Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 6 ஜனவரி, 2016

நமதூர் TNTJ துபை மண்டல புதிய நிர்வாகிகள் ...



ஏக நாயன் அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) லெப்பைக்குடிக்காடு ஊர் கூட்டமைப்பின் ஜனவரி மாத ஆலோசனைக் கூட்டம் துபை மண்டல TNTJ தலைமை மர்கஸில் கடந்த 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு 06:30 மணிக்கு தொடங்கி 08:30 மணி வரை இனிதே நடைபெற்றது.

நிர்வாக தேர்வுடன் கூடிய இந்த அமர்வில் ஏராளமான கொள்கைச் சகோதரர்கள் கலந்துகொண்டு இந்தமாத அமர்வைச் சிறப்பித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்!


தொடக்கமாக சகோதரர் P.A. முஹையத்தீன் அவர்கள்  மார்க்க சொற்பொழிவாற்றினார்கள்.
அடுத்ததாக சகோதரர் P.S.முஹம்மது ஹிதாயதுல்லாஹ் அவர்கள் கடந்த டிசம்பர் மாத செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார்.
கடந்த மாதத்தில் தாயகத்திலும், அமீரகத்திலும் நமதூர் சார்பாக நடைபெற்ற சன்மார்க்க பணிகளையும், பல்வேறுவகை சமுதாய பணிகளையும் விவரித்து கூறினார்.

குறிப்பாக இன்ஷாஅல்லாஹ் ஜனவரி - 31 2016 அன்று திருச்சியில் நடைபெறயுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்காக தற்போது நமது மாவட்டத்தில் மேற்க்கொள்ளப்படும் பல்வேறு பிரச்சார வழிமுறைகளை விவரித்தார்.
அடுத்ததாக சகோதரர் P.M. சையது பாஷா கடந்த 2015 ஆம் ஆண்டின் வட்டி இல்லா கடன் திட்ட வரவு,செலவு கணக்குகளை வாசித்து காட்டினார்.
அடுத்ததாக சகோதரர் A.R.சம்சுதீன் கடந்த 2015 ஆம் ஆண்டின் வரவு,செலவு கணக்குகளை வாசித்து காட்டினார்.
அடுத்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல பொருளாளர் சகோதரர் சாஜிதுர் ரஹ்மான் முன்னிலையில் நமதூர் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.


இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமன‌தாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1)  T.M. பஷீர் அஹமது - 050 4246021

2)  P.A. முஹையத்தீன் - 050 4647429

3)  N.A. முஹம்மது ரஃபி - 050 5789921
இன்ஷா அல்லாஹ் புதிய நிர்வாகிகள் அடுத்த இரண்டு ஆண்டுகள்  நமது ஜமாஅத்தை வழிநடத்துவார்கள்.

கொள்கை சகோதரர்கள் புதிய நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாக உறுதி அளித்தனர்.
இம்மாத அமர்வின் நோக்கத்திலும், செயல்பாட்டிலும் திருப்தியும், புத்துணர்வும் பெற்றவர்களாக சகோதரர்கள் அமர்வை நிறைவு செய்தனர். 

அல்லாஹு அக்பர்! 

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்...

நன்றி முகநூலிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக