பதாகவும் தான் இல்லாவிட்டால் மாணவர்கள் மத்தியில் தங்களுக்கு அதிக ஆதரவு திரட்ட முடியும் என்பதாலும் இத்தகைய முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நம் கல்விக்கூடங்கள் மீது ஒருவித கருத்தியல் போர் நடத்தப்படுகிறது என்று கூறிய அவர் ஆர்.எஸ்.எஸ். தங்கள் கொள்கைகளை மாணவர்களிடம் பரப்ப அனைத்து கல்விக்கூடங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது என்று கூறியுள்ளார். தங்கள் கொள்கைகளை பரப்ப கொஞ்சம் கூட தகுதியற்ற நபர்கள் உயர்பதவிகளில் அமர்த்தப்படுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. மேலும் கல்வியின் தரம் இன்று மிக மோசமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக