மருத்துவ துறையில் சிகிச்சைக்காக ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மனிதனின் உடலுக்குள் ஊடுருவி சிகிச்சை வழங்கும் வகையில் சிறிய ஸ்க்ரூ அளவேயுள்ள ரோபா ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த குட்டி ரோபாட், ஜெல் போன்ற ஒரு கெட்டித் திரவத்தின் மூலமாக நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்படும், இது ஒரு செல் போன்றே உடலுக்குள் இயங்க ஆரம்பிக்கும்.
நிக்கல் மற்றும் சிலிக்கா ஆகிய தாதுக்களால் உருவாக்கப்பட்டுள்ள 400 நானோமீட்டர் விட்டமே உள்ள இந்த ரோபாட்டின் உள்ளே, மருந்து வைக்கப்படும் இழையானது, 70 நானோமீட்டர் அளவேயுள்ளது. அதாவது, மனிதனின் இரத்த செல்லை விடவும் 100 மடங்கு சிறிதானது.
உடலுக்குள் செலுத்தப்படும் இந்த ரோபோவை, அடர்த்தி குறைந்த காந்தப் புலங்களால் வெளியில் இருந்து கட்டுப்படுத்த முடியும் என்றும், தற்போது, தண்ணீரில் இயக்கப்பட்டு வெற்றியடைந்துள்ள இந்த முயற்சியை, மனித உடலுக்குள் செலுத்தி பரிசோதனை செய்யவுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குட்டி ரோபோவை உடலில் செலுத்த முடிந்தால், நுண்ணிய உடல் பாகங்களுக்குத் தேவைப்படும் ரேடியோ கதிர்வீச்சுக்களையும் வேறு மருந்துகளையும், துல்லியமாக வழங்க முடியும் என்று மருத்துவ விஞ்னானிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக