Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

யார் இந்த துலுக்கன் ? மாற்று மத சகோதரின் அருமையான பதிவு!


தற்போது இங்கு FB நடந்துவரும் சில

விவாதங்களுக்கு பதில் சொல்லவே இந்த கட்டுரையை எழுதுகிறேன். நாம் நம்முடைய நெருங்கிய இஸ்லாமிய நண்பரையே " டேய் துலுக்க பையா " என்றுதான் அழைக்கிறோம். துலுக்கன் என்று கூறி அவர்களை கிண்டல்
செய்வதாக நினைக்கிறோம். இந்த பெயர் காரணத்தை நான் பிறகு கூறுகிறேன். உங்களில் எத்தனை பேருக்கு இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.
எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்களை தெரியும். என் அனுபவத்தில் அந்த இளம் வயதில் அவர்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள் நம்மில் ஒரு சிலர் கூட கடைபிடிப்பதில்லை. அப்படி யாராவது ஒரு சிலர் கடைபிடித்துவிட்டால் " அப்பா , அவர் ரொம்ப நேர்மையானர்பா ", என்று கூறும் அளவிற்குதான் நாம் உள்ளோம். அவர்களுடைய பொருளாதார, கல்வி, நிலையை பற்றி உங்களில்
எத்தனை பேருக்கு தெரியும்? தாழ்த்தப்பட்ட , மலைவாசி மக்களை விட மிக மூசமாக இருக்கிறார்கள். மதம் அவர்களை பல வழிகளில் தடுப்பதால் மிக நேர்மையாக பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களுக்கு வீடு வாடைகைக்குகூட நம்மில் யாரும் கொடுப்பதில்லை. கேட்டால் அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் என்போம். அவர்கள் மத வெறி பிடித்தவர்கள் அல்ல. மார்க்க நெறியை பின்பற்றுபவர்கள். அவர்களுடைய மார்க்க நெறியை நம்மால் ஒருநாள் கூட கடைபிடிக்க முடியாது. அடுத்தது தீவிரவாதம். தீவிரவாதம் எங்கு இல்லை? ஒரு புழுகூட தாக்கபட்டால் சற்று நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும். பா.ம.க எப்படி வளர்ந்தது? வாண்டையார்கள் எப்படி வளர்ந்தார்கள்? மூப்பனார்கள் எப்படி வளர்ந்தார்கள் ? தேவர்கள் மற்றும் முக்குலத்தோர் எப்படி வளர்ந்தார்கள்? விடுதலை சிறுத்தைகள் எப்படி வளர்ந்தார்கள் ? இதெல்லாம் தீவிரவாதம் இல்லையா? எங்கோ ரேஷன் கடையில் கடைசியில் நிற்கும் ஒரு இஸ்லாமியரை நாம் தீவிரவாதியாக பார்க்கிறோம். இவர்கள் மட்டும் யார்? சில தலைமுறைகளுக்கு முன் நம் உறவினர்களாக இருந்தவர்கள்தான். இதைத்தான் மானுடவியலும் அறிவியல் பூர்வமாக சொல்கிறது. நிச்சியமாக இங்கே இருக்கும் இந்த தினகரனின் ஜீனும்,
எங்கோ உள்ள அப்துல்லாவின் ஜீனும் ஒன்றாகவே இருக்கும். என்னுடன் பழகும் இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் மனதார தீவிரவாதத்தையும், கொலை செயலையும் மிக கடுமையாக எதிர்கிறார்கள். சகோதரத்துவத்தியே

 

அவர்கள் விரும்பிகிறார்கள். ஒரு காலத்தில் இஸ்லாம் துருக்கியை தலைநகராக கொண்டு இருந்தபோது துருக்கியன் என்று அழைக்கபட்டர்கள். அது மருவி துலுக்கன் என்றாகிவிட்டது. இது ஒன்றும் கேலிக்குரிய வார்த்தை அல்ல. மகாகவி பாரதிகூட தன்னுடைய படைப்புக்களில் "திசை பார்த்து கும்பிடும் துருக்கியன்", என்று குறிப்பிட்டுள்ளார் ஆகவே நண்பர்களே ! பிறந்துவிட்டோம். 60 ஆண்டு காலமோ அல்லது 70 ஆண்டு காலமோ நம் 
வாழ்கை. மிக சிறிய வாழ்கை. ஒரு ஆமைகூட 400 ஆண்டுகள் வாழ்கிறது. அந்த வாழ்க்கைகூட நமக்கு கிடையாது. இதில் பாதி காலம் தூக்கத்திலேயே போய்விடுகின்றது. இருக்கும் சில ஆண்டுகளையாவது சகோதரத்துவத்துடன்
எல்லோரையும் அரவணைத்து செல்வோம். ஒரு இஸ்லாமியருக்கு சலாம் சொல்லிபாருங்கள். அப்புறன் தெரியும் அவர்களுடைய அருமையும், பெருமையும் .

நன்றி :-Vasudevan Thinakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக