ஓடியாடி விளையாடாமல் டிவி, கம்யூட்டர் என அடைந்து கிடைப்பதாலும், அதிக அளவு பாஸ்ட் ஃபுட் உணவுகளை உட்கொள்வதாலும் 20 சதவிகித குழந்தைகள் உடல்பருமன் நோய்க்கு ஆளாகிவருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறுவயதிலேயே இதயநோய், நீரிழிவு நோய்க்கு ஆளாக நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
போர்ட்டிஸ் மருத்துவமனையின் மெட்டபாலிக் நோய்கள் மற்றும் எண்டோகிரைனாலஜி துறை சார்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.
இந்தியாவில் சராசரியாக 15 முதல் 21 சதவீத குழந்தைகள் குண்டாக உள்ளனர். ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் ஐட்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாலும் உடலுக்கு பயிற்சி அளிக்காமல் அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதாலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஓடி விளையாடு பாப்பா
நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளில் 68% பேர் ஓடியாடி விளையாடுவதில்லை. வெளியே விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல், கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் என்று அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர்.
பதின்பருவ சிறுவர்களில் 9 சதவீதத்தினர் தொப்பையுடன் இருக்கின்றனர். இளம் வயதில் தொப்பை விழுவது இன்சுலின் சுரப்பை நேரடியாக பாதித்து சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
ஜங்க் ஃபுட் கலாச்சாரம் உணவு பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள்தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம். இது பெரியவர்களை மட்டுமின்றி தற்போது சிறுவர்களையும் அதிகம் பாதிக்கிறது. உடலுக்கு ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை விடுத்து நகர்ப்புற குழந்தைகள் கொழுப்பு சத்து. இனிப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் நிறைய சாப்பிடுகின்றனர். இதுவே உடல்பருமனுக்கு காரணமாகிறது. இதனால் சிறுவயதிலேயே இவர்களுக்கு நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். தவிர இன்னும் 20 ஆண்டுகளில் சராசரி ஆயுள்காலம் குறையும் அபாயமும் இருக்கிறது என்று ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர் எச்சரித்துள்ளார். சத்தான உணவு கொடுங்களேன் கொழு கொழுவென்று என்று இருக்கும் குழந்தைதான் ஆரோக்கியம் என்று கருதாமல் சத்தான உணவுகளை கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதோடு அவர்களுக்கு உடற்பயிற்சி செய்யவும் கற்றுக்கொடுங்களேன். ஆரோக்கியமான எதிர்காலத்தை இன்ஷாஅல்லாஹ் நம் குழந்தைகளுக்கு நாம் அமைத்து கொடுக்கலாம்.
( குறிப்பு : பிள்ளைகளுக்கு சொல்லும் முன்பு நாம் இதை பின்பற்ற வேண்டும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக