இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் கல்வியில் சிறந்து விளங்கி, வசதியின்றி மேல்படிப்பை தொடர முடியாத சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த 2014&15ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12,000 கல்வி உதவித்தொகை இரு தவணைகளாக வழங்கப்படுகிறது. (11ம் வகுப்புக்கு ரூ.6000,12ம் வகுப்புக்கு ரூ.6000)
இவை கல்விக்கட்டணம், பாடப்புத்தகம், எழுதுபொருள் உள்ளிட்டவைகளுக்காக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 1,343 சிறுபான்மையின மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவிகள் 10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண் பெற்று நடப்பாண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் முறையாக சேர்ந்து 11ம் வகுப்பு படிப்பவராக இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் போது சேர்க்கை அனுமதிச்சீட்டு கடித நகல் இணைத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். (வருமான சான்று, ஓய்வூதிய ஆணை ரூ.20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் அவசியம் விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும்)
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தாங்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் விவரங்களை http://maef.nic.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
கல்வி நிலைய தலைமை ஆசிரியர், தாளாளர், தங்கள் கல்வி நிலையத்தில் 11ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்ப படிவம் மற்றும் பிற்சேர்க்கை 1 மற்றும் 2ல் குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன் அசலாக The Secretary, Maulana Azad Education foundation, (Ministry of minority Affairs, Gocernment of India) Cheims Ford, New Delhi - 110055என்ற முகவரிக்கு வரும் 30-9-14 மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பவேண்டும்.
12ம் வகுப்பு உதவித்தொகை பெற மாணவிகள் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விவரங்களை மேற்கண்ட முகவரிக்கு கல்வி நிறுவனங்கள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக