ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளுடன் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தேன். பரிச்சயமான கேம் தான். குறிப்பிட்ட ஒரு லெவல் சிக்கலாகிக் கொண்டிருந்தது.
ஜெயித்துவிடலாம்னு முயற்சி பண்ணினா சிரமமாகவே இருந்தது. அப்போது நான் மகளிடம் சொன்னேன். இந்த லெவல் தோத்துடுவோம். அடுத்த லைஃப் யூஸ் பண்ணி முதல்ல இருந்தே இந்த லெவலை விளையாடுவோம்னு.
அப்போ மகள் சொன்னா, வாப்பா! Confident வேணும் வாப்பா. ஜெயிச்சிடலாம்னு Confident இருந்தா நிச்சயமாக ஜெயிச்சிடுவோம் வாப்பா!!!.
ஒரு நிமிடம் சிலிர்த்துப் போய்விட்டேன். மாஷா அல்லாஹ்!!! என்ன ஒரு வார்த்தை அது.
பிள்ளைகளும் கூட சில நேரங்களில் நமக்கு ஆசான்களாக மாறிவிடுகிறார்கள்.
இதில ஹைலைட் என்னென்னா, அந்த லெவலை தொடர்ந்து விளையாடி ஜெயிச்சிட்டோம்.
courtesy: Mohamed Faisel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக