Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

நமதூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியும் ! இனி நமது இருசமூகத்தின் பொறுப்பும் ...

நமதூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியும் ! இனி நமது இருசமூகத்தின் பொறுப்பும் ...

இந்திய சமூகத்தில் விழாக்களுக்கு பஞ்சமில்லை எனலாம். இந்த அளவில் இந்து , முஸ்லிம் கிறிஸ்தவர்களிடையே அவரவர் பண்டிகையின் போது பரஸ்பரம் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது இந்நாடும் குறிப்பாக நமதூரும். ஆனால் , ஒருசில விழாக்கள் வந்தாலே இந்திய மக்களிடம் கலக்கமும் அச்சமும் ஏற்படுவதுண்டு. ஹிந்துத்துவ மதவாதிகளால் உருவாக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி , தேவி பூஜை போன்ற விழாக்கள் , இந்துக்களை ஒருங்கிணைக்கிறோம் என்கிற போர்வையில்
மதமோதல்களை அரை நூற்றாண்டு காலமாக சங்க பரிவாரங்கள் ஏற்படுத்தி இந்து , முஸ்லிம் சமூகங்களிடையே உறவில் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விட்டனர்.

தமிழகத்தை பொருத்தமட்டில் ஒரு நீண்ட திராவிட பாரம்பரியம் இருக்கின்றது. பெரியார் , அண்ணா போன்றோரின் பொதுவுடைமை கொள்கை பிரச்சாரத்தின் விளைவு பாசிச வேரை இம்மண்ணில் வளரவிடவில்லை. காலம் கடந்தது . பொதுவுடைமை கொள்கை புதைகுழியில் புதைக்கப்பட்டது . விளைவு , திராவிட மண்ணில் 1998 களுக்கு பின்பு தீவிர மதவாத கொள்கைளை தமிழக மக்களிடையே ஹிந்து முன்னணி போன்ற அமைப்புகள் உருவாக்கி விட்டன.

விநாயகர் ஊர்வலம் தமிழகத்தில் தொடங்கப்பட்ட காலம் தொட்டு இன்றுவரை பல கலவரங்களை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான சொத்துக்களையும் உயிர்களையும் பலிகொண்டது. விநாயகர் ஊர்வலம் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் முஸ்லி்ம்கள் திட்டமிட்டு அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். முஸ்லிம் இயக்கங்களின் வருகையும் முஸ்லிம்களின் எழுச்சியும் காவிகும்பல்களை விரட்டியடித்தது. இப்பொழுது உள்ள சூழ்நிலையில் விநாயகர் ஊர்வலத்தை வைத்துதான் பா.ஜ.க , ஆர்.எஸ்.எஸ் கும்பலால் தங்களின் இருப்பை உறுதி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

தமிழகத்தில் எப்படியாவது ஒரு அரசியல் சக்தியாக உருவாகிவிடலாம் என்ற கனவில் தான் விநாயகர் ஊர்வலம் நடத்த ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு வருடமும் புதிய புதிய இடங்களை தேர்வு செய்து எப்படியாவது கலவரம் செய்து அதில் அரசியல் லாபம் அடைந்து விடலாம் என்று பாசிச கும்பல் எண்ணுகிறது.

கடந்த ஆகஸ்ட் 29.08.2014 அன்று நமதூரில் விநாயகர் சதுர்த்தி வழக்கம் போல் நடைபெற்றன. நமதூர் பெரம்பலூர் மாவட்டத்தில் பல ஊர்களுக்கு மத்தியில் மனித நேயத்திற்கு பெயர்போன ஊர். அன்று இந்துக்களும் , முஸ்லிம்களும் மாமன் மச்சான்களாக , அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வந்தனர் . இப்பொழுதும் வாழ்ந்து வருகின்றனர் இனியும் அப்படி இனக்கத்தோடு வாழவேண்டும் என்பதுதான் நமதூரில் உள்ள ஒட்டுமொத்த  மக்களின் என்னங்கள் கூட, ஆனால் இப்படி வாழ்ந்த காலங்கள் போய் சில வருடங்களாக ஒரு சிலர் வந்தோரிகளால்  காவிமயம் புகுக்கப்பட்டுவருகிறது என்பதுதான் வேதனைக்குரியது.

சம்பவம் 1
வழக்கம் போல் அன்றும் நமதூரில் விநாயகர் சதுர்த்தி நடைபெற்றன. அதில் இறுதியாக மேற்கு நடுத்தொருவில் அதாவது புன்னகை ஜூவல்லரி மேற்கு பக்கம் உள்ள சந்து வழியாக மேற்கு தெற்கு தெருவில் உள்ள ஆசாரிகள் வீட்டு வரை ஊர்வளம் கொண்டு செல்வது வழக்கம். ஆனால் சர்ச்சைக்குள்ளான இடம் நடுத்தெருவில் உள்ள கோபால் செட்டியார் வீட்டு வரை ஊர்வளம் கொண்டு செல்ல வேண்டும் என விழாக்குழுவினர்களால் காவல் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அங்கு இருந்த நமதூர் மக்கள் காவல் துறையிடம் சார் வழக்கமாக கொண்டு செல்லும் பாதையில் கொண்டு செல்லுங்கள். புதியதாக ஒரு இடத்திற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தனர். ஆனால் விழாக்குழுவில் இருந்த ஒரு சில வந்தோரிகள் சார் வருசாவருசம் கோபால் செட்டியார் வீட்டு வரைக்கும் சாமி கொண்டு செல்வது வழக்கம் என கூறினார். அங்கு இருந்த ஒரு சில காவல் துறையினர் ஆமா சார் கடந்த வருசம் போனது என வாக்குமூலம் கொடுத்தனர்.


இந்த வார்த்தைதான் இங்கு கவணிக்க வேண்டிய முக்கியமானவை . அங்கு இருந்த நமது பேரூராட்சி துணை தலைவர் இடம் காவல் துறை இப்படி விசாரிக்கின்றது. என்னவென்றால் சார் இங்கு போவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டனர். அதற்கு நமது து.தலைவர் என்ன சொல்லி இருக்க வேண்டும். போலாம் அல்லது வேனாம் என கூறியிருக்க வேண்டும். ஆனால் நமது பேரூராட்சி துணை தலைவரின் பதில் நம்மையும் நமதூரின் சமூக ஒற்றுமைக்கு விடப்பட்ட சவாலாகவே கருத முடிகின்றது. அவர் திரு வாய்யிலிருந்து மலர்ந்த வார்த்தை என்ன வெனில் எங்குவேனும் ஆனால் செல்லலாம் எந்த பிரச்சனையும் இல்லை என ஒரு முக்கிய பதவியில் உள்ளவர் கூறியது கண்டனத்திற்குறியது.

அப்புரம் காவல் துறை யார் அந்த வீட்டுக்காரர் என வினவ அவர் இல்ல சார் என கூறினார்கள். உடனே அங்கு இருந்த முத்து LAB கோபால் செட்டியார் வீட்டிற்கு போய் அவரை அழைத்து வந்தார். இங்கு தான் நாம் கவணிக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் அதாவது கோபால் செட்டியார் அவரே அன்றைய தினம் தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். வாழை அடி வாழையாக நமதூரில் உள்ள கோபால் செட்டியார் அவர்கள் ஊர் ஒற்றுமையை கருதி இது போன்ற சம்பவங்களை தவிர்த்தே வந்து உள்ளார் என கடந்த கால அவருடைய செயல்பாடுகள் நமக்கு நன்றாக தெரியும்.

ஆனால் வந்தோரிகளாக உள்ள ஒரு சில கருப்பு ஆடுகள் நமதூர் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.

கோபால் செட்டியார் அவர்கள் கலக்கத்தில் வந்தார். காவல் துறையினர் செட்டியார்யிடம் கேட்டனர். என்னங்க கடந்த வருடம் உங்க வீட்டிற்கு சாமி ஊர்வலம் வந்ததா ? அதற்கு அவர் கூறிய பதில் தான் நமதூர் மக்கள் அவர் மீது வைத்து இருந்த நம்பிக்கையின் அடையாளம் எனலாம். இவர்கள் போன்றோர் இருப்பதால் தான் நமதூரில் இரண்டு சமூகம் ஒற்றுமையாக இருக்கிறது.

கடந்த 3 வருடமாக வருவதில்லை என கூறினார். உடனடியாக காவல் துறை என்னபா வீட்டுக்காரறே வரவில்லை என கூறுகின்றார் அப்புரம் உங்களுக்கு என்னையா ? என ஒரு வகையில் பிரச்சனை முடிந்தது.

இந்த விசயத்தில் நமக்கு உள்ள சில சந்தேகங்கள்

விழாக்குழுவில் உள்ள வந்தோரிகள் ஏன் விடாப்பிடியாக அங்கு போக வேணும் என கூறுகின்றனர். உள்ளுரில் உள்ளவர்கள் அமைதியாக இருக்கையில் இவர்கள் மட்டும் ஏன் அப்படி செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு என்ன லாபம்.

( சாதி மத மெனபாறோம்
உயிர் ஜென்ம இத்தோசத்தின் ஏய்திரராயின்
வேதியராயிராயின் ஒன்றோ
அன்று வேறுகுளத்திரராயினும் ஒன்றோ   - என பாடினான் பாரதி )

இது நாள் வரைக்கும் நமதூரில் உள்ள இரண்டு சமூகமும் பாரதி சொன்ன இந்த வார்த்தைக்கு ஒப்பாக தான் வாழ்ந்து வந்தனர் என்பது தான் உண்மை.

ஒரு சில காவல் துறையினர் ஏன் அப்படி கூறினார்கள். (இதில் என்ன வேடிக்கை என்றால் வருடா வருடம் காவல் துறைசார்பாக அனைத்தையும் வீடியோ எடுக்கப்படுகிறது. அதை பார்த்தால் உண்மை எது வென்று ஊர்ஜிதம் ஆகிவிடும்)

இது தான் முக்கியமான விசயம். ஏன் பேரூராட்சி து.தலைவர் அப்படி கூற வேண்டும். ஏற்கனவே இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டு. ஒரு வகையில் இவராலே இரண்டு ஜமாத் பிரிந்ததாக கூறப்படுகின்றது. இது வெல்லாமல் வாழை அடி வாழையாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இரண்டு சமூகத்திற்கு இடையில் பிளவை உண்டு பண்ணும் வார்த்தையாகவே அது கருத முடிகிறது. எதை தின்றேனும் பித்தம் தெளியாதா என்பது போல எதையாவது ஊரில் செய்து தனது பதவியை தக்கவைத்து கொள்ள இவர் முயற்ச்சி செய்கின்றார் என்பது இதன் மூலம் தெரிகின்றது. இனியும் இவர் விசயத்தில் ஜமாத் மவ்வுனமாக இருந்தால் மக்கள் பதில் செல்ல வேண்டும் குறிப்பாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு பொறுப்பு அதிகம் உள்ளது. தீன் இயக்கம் போன்றவர்களுக்கு கூடுதல் பெறுப்பு உண்டு.  

நமது ஆசிரியர் குழுவின் பரிந்துரை

1.நமதூரில் உள்ள ஜமாத்துக்கள் மற்றும் இயக்கங்களுக்கு முக்கிய பொறுப்புண்டு. அவர்கள் களத்தில் முன்னின்று அமைதிக்காக பணியாற்ற வேண்டும்.

2.சந்திப்பு ஒன்றுதான் நமக்கு மீச்சியை தரும் என்பது உண்மை. ஆங்கிலத்தில் ஒரு பலமொழி கூறுவார்கள்
OUT OF SITE . OUT OF MIND
பார்க்க வில்லை என்றால் நம்முடைய மனதிலே ஒரு வரை நிறுத்தி வைத்திருக்கமுடியாது.

3.இனி யாரும் நமதூரில் நடைபெறும் சம்பவங்களைப் பற்றி கண்டு காணாமல் இருக்க முடியாது. ஏனெனில் நமதூரை குறித்து சிந்திக்க நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

4.மத விரோதத்திற்கான பரிகாரம் மத விரோதம் அல்ல. சமூக மாற்றமே அதற்கு தீர்வு.

சம்பவம் – 2

“ இந்திய தேசத்தின் முஸ்லிமாக இருப்பது தான் இப்பொழுது ரிஸ்க்கான விஷயம் ” வேதனையைப் பகிர்ந்து கொள்கிறார் பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் . ஜனவரி 26 , ஆகஸ்ட் 15 , டிசம்பர் 6 களில் தங்கள் வீட்டு ஆண்களை வெளியே நடமாட விடுவதற்கே முஸ்லிம் பெண்களுக்குள் ஒரு பயம்.
ஆனந்த விகடன் 20.08.2008
இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு மேலே கோடிட்டு காட்டியுள்ள வரிகளே சான்று.  

கடந்த 31.08.2014 அன்று மாலை 6 மணியளவில் பெண்ணக்கோணத்தில் இருந்து விநாயகர் ஊர்வலம் நமதூர் உள்ளே எடுத்து வர முயன்றனர். இதை அறிந்த நமதூர் மக்கள் உடனடியாக காவல் துரையை தொடர்பு கொண்டு சம்பவத்தை தொரியப்படுத்தினர். இதில் கடந்த ஆண்டு இது போல தான் எந்த ஒரு முன்னனுமதியும் பெறாமல் ஊர்வளத்தை எடுத்து வந்தனர். பிலால் பள்ளி வரைக்கும். அப்போதே உளவுத்துரை , காவல் துறையை தொடர்பு கொண்ட நமதூரில் உள்ள ஒரு சில இயக்கங்கள் அடுத்த முறை இது போல நடைபெறாமல் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என வாக்குறுதி அளித்ததாக ஒரு சகோதரர் தொரிவித்தார்.

இதையேதான் ரஷ்யா மற்றும் பிரிட்டனுக்கு இரட்டை உளவாளியாக செயல்பட்டு ரஷ்ய உளவுத்துயைால் மர்மமான முறையில் கொல்லப்பட்ட அலெக்ஸாண்டர் லித்வினின்கோ இவ்வாறு குறிப்பிட்டார். ” உலகில் நடைபெறும் எந்த தீவிரவாத செயலானாலும் உளவுத்துறைக்கு தெரியாமலோ அல்லது உளவுத்துறையின் தூண்டுதல் இல்லாமலோ அல்லது அறிவுக்கு எட்டாமலோ நடைபெறுவதில்லை.” என்றார்.

அதுக்கப்புரம் காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்தது. ஊர்வளத்தை சன்னியாஸ் கோவிலிலோ நிறுத்தினர். உங்களுக்கு லெப்பைக்குடிக்காடு உள்ளே செல்ல அனுமதி இல்லை என காவல் துறை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறைக்கும் விழாக்குழுவினர்க்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றன. கிட்டதட்ட இரவு 12 மணிவரை பதட்டமாகவே காணப்பட்டன. இதில் நாங்கள் லெப்பைக்குடிக்காட்டின் வலியாகதான் சிலையை எடுத்து செல்லுவோம் என பிடிவாதமாக இருந்தனர்.

சரி , எடுத்து செல்லுங்கள் ஆனால் ஒரு வண்டியில் எடுத்து செல்ல அனுமதிக்கிறோம். கூட்டமாக எடுத்து செல்ல அனுமதி இல்லை என காவல் துறை மூலம் தெரியப்படுத்தப்பட்டது. இதற்கு விழா குழுவினர் இதை ஏற்க மருத்ததினால் மீண்டும் பதட்டமாகவே காணப்பட்டன. இவர்கள் மட்டும் இல்லை கீழக்குடிகாட்டில் உள்ளவர்களும் இதையே தெரிவித்தனர்.

இந்த விசயத்தில் காவல் துறையை பாராட்டியே வேண்டும். பின்பு அடுத்த முறை முறையாக அனுமதி எழுதி கொடுங்க உரிய முறையில் பரிசிலிக்கின்றோம் என விழாக்குழுவினரிடம் தெரியப்படுத்தினர்.

இனி நமது பொறுப்பு . அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்

( நம்பிக்கையாளர்களே ! ) நீங்கள் தான் , மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள் ( ஏனென்றால் ) நீங்கள் ( மனிதர்களை ) நன்மையான காரியங்களை(ச்செய்யும்படி) ஏவி , பாவமான காரியங்களிலிருந்து ( அவர்களை ) விலக்கி , மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்டவர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர். 
அல்குர்ஆன் 3:110

கள தொகுப்பு
நமது ஆசிரியர் குழு

2 கருத்துகள்:

  1. நான் அவ்வாறு சொல்ல வில்லை என பேரூராட்சி தலைவர் மறுக்கிறார்

    பதிலளிநீக்கு
  2. இவரால் தான் ஜமாஅத் பிரிந்தது என்றால் ஜாமத்தில் உள்ளவர்களுக்கு சிந்திக்க கூடிய அறிவு இல்லையா

    பதிலளிநீக்கு