மாலேகான் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியை வெளிக்கொணர்ந்த மஹாராஷ்டிரா ஏ.எடி.எஸ் தலைவரும், மும்பை தாக்குதலில் மர்மமான முறையில் கொல்லப்பட்டவருமான ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே மரணமடைந்தார்.
மூளையில் ஏற்ப்பட்ட இரத்தக் கசிவு காரணமாக அவர் கோமா நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கர்கரே தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கவிதா உயிரிழந்ததையடுத்து அவரின் கண்கள், சிறுநீரகங்கள், இருதயம் ஆகியவற்றை தானமாக கொடுக்க அவரின் உறவினர்கள் முன்வந்துள்ளனர்.
தனது கணவர் கர்கரேவின் மர்ம மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொணர்வேன் எனக்கூறி சட்டரீதியான பல முன்னெடுப்புகளை கவிதா கர்கரே மேற்க்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக