பூச்சிகளால் எப்போதும் தொல்லைதான். அதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இத்தொல்லை அதிகம். ஆனால் சுத்தம், சுகாதாரத்துக்குப் பேர் போன்ற மேற்கத்திய நாடுகளில் பூச்சிகளின் தொல்லை குறைவாக இருக்கும் என்று நாம் எண்ணுவோம். நிஜத்தில் நிலைமை அப்படியில்லை என்பதை பிரான்ஸ் காட்டுகிறது.
அந்நாட்டில் வழக்கத்துக்கு அதிகமாக மூட்டைப்பூச்சிகள் நிறைந்துள்ளதாகவும், இதனால் அந்நாட்டு நகரங்களில் மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பரவி வரும்
மூட்டைப்பூச்சிகளால் பிரான்ஸ் சுகாதாரத் துறை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து பூச்சியியல் வல்லுநர் டாக்டர் பாஸ்கல் கூறுகையில், பிரான்சில் கடந்த 1990–ம் ஆண்டு முதல் மூட்டைப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது, ஆனால் அவை தற்போது முன்னர் இல்லாத அளவுக்குப் பெருகியுள்ளன என்கிறார்.
தற்போது, மூட்டைப்பூச்சிகளுக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போர் தொடுத்துள்ளனர். படுக்கை, தலையணை, ஆடைகள் போன்ற மென்மையான பொருட்களில் வாழ்ந்து வரும் இந்த மூட்டைப்பூச்சிகளைக் கண்டுபிடிக்க மோப்பநாய்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன.
அதோடு இவற்றை அழிக்க நீராவி, வேக்குவம் போன்றவற்றையும் மக்கள் உபயோகப்படுத்துகின்றனர். இப்படி பலமுனை தாக்குதல் தொடுத்தும் மூட்டைப்பூச்சிகளின் அராஜகத்தை முற்றிலுமாக ஒழித்தபாடில்லை. ஆக, இந்தக் குட்டியூண்டு தொல்லைக்கு எதிராக மக்களின் கடுமையான போராட்டம் தொடர்கிறது.
நன்றி விகளத்தூர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக