Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 20 ஜனவரி, 2016

நல்ல தமிழ் எழுதுவோம் – மொழிப்பிழை நீக்கும் வழித்துணை நூல்


நல்ல தமிழ் எழுதுவோம் – மொழிப்பிழை நீக்கும் வழித்துணை நூல்

எழுத்தாளர் அதிரை அஹ்மது அவர்களால் எழுதப்பட்ட “நல்ல தமிழ் எழுதுவோம் – மொழிப்பிழை நீக்கும் வழித்துணை நூல்” என்ற  புத்தகத்தை இலக்கியச்சோலை பதிப்பகம் சார்பாக இன்று வெளியிடும் நிகழ்ச்சி அதிரை ALM பள்ளியில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அதிரை முஹம்மது தம்பி அவர்கள் வரவேற்புரையாற்ற, புதிய விடியல் பத்திரிகையின் இணை ஆசிரியர் ரியாஸ் அவர்கள் முன்னுரை வழங்க அதனை தொடர்ந்து அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் தமிழ் ஆசிரியர் முனைவர் அஜ்முத்தீன் அவர்கள் புத்தகம் குறித்த மதிப்புரை வழங்கினார். தொடர்ந்து புத்தகத்தின் ஆசிரியர் அதிரை அஹ்மத் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

அதிரை அஹ்மத் அவர்கள் புத்தகத்தை வெளியிட சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ஜனாப்.ஹாஜா முஹைதீன் அவர்கள்  பெற்றுக்கொண்டார்கள். இரண்டாவது பிரதியை புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அவர்கள் வெளியிட காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் தமிழ் ஆசிரியர் முனைவர் அஜ்முத்தீன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் மாணவர்கள், பெரியவர்கள், இளம் பத்திரிக்கையாளர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக