சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சலீம். நிர்ர்மல் குமாரின் இயக்கத்தில் விஜய்ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார்.
அப்பா, அம்மா இல்லாத சலீம் (விஜய் ஆண்டனி) தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை
பார்த்து வருகிறார். நேர்மையான எண்ணமும் எந்த பிரச்சனைக்கும் செல்லாமலும் சமூக அக்கறையுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கும் நாயகியான நிஷா(அக்ஷா)வுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதன்பின் இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள்.
இவர்கள் பழகியதில் சலீமின் குணாதிசயங்கள் நிஷாவிற்கு பிடிக்காமல் போகிறது. இதனால் நிஷா, சலீமை திருமணம் செய்ய மறுக்கிறார். இதற்கிடையில் சலீம் வேலை செய்யும் மருத்துவமனையின் நிர்வாகம் நோயாளிகளிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்கிறது. இதற்கு துணைப் போகாத சலீமை வேலையை விட்டு தூக்கிவிடுகிறார்கள்.
நேர்மையாக வாழ்ந்ததற்கு பரிசாக வேலையை விட்டு நீக்கப்பட்டதும், தனக்கு மனைவியாக வரவேண்டிய நிஷா தன்னை தூக்கி எறிந்ததையும் நினைத்து மனவேதனை அடைகிறார். இதனால் நேர்மையை தூக்கிப்போட்டு விட்டு தன் இஷ்டத்திற்கு வாழ நினைக்கிறார் சலீம். இதனால் என்ன நடந்தது? அவர் அடைந்த இலக்கு என்ன? என்பதே மீதிக்கதை.
சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சிக்கப்படும் காட்சியானது; சலீமிடம் ஒரு போலிஸ் அதிகாரி கேட்கிறார் சலீம் நீ அல்கொய்தாவா? இந்திய முஜாஹிதா? சிமியா? என்று கேட்கிறார் அதற்கு சலீம் சொல்கிறார் சலீம் என்று பெயர் வைத்தாலே தீவிரவாதியா? அப்படி என்றால் என்னை ஒரு விஜயாகவோ ஆண்டனியாகவோ இருந்தால் என்ன சொல்வீர்கள் என்று. இதன் மூலம் முஸ்லிம் பெயர் வைத்தாலே தீவிரவாதியா? என்று அழகாக கேட்டுள்ளார் விஜய் ஆண்டனி. மொத்தத்தில் சலீம் படம் ஆபாசம், சமூக சீரழிவு ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்படும் கதைகளுக்கு மத்தியில் சலீம் படத்துக்கு பாராட்டுக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக