தென்கொரியாவின் இன்சியான் நகரில் 17–வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கத்தார் அணியும் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில், கத்தார் மற்றும் மங்கோலிய பெண்கள் அணிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடைபெற இருந்த போட்டியில் கலந்துகொள்ளும் கத்தார் வீராங்கனைகள் ஹிஜாபுடன் மைதானாத்துக்குள் நுழைந்தார்கள். ஆனால் சர்வதேச கூடைப்பந்து கழக (FIBA) விதிப்படி தலையில் முக்காடு (ஹிஜாப்) அணிந்து விளையாட நடுவர் தடை விதித்தார்.
இதையடுத்து போட்டியின் நடுவர்களுக்கும், கத்தார் அணியின் போட்டியாளர்களுக்குமிடையில் நீண்ட நேர வாக்குவாதம் நடந்தது. விளையாட்டிற்காக தங்களின் மதநம்பிக்கையை இழக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் நடுவர் அனுமதி மறுத்ததன் காரணமாக தாம் போட்டியிலிருந்து விலகுவதாக கத்தார் அணி அறிவித்துவிட்டு அரங்கைவிட்டு வெளியேறியது.
கத்தார் அணி வெளியேறியதை அடுத்து போட்டி நடத்தாமலேயே மங்கோலிய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கூடைப்பந்து தவிர்த்து மற்ற போட்டிகளில் ஈரான் நாட்டு வீராங்கனைகள் ஹிஜாபுடன் பதக்கங்களை வென்றுள்ள நிலையில் கூடைப்பந்து கழக விதிப்படி ஹிஜாபுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக