Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

முஸ்லிம்களின் தொலைக்காட்சி விவாதம்... !


முஸ்லிம் சமுகத்திற்கு பொதுவான ஒரு ஊடகம் இல்லை என்பது வேதனையான விஷயம். அவ்வப்போது முஸ்லிம் தலைவர்கள் விவாத அரங்கில் கலந்து கொண்டு நமது நியாயங்களை சொல்வார்கள்.முஸ்லிம் சமுகம் உலகளவில் படும் இன்னல்கள் குறித்தும் முஸ்லிம்களுக்கு நீதி கிடக்காமல் இருக்கும் முஸ்லிம்கள் மீதுள்ள நியாயங்கள் குறித்து பேசுவார்கள்.முஸ்லிம் சமுகத்திற்கு மட்டும் இவர்கள் குரல் இருக்காது நமது தொப்புள் கொடி உறவுகளான தலித் சகோதரர்களுக்கும்,அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்களின் நியாயங்களுக்காக குரல் கொடுப்பவர்கள் விவாத களத்தில்.குறிப்பாக பேரா: ஜவாஹிருல்லாஹ் MLA அப்துல் சமது(தமுமுக),ஹாஜா கனி(தமுமுக)ஆளூர்ஷா நவாஸ்(சமுக ஆர்வலர்)K.M.ஷரிப் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்கள் விவாதங்கள் நமக்கு ஒரு ஆறுதலை தரும். இன்னும் சில நபர்கள் விவாதங்களை எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு கூட தெரிந்த கருத்துக்கள் கூட சொல்லாமல் சொன்னதையை மீண்டும் மீண்டும் சொல்லி கொள்வார்கள்(நோட் பட் கட்சி). 

"ஒரு இஸ்லாமிய தலைவர் இருக்கும் போது எதிரணியில் இருக்கும் ஒருவர் குரான் தீவிரவாதத்தை போதிக்கிறது என்று சொல்கிறார் நம்ம இஸ்லாமிய தலைவர் மவுனமாக இருக்கிறார்.நாம் அந்த இடத்தில் இருந்திருந்தால் அந்த வார்த்தைக்கு மறுப்பு கொடுத்திருப்போம்.குரான் உலக மக்களுக்கு அமைதியை கற்றுகொடுக்கும் ஒரு வேதம் என்பதை நாம் அங்கே நிருபித்து இருப்போம்.ஆனால் இந்த தலைவர் அமைதியாக இருக்கிறார்.எதுக்குன இந்த மவுனம் என்று ஒருவர் தொலைப்பேசியில் கேட்டபோது சமுக நல்லிணக்கத்திற்கு அமைதியாக இருந்ததாக சொல்கிறார்..."

அந்த அரமணி நேரம்,ஒரு மணி நேரம் இந்த சமுகத்தின் மீதான அடக்குமுறைகளை சொல்லும் ஒரு வாய்ப்பு நமக்கு...ஒன்னும் தெரியாமல் நமது முகமும் டிவியில் வரவேண்டும் நாமளும் ஹீரோவாக வேண்டும் என்று தயவு செய்து செல்லாதீர்கள்..உங்களை விட விவாத அரங்கில் திறமையாக பேசுவதற்கு பலர் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் காட்டிவிட்டு ஒதுங்கிவிடுங்கள். 

விவாத தொலைக்காட்சிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் முஸ்லிம் இயக்க தலைவர்கள்,முஸ்லிம் சமுக ஆர்வலர்கள்,முஸ்லிம் இலக்கியவாதிகள்,முஸ்லிம் எழுத்தாளர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் நீங்கள் அவர்களை அழையுங்கள்.குறிப்பாக தமுமுக, TNTJ,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,INTJ இன்னும் குறிப்பிட்ட சில அமைப்புகளில் நல்ல பேச்சாளர்கள் இருகிறார்கள் அவர்களுக்கும் வாய்ப்புகள் தாருங்கள்.
 கட்டுரை  : Editör Alaudeen.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக