ஒரு குழந்தை தவழ்ந்து முடிந்து, எழுந்து நிற்க முயலும் போது தன் இருப்பு நிலையினை சமநிலை செய்ய முடியாததால் கீழே விழுவதும், பின் எழுவதுமான நிகழ்வு நடைபெறும்.
எதுவரை எனில் முழுவதுமான சமநிலையோடு (Balanced Walk) நடக்கத் துவங்கும் வரையிலும் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.
நாம் அனைவருமே இந்த முயற்சியில் வெற்றி பெற்றவர்கள்தான்.
இந்த Balancing எப்படி நடைபெறுகிறது என்றால், புவியீர்ப்பு விசைக்கு எதிராக நாம் நம்மை (நம் உடல் நிறையுடன்) இருப்பு நிலைக்கு கொண்டுவரவும், இயக்கத்தினூடே சமநிலைப்படுத்திக் கொள்ளவும் நிறைய விசைகள் நமக்கு உதவி செய்கின்றன. உதாரணத்திற்கு, sensorimotor control systems எனப்படும் உணர்திறன் கட்டுப்பாட்டு அமைப்புகள் பெரிதும் உதவியாய் இருக்கிறது.
sensorimotor control systems என்பது (பார்வை, செவிப்புலன்) நமது மூளையின் கீழ்பாகத்தில் அமைந்துள்ள சிறுமூளை எனப்படும் cerebellum லிருந்து இயக்கப்படுகிறது.
நாம் நடக்க முயலும் போது ஏற்படும் அல்லது கற்றுக்கொள்ளும் விடயங்கள் (DATA) பெருமூளையில் சேமிக்கப்பட்டாலும், அவைகளை சரியாக கட்டளையிட்டு அந்த செயல்பாட்டினை வெற்றி பெறச் செய்யும் சிறுமூளையின் பங்கு மிக முக்கியமானது.
சரி, சமநிலையுடன் நடப்பதற்குக் (நமது உடல் நிறையுடன் மட்டும்) கற்றுக் கொண்டுவிட்டோம். இப்போது நமது நிறையுடன் சேர்ந்து சைக்கிள் அல்லது மோட்டார் பைக் நிறையையும் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக சமநிலையில் செலுத்தத் தேவையான DATA நமது மூளைக்குக் கொடுக்க வேண்டும்.
வலதுபுறம் திரும்பும் போதும், இடது புறம் திரும்பும் போதும் எந்த அளவிற்கு மையத்திலிருது விலகுகிறோம், பிறகு மையத்தை நோக்கி எழுகிறோம். நாம் பயணிக்கும் வேகத்திற்கும் மீளும் நேரத்திற்கும் இடையிலான அளவுகள் நமது சிறுமூளையில் குறிக்கப்படுகிறது. சரியான தகவல்கள் நமது மூளையில் பதிவாகும் வரையிலும் நாம் தடுமாறிக் கொண்டிருப்போம். துள்ளியமாகக் குறிக்கப்பட்டவுன், இரண்டு கையயும் விட்டு விட்டு ஓட்டத் துணிந்து விடுவோம்.
8 வடிவ தடத்தில் ஓட்டிப் பழகும் போது, சுலபமாக இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு மேற்சொன்ன அனைத்து திறன்களும் ஒருசேர நமது மூளையில் பதியப்படுகிறது. அதனால் தான் தேர்வின் போது 8 போடச் சொல்லி நம் திறனைச் சோதிக்கிறார்கள்.
(மைய நோக்கு விசை, மைய விலக்கு விசை. ஆகியவைகள் அறிவியல் பாடத்தில் படித்திருப்போம்)
மது முதலில் சிறுமூளையைத் தான் செயலிழக்கச் செய்கிறது. நம்முடைய அனைத்து கட்டுப்பாட்டு இயக்கங்களும் முடக்கப்படுவதால், உடல் என்ன செய்வதென்று அறியாது கீழே விழுகிறது. விபத்து நேர்கிறது.
ஆகவேதான் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.15,000/- அபராதம் என்று அறிவித்திருக்கிறது காவல்துறை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக