வினை விதைத்தவன்.,வினையறுப்பான்! காலம் பதில் சொல்லும் இன்ஷாஅல்லாஹ்.
2008-ஆம் ஆண்டு யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச் சட்டத்திற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, இடதுசாரிகள் மவுனம் சாதித்தனர்.நபி(ஸல்) அவர்களை அவமதித்த பேராசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அன்றைய இடதுசாரி அரசின் உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் யு.ஏ.பி.ஏ சட்டத்தை சுமத்த உத்தரவிட்டார்.இடதுசாரிகளும் அதனை நியாயப்படுத்தினர்.தற்போது (ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்த மனோஜ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில்) இடதுசாரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மீது யு.ஏ.பி.ஏ சட்டம் சுமத்தப்பட்டுள்ளது.இதற்கு எதிராக இடதுசாரிகள் களமிறங்கியுள்ளனர்.இதில் ஜனநாயகவாதிகளுக்கு ஒரு பாடம் உண்டு.கண்மூடித்தனமான அரசியல் பகைமையை விட ஒரு சமூகத்தின் விசாலமான ஜனநாயக உரிமைகளுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதே அந்த பாடம்.
-கே.ஸாதத், கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக