தமிழகத்தின் கனவுத்திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைஎந்தவிதத்திலும் நிறைவேற்றுவதில்லை என்று நரேந்திரமோடி அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.“ராமர் பாலத்தை தகர்ப்பது என்றபேச்சுக்கே இடமில்லை” என்றுதிங்களன்று தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதன்மூலமாக, மத்தியகப்பல் போக்குவரத்து அமைச்சர்நிதின்கட்காரி இதை உறுதிப்படுத்தினார்.
மோடி அரசின் நூறு நாள் சாதனைகள் என்ற பெயரில் ஒவ்வொரு துறைஅமைச்சரும், சமீப நாட்களாகஅவ்வப்போது பேட்டியளித்து வருகின்றனர். இதனொரு பகுதியாக செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்காரி,சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தில் கடலுக்கு அடியில் உள்ள மணல் திட்டைஅகழ்ந்து எடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.கடலுக்கு அடியில் உள்ள மணல்திட்டை, ‘ராமர் பாலம்’என்று கூறிமதவாத சக்திகள், நீண்ட காலமாகமிக முக்கியத்துவம் வாய்ந்த சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் மத்தியில் பாஜக ஆட்சிஅமைந்த பிறகு, சேதுக் கால்வாய் கனவை முற்றிலும் தகர்க்கும் விதத்தில் கட்காரியின் பேட்டி அமைந்துள்ளது.இத்திட்டம் தொடர்பாக வேறுஏதேனும் மாற்று யோசனைகளை உருவாக்கித் தருமாறு ரயில் இந்தியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரச் சேவை(ரைட்ஸ்) எனும்அரசுபொதுத்துறை ஆலோசனை நிறுவனத்திடம் கேட்டிருப்பதாகவும், அந்தயோசனை வந்த பிறகுஅமைச்சரவையில் அதுகுறித்து பேசுவோம் என்றும் கட்காரி கூறினார். இது சேதுசமுத்திரத் திட்டத்தை முற்றிலும் கிடப்பில் போடுகிற ஏற்பாடே எனத் தெரிகிறது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக