புதிய வாக்காளர்களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய பிளாஸ்டிக் வாக்காளர் அடையாளஅட்டைகளை கலெக்டர் தரேஸ்அகமது வழங்கினார்.
இந்தியத் தேர்தல்ஆணையம், வாக்காளர்களுக்கு வண்ணப் புகைப்படத்துடன் கூடிய பிளாஸ்டிக் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2014 பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக 2014 ஜனவரி 11ம்தேதி முதல் ஏப்ரல் மாதம் 5ம்தேதிவரை நடைபெற்ற தொடர் திருத்தப் பணியின்போது பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் பெயர் சேர்க்கப்பட்ட 7,183 வாக்காளர்களுக்கும், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் பெயர் சேர்க்கப்பட்ட 5,661 வாக்காளர்களுக்கு என மொத்தம் 12,844 பேருக்கு தற்போது வாக்காளர் வண்ணப் புகைப்பட அடையாளஅட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வண்ண புகைப்படத் துடன்கூடிய பிளாஸ்டிக் அடையாள அட்டை வழங்கும் பணியினை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தரேஸ்அகமது நேற்று தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கலெக்டர் 15 வாக்காளர்களுக்கு வண்ண புகைப்படத்துடன்கூடிய பிளாஸ்டிக் அடையாள அட்டையை வழங்கினார். பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி, குன்னம் சட்டமன்றத் தொகுதியில் பெயர் சேர்க்கப்பட்ட மொத்தம் 12,844 வாக்காளர்களுக்கும், சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலைஅலுவலர்கள் அடையாள அட்டையினை வழங்குவார்கள்.
வாக்காளர்களுக்கு வண்ணப் புகைப்படத்துடன் கூடிய பிளாஸ்டிக் அடையாள அட்டையானது இனிமேல் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படும் வாக்காளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஏற்கனவே கருப்புவெள்ளையில் லேமினேசன் செய்து வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகளை வைத்துள்ள வாக்காளர்கள் அதனையே பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் யாரும் புதிய கலர்அடையாளஅட்டை கோரி விண்ணப்பிக்க தேவையில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக