இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது பற்றியும், இதய நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள், அவற்றைத் தவிர்க்கும் முறைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதற்காக, ‘உலக இதய தினம்’ ஆண்டுதோறும் ‘உலக இதய கூட்டமைப்பால்’ (World Health Federation) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
1999 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பிறகு, செப்டம்பர் 29ம் தேதியாக மாறியது. இந்த ஆண்டு, ‘ஆரோக்கியமான இருதய சூழலை உருவாக்குவோம்’ என்ற கருப்பொருளில் இதய தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஏனென்றால், ஆரோக்கியமான குழந்தையால்தான் ஆரோக்கியமான இளைஞனாக முடியும். ஆரோக்கியமான இளைய தலைமுறைதான் ஆரோக்கியமான குடும்பத்தை, சமூகத்தை உருவாக்க முடியும்.
‘புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை’ இவற்றைத் தவிர்த்தாலே போதும், இதயக் கோளாறுகளால் ஏற்படும் 80 சதவிகித மரணங்களைத் தவிர்த்துவிடலாம்’ என்கிறது உலக இதயக் கூட்டமைப்பு. நம் வாழ்வியல் முறையில் கடைப்பிடிக்கும் சில எளிய செயல்பாடுகள் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும், இதய நோய்கள் வராமல் நம்மைக் காப்பாற்றும்.
நம்மை நாமே கவனிக்கும் சுய கவனம் நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கினை ஆற்றுகிறது. தொடர்ச்சியான சுயகவனம் செலுத்துதல் மூலம் இலகு வழியில் ஆரோக்கியத்தைப் பேணலாம்.
சுய கவனம் என்பதில் தனியொருவரின் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பேணுதலாகும். இதில் தனியொருவர் குடும்பம், சமூகம் உள்ளடங்குகின்றனர். இவர்களின் ஆரோக்கியத்தை பேணுதல், நோயற்ற நேரம் ஆரோக்கியத்தை மீளப்பெறுதல், நோய் தடை செய்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இங்கு உடல் உள ஆரோக்கியத்தைப் பெறும் பொருட்டு, உடற்பயிற்சி செய்தல், நிறை உணவு உண்ணல், சுகாதார முறைகளைக் கடைப்பிடித்தல் ஆகியன கருதப்படுகின்றன. பாதகமான விளைவுகளைத் தருமென நன்கு அறியப்பட்டவற்றை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் (உ-ம் புகைத்தல், மது).
மாரடைப்பு காரணமாக உலகம் முழுவதும் 17.3 மில்லியன் மக்கள் இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29% ஆகின்றது. அதிலும் 82% வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள நாடுகளிலும், வளரும் நாடுகளிலும்தான் காணப்படுகிறது.
கடந்த 20 ஆம் நூற்றாண்டில் இருதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதமாக இருந்தது. 21ம் நூற்றாண்டில் 35 சதவிகிதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருகிறார்கள் அத்துடன் இவ் மாரடைப்பின் காரணமாக அதிகமாக பெண்களே இறப்பதாக தெரியவருகின்றது.
உயர் இரத்த அழுத்தம், உடலில் உள்ள சிதையா கொழுப்பு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள்,போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால்தான் இருதய சம்பந்தமான நோய்கள் தாக்குவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது.
மக்களிடையே மாரடைப்பு நோய்களை பற்றிய விழிப்புணர்வு வளர வேண்டும் என்றும், தினம்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்து உடலில் உள்ள கொழுப்புகளை எரித்து ஆரோக்கியமாக இருந்தால் மாரடைப்பு நோய்களை தவிர்க்கலாம் என்றும் உலக சுகாதார துறை அறிவித்துள்ளது.
அமெரிக்க ஐரோப்பியர்களைவிட 4 மடங்கும் சீனர்களைவிட 10 மடங்கும் ஜப்பானியர்களைவிட 20 மடங்கும் இந்தியர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள்.
25 முதல் 30 வயதுள்ள இளைஞர்களை மாரடைப்பு தாக்குவது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்கின்றனர். இன்றைக்கு பதினைந்து வயது பிள்ளைகளுக்கு கூட மாரடைப்பு வருகிறது. அதற்கு காரணம் லைஃப் ஸ்டைல் மாறுதல் மற்றும் நம் ஃபாஸ்ட் புட் உணவு பழக்கம்தான்..!
இந்த இதய தினத்தில் நம் இதயத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, முக்கியமாக இன்னொன்றையும் எடுக்க வேண்டும். இதற்கு 3 வழிகள் உள்ளன. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, பணியின் போது மன இறுக்கத்தை தவிர்த்தல் போன்ற மூன்று விஷயங்களும் இருதய நோய் வராமல் பார்த்துக் கொள்கின்றன.
ஒரு காலகட்டத்தில் பின்லாந்து மற்றும் மொரீஷியஸ் நாட்டில் அதிகமாக இருதய நோய் உள்ளவர்கள் இருந்தனர். அந்த நாடுகள் முறையே பால் மற்றும் பாம்ஆயில் உபயோகத்தை மிகவும் குறைக்க நடவடிக்கை எடுத்ததன் விளைவாக இருதய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இந்தியாவில் பல எண்ணெய்களை உபயோகிக்கிறோம். கொழுப்பு சத்து குறைவாக உள்ள எண்ணெயைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்தினரும் முடிவு செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி, திட்டமிட்ட அன்றாட வாழ்க்கை இல்லாமல் சோம்பேறித்தனமாக வாழ்ந்தால் இருதய நோய் நிச்சயம் வரும்.
சரியான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் இருதயம் 100 வருடங்களுக்கு மேலாக செயல்படும். நாம் எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதை கல்லீரல் கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாற்றுகிறது. புகைபிடித்தல், அதிகமாக மது அருந்துதல், அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல், உடல் உழைப்பு இல்லாமை, டென்சன் ஆகியவற்றால் இருதயம் பாதிக்கப்படுகிறது. இதனால் இப்போது 19 வயது வாலிபருக்கு கூட மாரடைப்பு ஏற்படுகிறது.
ஆண்டுக்கு 100 மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். உணவில் கட்டுப்பாட்டை எப்போதும் பின்பற்றுங்கள். ஆரோக்கியமான உணவை பின்பற்றுங்கள். இரவில் குறைந்தபட்சம் 5 மணிநேரமாவது தூக்கத்தை கடைபிடியுங்கள். இப்படி இருந்தால் இருதயத்தை நாம் பாதுகாக்க முடியும்.
உலக இதய நாளின் முக்கிய குறிக்கோளே, இதய நோயை வரும் முன் காப்பதும், வந்தபின் பூரண குணம் அடையச் செய்வதும்தான்.
ஆகவே உலகளவில் சிந்தித்து, வீட்டளவில் செயல்பட்டு, ஒவ்வொரு தனி மனிதனும் அவர்தம் இதயத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டால், உலகளவில் மாரடைப்பு அற்ற சமுதாயத்தை நாம் உருவாக்கமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக