செப்டம்பர் மாத விடியல் வெள்ளியில் சிந்தனை செய் மனமே என்ற கட்டுரையில் இருந்து இணையத்தை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சொல்லியதில் இருந்து எடுக்கப்பட்ட செய்தி இது ஐந்தாயிரம் ரூபாய்க்கு சுமார்ட் போனும் ஐந்து ரூபாய்க்கு இண்டர்நெட்டும் கிடைக்கும் நமது நாட்டில் இன்று பெரும்பான்மையினர் இணையத்தோடு இணைந்துள்னர் ஏ.சி.அறையில் ஓசி இன்டர்நெட்டில் என்னை போன்றவர்கள் அமர்ந்துக் கொண்டு அனைவரையும் குறை சொல்ல வசதியாக உள்ளது .இணையத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை போராட்ட களத்தில் நிற்கும் மக்கள் நமக்கு படித்து தருகின்றனர் .சமிபத்தில் இஸ்ரேல் காசா மீது மிருக தனமான தாக்குதல்நடத்தியது இதன் கோரத்தை போட்டக்கலாகவும் வீடியோக்களாகவும் பதிவு செய்த பாலஸ்திநியர்களும் அங்கு சென்ற பத்திரிக்கையாளர்களும் அவற்றை உடனடியாக இணையத்தில் ஏற்றினர் விளைவு இஸ்ரேலின் கொடூரங்களை முழு உலகமும் அறிந்து கொண்டது இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலுக்கு எதிர்ப்புகள் பெரிய அளவில் எழுந்ததற்கு இவை முக்கிய காரணம் என்பதை உலகம் மறுத்து விடமுடியாது
எனவே வலிமையான ஆயுதமான இணையத்தை நம்மில் பலரும் குறிப்பாக நாமும் விவேகமாக பயன்படுத்தி சமுதாயத்திற்கும் தேசத்திற்கும் பலன் அளிப்பவர்களாக வாழ்வோம் .தேவையற்ற பதிவுகளை ஏற்றி வம்பை விலைக்கு வாங்குவதை தவிர்ப்போம்
நன்றி
விடியல் வெள்ளி
தமிழ் மாத இதழ்
Good masage
பதிலளிநீக்கு