கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஸில்ஜா ராஜ் என்ற இந்து மாணவி கேரளாவை சேர்ந்த அஸ்கர் என்ற முஸ்லிம் வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டவுடன் இதற்கு பெயர் லவ் ஜிஹாத் என்று கேரளா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஊடகங்களில் விவாத பொருளாக்கி சர்ச்சையை ஏற்படுத்திய இந்துத்துவா இயக்கங்களே....இந்த பதிவின் புகைப்படத்தில் வெளியிடப்பட்டுள்ள முதல் மூன்று போட்டோவில் முஸ்லிம் மாணவிகள் இந்து மணமகனை திருமணம் செய்து கொண்டுள்ளார்களே...
இதற்கு பெயர் என்ன ? இந்துத்துவா ஜிஹாதா ?
அதிலும் நான்காவதாக உள்ள போட்டோ முஸ்லிம் மணமகன் இந்து பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக இந்துவாக மதம் மாறி திருமணம் செய்துள்ளார்.
இதற்கு பெய என்ன ? இந்துத்துவா பெண் ஜிஹாதா ?
காதல் மீது கொண்ட மோகத்தின் காரணமாக இந்து பெண் முஸ்லிமாகவும், முஸ்லிம் பெண் இந்துவாகவும், இந்து பெண் கிறித்தவளாகவும், கிறித்தவ பெண் முஸ்லிமாகவும் மாறுகிறார்கள்.
அதேபோல் இந்து மதத்திலேயே பிராமண பெண் தலித்தையும், தலித் பெண் பிராமண மாணவனையும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அதற்காக பிராமண ஜிஹாத், தலித் ஜிஹாத் என்று பெயர் வைத்து விட முடியுமா ?
காதல் மோகத்தின் காரணமாக வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளை எப்படியாவது மதத்துடன் முடிச்சு போட்டு மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்துத்துவாவின் ஒரே குறிக்கோளாகும்.
தமிழ் சமுதாயம் இந்துத்துவாவினரை வேரோடு கிள்ளி எறிந்தால் தான் நம் மனித சமுதாயம் தலை தூக்கும்.
அதேபோல் இதுமாதிரியான காதல் விவகாரத்தை தடுக்க விரும்பினால் அது பெற்றோரின் முறையான வளர்ப்பிலேயே இருக்கிறது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக