துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும். இந்த மாதத்தின் முதல் பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு இல்லை.அந்த வரிசையில் ايام عشر ذي الحجة – என்னும்
“துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்”
மிகவும் முக்கியமான நாட்களாகும். ஆகவே இந்த நாட்களில் அதிகமாக நல்லமல்களை செய்ய ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் سبحانه وتعالىதன் அடியார்களுக்கு அவர்களின் குறுகிய ஆயுளில் நிறைந்த நல்லமல்களைச் செய்து மகத்தான பேறுகளைப் பெறுவதற்காக சில முக்கிய நாட்களை வழங்கியிருப்பது மிகப்பெரிய கருணையாகும்.அந்த வரிசையில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை சிறப்பித்து குர்ஆனிலும்
ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளன.நாட்களில் மிகச்சிறந்தவை துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும்; இரவுகளில் சிறந்தவை ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்களாகும் என்பதாக அறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர்.
அல்லாஹ் سبحانه وتعالىகூறுகிறான்:-
وَالْفَجْرِ* وَلَيَالٍ عَشْرٍ
வைகறைப் பொழுதின் மீதும் பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக! (அல் ஃபஜ்ர் :1-2)
இந்த வசனத்திற்கு விளக்கவுரையாக இப்னு கஸீர்(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:-
وَاللَّيَالِي الْعَشْرُ: الْمُرَادُ بِهَا عَشَرُ ذِي الْحِجَّةِ. كَمَا قَالَهُ ابْنُ عَبَّاسٍ
பத்து இரவுகள் என்பது இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியுள்ளதைப் போன்று துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களை மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
مَا العَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ؟» قَالُوا: وَلاَ الجِهَادُ؟ قَالَ: «وَلاَ الجِهَادُ، إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ
துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்லமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல்லமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான்; ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) , புகாரி)
இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:-
وَالَّذِي يَظْهَرُ أَنَّ السَّبَبَ فِي امْتِيَازِ عَشْرِ ذِي الْحِجَّةِ لِمَكَانِ اجْتِمَاعِ أُمَّهَاتِ الْعِبَادَةِ فِيهِ وَهِيَ الصَّلَاةُ وَالصِّيَامُ وَالصَّدَقَةُ وَالْحَجُّ وَلَا يَتَأَتَّى ذَلِكَ فِي غَيْرِهِ
துல்ஹஜ் மாதத்தின் இந்த பத்து நாட்களின் சிறப்புக்கு காரணம், இஸ்லாத்தின் தலையாய வணக்கவழிபாடுகள் இந்நாட்களில் ஒருங்கே அமைந்திருப்பதாகும்.தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறைவேற்றப்படுகின்றன! இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை. (ஃபத்ஹுல் பாரி)
இந்த பத்து நாட்களில் அதிகமாக தஸ்பீஹ் (سُبْحَانَ اللَّهِ), தஹ்லீல்(لاَ إِلَهَ إِلَّا اللَّهُ),தம்ஹீத் (الحَمْدُ لِلَّهِ), தக்பீர்(اللَّهُ أَكْبَرُ) போன்றவற்றை கூறுமாறு ஹதீஸ்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
مَا مِنْ أَيَّامٍ أَفْضَلُ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ وَلَا أَحَبُّ إِلَيْهِ الْعَمَلُ فِيهِنَّ مِنْ أَيَّامِ الْعَشْرِ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّسْبِيحِ وَالتَّهْلِيلِ وَالتَّحْمِيدِ
நாட்களில் மிகவும் அமல்கள் செய்வதில் அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் துல்ஹஜ் பத்து நாட்களாகும்; இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை! எனவே இந்த நாட்களில் சுப்ஹானல்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ்,அல்ஹம்துலில்லாஹ் போன்றவற்றை அதிகமதிகமாக சொல்லுங்கள்!
(இப்னு உமர்(ரலி), தப்ரானி)
وَكَانَ ابْنُ عُمَرَ، وَأَبُو هُرَيْرَةَ: «يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ العَشْرِ يُكَبِّرَانِ، وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا
இப்னு உமர்(ரலி), அபூஹுரைரா(ரலி) ஆகியோர் துல்ஹஜ்(மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள். இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். (புகாரி)
عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، قَالَ: كَانَ عَبْدُ اللَّهِ، يُكَبِّرُ مِنْ صَلَاةِ الْفَجْرِ يَوْمَ عَرَفَةَ، إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنَ النَّحْرِ يَقُولُ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ
அல்லாஹுஅக்பர் அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து” اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ என்ற தக்பீரை அரஃபாநாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸர் தொழுகை வரை சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்ற இந்த ஹதீஸ் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.அல்பானி போன்ற அறிஞர்கள் இந்த ஹதீஸை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அரஃபா நாளின் சிறப்புகள்
جَاءَ رَجُلٌ مِنَ الْيَهُودِ إِلَى عُمَرَ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا، لَوْ عَلَيْنَا نَزَلَتْ، مَعْشَرَ الْيَهُودِ، لَاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا، قَالَ: وَأَيُّ آيَةٍ؟ قَالَ: {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ، وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي، وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا} [المائدة: 3]، فَقَالَ عُمَرُ: إِنِّي لَأَعْلَمُ الْيَوْمَ الَّذِي نَزَلَتْ فِيهِ، وَالْمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ، «نَزَلَتْ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَاتٍ فِي يَوْمِ جُمُعَةٍ»
யூதர்களில் ஒருவர் உமர்ரலி) அவர்களிடம் வந்து, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஒரு வசனம் யூத சமுதாயமாகிய எங்களுக்கு அருளப்பெற்றிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கியிருப்போம்” என்று கூறினார். உமர்(ரலி) அவர்கள், “அது எந்த வசனம்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்,”இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையை உங்கள்மீது நிறைவாக்கிவிட்டேன்.இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டு விட்டேன்”(5:3) எனும் இறைவசனம்தான் (அது) என்று கூறினார்.உமர்(ரலி) அவர்கள், “அந்த வசனம் எந்த நாளில் அருளப்பெற்றது; எந்த இடத்தில் அருளப்பெற்றது என்பதையெல்லாம் நான் அறிவேன். அது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் “அரஃபா” பெருவெளியில் இருந்தபோது, ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அருளப்பெற்றது” என்று கூறினார்கள். (முஸ்லிம்)
مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ، مِنْ يَوْمِ عَرَفَةَ، وَإِنَّهُ لَيَدْنُو، ثُمَّ يُبَاهِي بِهِمِ الْمَلَائِكَةَ، فَيَقُولُ: مَا أَرَادَ هَؤُلَاءِ؟
அரஃபா நாளை விட வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியானை அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. (அந்நாளில்) அவன் நெருங்கி வந்து இந்த அடியார்கள் என்னை விரும்புகின்றார்கள் என்று சொல்லி மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
(ஆயிஷா (ரலி), முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்:-
ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ، فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ، صِيَامُ يَوْمِ عَرَفَةَ، أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ، وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ، وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ، أَحْتَسِبُ عَلَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ
மாதத்தில் மூன்று (நாட்கள் நோன்பு நோற்பது)ம், ரமளானுக்கு ரமளான் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும். அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன்.
(அபூகதாதா (ரலி), முஸ்லிம்)
خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும். நானும் எனக்கு முந்தைய நபிமார்களும் சொன்னதில் சிறந்தது, “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு ஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் ’(لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ) என்ற துஆ ஆகும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
உழ்ஹிய்யா http://dstjlbk.com/?p=1813
உழ்ஹிய்யா- الأضحية என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுத்து பலியிடுவதாகும்.. இது நபி صلى الله عليه وسلم அவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. (அல் கவ்ஸர்:2)
لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ
(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல் ஹஜ் : 37)
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
إِذَا دَخَلَتِ الْعَشْرُ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلَا يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்கள் வந்துவிட்டால் உழ்ஹிய்யா கொடுக்க விரும்புபவர் தமது நகங்களையும் முடிகளையும் (களையாமல்) தடுத்துக் கொள்ளட்டும். (உம்மு ஸலமா(ரலி) முஸ்லிம்)
நன்மைகளைத் தேடிக்கொள்வதற்காக அல்லாஹ்سبحانه وتعالى வழங்கியுள்ள இந்த துல்ஹஜ் மாதத்தின் பத்து தினங்களை அதிகமான வணக்க வழிபாடுகளைக்கொண்டு உயிர்ப்பிப்போம். இதுபோன்ற காலகட்டங்களில் தவ்பா செய்து அல்லாஹ்سبحانه وتعالىவின் பக்கம் திரும்புவதே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும். சொந்தபந்தங்களுக்கு உபகாரம் செய்தல்,நெருங்கிய உறவினர்களை சந்தித்தல் போன்ற நல்ல காரியங்களில் ஆர்வம் காட்ட மறந்து விடக்கூடாது. குறிப்பாக ஏழைகள்,தேவையுள்ளோர், அனாதைகள் ஆகியோர் மீது கருணை காட்டி அவர்களுக்கு உபகாரம் செய்து இந்த நாட்களில் அவர்களின் மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவச் செய்ய வேண்டும்.
நாம் அனைவரும் வாய்மையுடனும் தூய்மையுடனும் இறைவனை வணங்கிவழிபட்டு அவனது அன்பையும், அருளையும் பெற முயல்வோமாக.எல்லாம் வல்ல அல்லாஹ்سبحانه وتعالى நம் அனைவருக்கும் அருள்புரிய போதுமானவன்!
நன்றி தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக