Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 18 செப்டம்பர், 2014

கஷ்மீரில் வெள்ள நீரால் நோய் பரவும் அபாயம்!

கஷ்மீர் மாநிலத்தில் கடும் மழையால் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்போது நீர் மூலம் பரவும் நோய்கள் பரவக்கூடும் என்றும் அதனை சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கஷ்மீர் மாநிலத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து இதுவரை 1.80 லட்சத்துக்கு அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளத்தால் இதுவரை 480 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த சில தினங்களாக வெள்ள நீரின் கடுமை குறைந்து வருகிறது என்றாலும், இந்தியாவின் ஜம்மு கஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள பல பகுதிகள் வெள்ள நீர்
நிரம்பிய நிலையிலேயே உள்ளன. அங்கு தொற்றுநோய் பரவக்கூடும் என்ற அச்சங்கள் எழுந்துள்ளன.

உயிரிழந்த விலங்குகளின் உடல்கள், அழுகிய காய்கறிகள், நிரம்பி வழியும் வடிகால்கள் மற்றும் பிற அழுக்குகளால் அங்கு துர்நாற்றம் அதிகரித்துள்ளதாக கஷ்மீரிலிருந்து வரும் அறிக்கைகள் தெரிவித்துள்ளன. அங்குள்ள சுகாதார நிலைமையை மேற்பார்வையிடுவதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஞாயிறன்று கஷ்மீருக்கு விஜயம் மேற்கொண்டார்.
அம்மாநிலத்தின் சுகாதார துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய சுகாதார துறை அளிக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இன்னமும் வெள்ள நீரில் பல பகுதிகள் மூழ்கியுள்ளயதாகவும், வயிற்றுப்போக்கு மற்றும் தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்குவதில்தான் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தேசிய பேரிடர் படை இயக்குனர் ஜெனரல் ஓபி சிங், செய்தி நிறுவனம் ஒன்றிடம்
தெரிவித்துள்ளார்.

தொற்று நோய் ஒன்று பரவிவிடுமோ என்பதே தற்போதைய மிக பெரிய கவலை என்றும் தேசிய பேரிடர் படை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக