எதிர்ப்பு
மோடிக்கு வரவேற்பு நடக்கும் மேடிசன் சதுக்கத்துக்கு வெளியே நீதி மற்றும் பொறுப்பிற்கான ஒருங்கிணைப்புக் கூட்டணி என்ற அமைப்பில் ஒன்று கூடியவர்கள் மோடிக்கு எதிராக போராட்டத்தை நடத்தினர்.
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனக் கலவரத்தை ஒரு மாநில முதல்வராக இவர் அடக்கவில்லை என்பது இவர்களது பெரும் புகார் ஆகும்.
இதுமட்டுமின்றி சீக்கியர்கள் நீதியமைப்பு என்ற மனித உரிமை அமைப்பும் மோடிக்கு எதிராக நாளை (30ஆம்) தேதி மக்கள் நீதிமன்றம் என்ற நடைமுறையை மேற்கொள்கிறது.
வெள்ளை மாளிகையில் மோடியை வரவேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா சிகப்பு கம்பளம் விரிக்கும் அதே நேரத்தில் வெள்ளை மாளிகைக்கு வெளியே இந்த மனித உரிமை அமைப்பின் சிட்டிசன் கோர்ட் நடைபெறுகிறது. இது அமெரிக்கா முழுதும் அன்று லைவ் ஒளிபரப்பாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக