முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் போது
பத்து காசு முறுக்கு,
வாங்கடா மோதி பார்ப்போம்
போன்ற தேவையற்ற
கோஷங்களை முஸ்லிம்களை பார்த்து எழுப்பி கலவரத்தை தூண்ட
சதி.
காவல்துறையோ வேடிக்கை...!!
பட்டுக்கோட்டை ரோடு புதுத்தெரு அருகில்
ஒரு வீட்டில்
கல்வீச்சு வாக்குவாதம், அதன் பின்
ஓடக்கரை என்ற பகுதியிலும்
ஒரு வீட்டில்
கல்வீச்சு வாக்குவாதம்..
2000 கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டதும் கலவர தடுப்பு வாகனங்கள் கண்காணிப்பு கேமராக்கள் என அரசு பணத்தை செலவு செய்து பாதுகாப்பு அளிக்கப்பட்டது எல்லாம் முஸ்லிம் மக்களுக்கு காட்டப்படும் கண்துடைப்பு வேலை ?
இவ்வாறு கலவரம் செய்யும் நோக்கில் நடைபெறும் ஊர்வலத்தை தடை செய்ய முடியாத திராணியற்ற காவல்துறையா ?
அல்லது கலவரத்திற்கு ஒத்து போகும் கா (வி ) வல் துறையா ?
முத்துப்பேட்டையில் இன்று நடைபெற்ற விநாயகர் ஊர்லத்தில் கலந்துக்கொண்ட சமூகவிரோதிகள் பழைய பஸ்டாண்டிலிருந்து செம்படவான்காடு ரயில்வேகேட்வரை உள்ள இஸ்லாமியர்களுக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் மீது கல் எறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.வழக்கத்திற்க்கு மாறான வன்முறையை தூண்டக்கூடிய கோஷங்களையும் போட்டுள்ளனர்.
காவல்துறையினர் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டு இருந்தும் பிற மதத்தினரின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகளை அவர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.பட்டுக்கோட்டை சாலை விநாயகர் ஊர்வலம் நடத்த சரியான பாதை அல்ல என்பதையே தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் உணர்த்துகிறது.
இந்த தாக்குதலில் தொடர்புடைய ரவுடிகளை காவல்துறை உடனடியாக கைது செய்து இந்த பகுதியில் அமைதியை நிலைநாட்ட முன் வர வேண்டும்.எதிர் வரும் காலத்தில் மாவட்ட நிர்வாகம் பட்டுக்கோட்டை சாலையை தவிர்த்து மன்னார்குடி சாலை வழியாக ஊர்வலத்தை கொண்டு செல்ல திட்டமிட வேண்டும்.
-முஹம்மது ஷிப்லி.
செப்டம்பர் 02: முத்துப்பேட்டையில் இன்று நடைபெற்ற விநாயகர் ஊர்வளத்தில் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை தாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார் முஸ்லிம்களிடம் உறுதி அளிதார்.
சம்பவத்தை கேள்விபட்டு முகைதீன் பள்ளிவாசல் திடலில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியதால் பரபரப்பு…
நடவடிக்கை எடுக்கிறோம் என காவல்துறை வாக்கு உறுதி அளிதார்கள்..பின்னர் அனைவரும் கலைந்து சொன்றார்கள்.
தகவல்: பைசல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக