நேற்று ஒரு அதிமுக பிரமுகரின் மகனுக்கு இஸ்லாமிய சகோதரி மணமுடிக்கப் படுவது பற்றிய செய்தி பத்திரிக்கையோடு தமிழக முதல்வரின் படம் போட்டு வலம் வந்தது. நம் சகோதரர்களும் இதைக் கண்டு துடித்து போயினர். இது போன்ற காதல் திருமணங்களை தடுப்பது எப்படி என்று பலரும் பல கருத்துக்களை பகிர்ந்தனர். ராஜ்குமார் & சமீரா பேகம் இருவருக்கும் வரும் 12/09/2014 அன்று காதல் திருமணம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது ...
இதன் பிறகு கடயநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளையின் சார்பில் உறுப்பினர்கள் ராஜ் குமார் என்ற அந்த சகோதரனை அன்போடு அணுகி இது போன்ற காதல் திருமணங்கள் சமூகத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விளக்கி சொன்னார்கள். இந்து நம்பிக்கையும் இஸ்லாமிய நம்பிக்கையும் ஒருமித்து வாழ்தல் சினிமாவுக்கு சாத்தியப்படலாம். நிஜ வாழ்வில் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும் என்று அழகிய முறையில் எடுத்துக் கூறினார்கள். குர்ஆனின் வழி காட்டுதலையும் நபிகளின் பொன் மொழிகளையும் அன்போடு எடுத்துரைத்தனர். அனைத்தையும் அந்த இளைஞர் பொறுமையாக கேட்டு உள் வாங்கிக் கொண்டார். ராமதாஸைப் போல் இந்த இளைஞர்கள் இஸ்லாமிய மக்களை திரட்டிக் கொண்டு வன்முறையில் இறங்கவில்லை. வெறுப்பை தூரமாக்கி அன்பை தங்கள் கையில் எடுத்தார்கள். அன்பு வென்றது. உள்ளங்களை புரட்டக் கூடிய இறைவன் அந்த இளைஞனின் மனதிலே மாற்றத்தை ஏற்படுத்தினான்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
அந்த அதிமுக பிரமுகரின் மகனின் முடிவில் மாற்றம் ஏற்பட்டு இன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். நேற்று வெளி வந்த அந்த பத்திரிக்கையை தாம் முகநூலில் வெளியிடவில்லை என்றும் அது தனது தந்தையின் வேலை என்றும் வருத்தப்பட்டார். இனி இஸ்லாமிய முறைப்படி இறைவன் நாடினால் இருவருக்கும் திருமணம் நடைபெறும். இந்த இருவரின் நல்வாழ்வுக்காக நாமும் பிரார்த்திப்போம்.
முஹம்மதே! நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 28:56
'உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!' என்பது நபிகள் நாயகம் அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : திர்மிதீ 3511
'மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 4798
'உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை' என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக