அல்லாஹ் கூறுகின்றான்:
“அவர்களை எதிர்ப்பதெற்கென நீங்கள் தயாராகி விட்டீர்களென்றால் முடிந்த அளவு எல்லா ஆற்றல்களையும் தயார் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மேலும், குதிரைப் படைகளையும் திரட்டிவையுங்கள்.
இவற்றின் மூலம் அல்லாஹ்வுக்கும், உங்களுக்கும் பகைவர்களாய் உள்ளவர்களையும் இவர்கள் அல்லாத வேறு பகைவர்களையும் நீங்கள் திகிலடையச் செய்திட வேண்டும்.” (அல்குர்ஆன்:8:60)
இன்றைய நாட்களில் உலக மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள மார்க்கம்
இஸ்லாம். அதேபோல, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் முஸ்லிம்கள். இதற்கு முக்கியக் காரணம் திட்டமிட்டு இந்த பொய்மையை பரப்ப தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வரும் தகவல் தொடர்பு சாதனங்கள்.. பத்திரிகைகள் போன்ற எழுத்து ஊடகமாக இருந்தாலும் சரி அல்லது டிவி. போன்ற மின்னணு ஊடகங்களாக (விஷீவல் மீடியாக்களாக) இருந்தாலும் சரியே! இஸ்லாத்துக்கு எதிராக இவை முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
தீவிரவாதிகள்
மதவாதிகள்
கடத்தல்காரர்கள்
விமானக்கடத்தல்கள்
கொடுரமானவர்கள்
சர்வாதிகாரிகள்
காட்டுமிராண்டிகள்
அடிப்படைக் காரணம் இது தான் ஊடகத்துறையில் முஸ்லிம்கள் தங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்த தவறிவிட்டனர்.உலக அளவில் வெகுஜன மக்களை சென்றடைகிற வகையில் முஸ்லிம்களுக்கென தனியாக தரமான பத்திரிக்கைகள் இல்லை.
அல் ஜஸீரா வைத் தவிர்த்து தொலைக்காட்சி ஊடகம் இல்லை.
இந்தியாவில் வெளியாகும் 750 ஆங்கில பத்திரிக்கைகளில் ஒன்று மட்டுமே முஸ்லிம்களுக்கு உரியது.
இந்தியாவில் வெளியாகும் 760 இதர மொழிப் பத்திரிக்கைகளில் நூற்றி சொச்சம் பத்திரிக்கைகள் மட்டுமே முஸ்லிம்களுக்கு உரியது.மலையாளத்தில் மட்டும் நூற்றுக்கும் குறையாத முஸ்லிம் பத்திரிக்கைகள் அனைத்து சமூக வாசகர்களைக் கொண்டுள்ளது.இன்னும் சொல்லப் போனால் தேசியத் தரம் வாய்ந்த ஒரு பத்திரிக்கையோ, மாத இதழோ இல்லை.பத்திரிக்கைகளில் முஸ்லிம்கள் சார்பாக வாதாடுவதற்கு உரிய ஆற்றலும், ஆளுமையும் உள்ளவர்கள் அதிகமாக இருந்தும் கவனம் செலுத்தாததும், முன்வராததும் தான் முஸ்லிம்களின் அவமானத்திற்கு காரணம்.
அடுத்து காணொளி ஊடகத்தில் முஸ்லிம்களின் நிலை மிகவும் அவமானகரமானது. 14 விழுக்காடு கொண்ட ஓர் சமூகத்திற்கு தேசிய அளவில் ஊடகத்துறையில் உள்ள பிரதிநிதித்துவம் வெறும் 3 விழுக்காடு மட்டுமே.
அதே இந்தி சேனல்களில் முஸ்லிம்கள் 6 விழுக்காடு மட்டுமே உள்ளனர்.
ஆனால், மொத்த இந்திய மக்கள் தொகையில் 16 விழுக்காடு கொண்ட உயர் சாதியினர் 88 விழுக்காடு ஊடகங்களில் உயர் பதவியில் அமர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இப்போது தெரிகின்றதா? அண்ணா ஹஸாரே எப்படி பிரபல்யமானார். பாபா ராம் தேவ் எப்படி அரசியலில் களம் கண்டார் என்று.ஆனால், இவர்கள் பிரபல்யமாகுவதற்கு காரணமான அதே ராம் லீலா மைதானத்தில் தான் இட ஒதுக்கீடு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால் எடுத்துச் சென்று மக்களுக்கு முன்னால் சொல்லிட ஒரு நாதியில்லை….
நன்றி விகளத்தூர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக