Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 5 ஜனவரி, 2016

மறக்கடிக்கப்பட்ட மாமனிதர்! – கேப்டன் M.K.M. அமீர் ஹம்ஸா வாழ்க்கைக் குறிப்பு


மறக்கடிக்கப்பட்ட மாமனிதர்! – கேப்டன் M.K.M. அமீர் ஹம்ஸா வாழ்க்கைக் குறிப்பு

சுதந்திரப் போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் துவங்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்த முதல் இந்தியர் மற்றும் முதல் தமிழர். சொந்த ஊர் மேலக்கொடுமலூர்.
போராட்டங்களுக்காக தன் வாழ்வை மட்டுமல்ல; சொத்து, குடும்பம் என அனைத்தையும் அர்ப்பணித்த மாபெரும் காவிய நாயகன் இன்று யாருக்கும் தெரியமாலேயே இறைவனடி சேர்ந்தார்.
அவருக்கு வயது 94.

அன்னாரது ஜனாஸா இன்று 04-01-16 மாலை 4 மணிக்கு (அஸர் தொழுகைக்குப் பின்) நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இடம்: சென்னை தங்க சாலை, வீராசாமி தெரு, ஏழு கிணறு, சென்னை-1.
அவரது குடும்பத்திற்காக பிரார்த்திப்போம்.
பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட நேதாஜியின் ‘இளமையின் கனவு’, ‘நேர்வழி’ ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21வது வயதில் இந்திய தேசிய இராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் எம்.கே.எம். அமீர் ஹம்ஸா.
பிரிட்டீஷாரால் நாடு கடத்தப்பட்ட வங்கத்தைச் சார்ந்த ராஷ்பிஹாரி போஸ் ஆரம்பித்த ‘இந்திய சுதந்திர லீக்’ அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார். பின்னர் நேதாஜி புரட்சிப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர்.
1943 – இல் நேதாஜி ரங்கூனுக்கு முதலில் சென்றபோது நடந்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் போராட்ட நிதிக்காக ஏலம் விட்டனர். அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தார்.
இந்திய தேசிய இராணுவத்தில் அமீர் ஹம்ஸா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரின் தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டி வைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச் செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சி பொங்க எடுத்துரைத்தார்.
நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரின் தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார்.
23-01-1944 – இல் நேதாஜியின் 47 – வது பிறந்த நாளின் போது ஒரு லட்சத்துக்கான காசோலையை இவர் நேதாஜிடம் வழங்கியதோடு, தனது வைர மோதிரத்தை நேதாஜிக்கு பிறந்த நாள் பரிசாக அணிவித்தார். அமீர் ஹம்ஸாவுக்கும் அவரின் தந்தையாருக்கும் நேதாஜி புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார்.
ஆதாரம்: தினமணி சுதந்திர பொன் விழா மலர், பக்கம் 69

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக