புதுடெல்லி: “இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவுக்காக வாழ்ந்து,இந்தியாவுக்காக உயிர் கொடுப்பார்கள். அல் காய்தா இயக்கத்தின் பேச்சைக்கேட்டு அவர்கள் நடந்துகொள்ள மாட்டார்கள்’ என்று நரேந்திர மோடி கூறினார்.
இதுகுறித்து, சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு அல் காய்தா இயக்கத்தினர் அநீதி இழைத்துள்ளனர்.
எனவே, அவர்களின் பேச்சுக்கு ஏற்றவாறு இந்திய முஸ்லிம்கள்
நடந்துகொள்வார்கள் என்று எவரேனும் கருதினால், அது அவர்களின் கற்பனையே.
நடந்துகொள்வார்கள் என்று எவரேனும் கருதினால், அது அவர்களின் கற்பனையே.
இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, மறைவார்கள். நாட்டுக்கு கெடுதல் ஏற்படுவதை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்’ என்று மோடி கூறினார்.அந்தப் பேட்டியின்போது, கஷ்மீரிலும், குஜராத்திலும் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதாகவும், அவர்களை விடுவிக்க இந்தியாவிலும், தெற்கு ஆசியாவிலும் அல் காய்தாவின் புதிய கிளையைத் தொடங்குவதாகவும் அந்த இயக்கத்தின் தலைவர் விடியோ உரையில் பேசியிருப்பது குறித்து மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், “பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் உள்ள 17 கோடி முஸ்லிம்களில் ஒரு சிலரே அல் காய்தாவில் இருப்பதாகவோ அல்லது எவருமே இல்லை என்றோ தெரிகிறது. அல் காய்தாவின் தாக்கத்துக்கு அவர்கள் ஆளாகாமல் இருப்பதற்கான காரணம் என்ன?’ என்றும் அவரிடம் கேட்கப்பட்டது.அதற்கு மோடி பதிலளிக்கையில், ’இதுபற்றி மத ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ ஆராய்ந்து கூறுவதற்கு உரிய நபர் நானல்ல. ஆனால், இந்த உலகத்தில் மனிதநேயம் காக்கப்பட வேண்டுமா?
வேண்டாமா?, மனிதநேயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்றிணைவதா? வேண்டாமா? என்பதே நம்முன் உள்ள கேள்வி.
வேண்டாமா?, மனிதநேயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்றிணைவதா? வேண்டாமா? என்பதே நம்முன் உள்ள கேள்வி.
இது மனிதநேயத்துக்கு எதிரான பிரச்னையாகும். ஒரு நாட்டுக்கோ அல்லது ஒரு இனத்துக்கோ எதிரான பிரச்னை அல்ல. எனவே, இதை மனிதநேயத்துக்கும், மனிதநேயமற்ற தன்மைக்கும் இடையேயான போராகவே பார்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக