Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 29 செப்டம்பர், 2014

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிட மாட்டேன்-நரேந்திர மோடி !

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிட மாட்டேன். வழக்கை சட்டப்படி நடத்துங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு சரியானது என்று நினைக்கிறீர்களா?
இந்த வழக்கின் ஆரம்ப காலத்திலேயே தகுந்த உண்மை யான ஆதாரங்களை முன்வைத்து தான் மனு தாக்கல் செய்திருந்தேன். வழக்கில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று ஆரம்பத்திலேயே தெரியும். தீர்ப்பு சரியானபடியே வந்துள்ளது. இது நான் எதிர்பார்த்த தீர்ப்புதான். ஆனால் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது.

இந்த வழக்குக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் எப்படிப்பட்டவை?
இந்த வழக்கைப் பொறுத்தவரை ஆதாரங்களை திரட்டுவதுதான் எனக்கு மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர் என்பதால் இதை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றதே மிகப்பெரிய போராட்டம் என்று சொல்லலாம். நிறைய பிரஷர்கள், சமரச முயற்சிகள் எல்லாம் நடந்தன. ஆனாலும், வழக்கை வாபஸ் பெறுவது என்ற நிலைக்கு செல்லவே இல்லை.
தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே?
உடல்நலத்தை காரணம் காட்டி அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். இதன்பேரில் ‘அவர் சிறையில் இருக்கக்கூடாது. மருத்துவமனையில் அனுமதிக் கப்பட வேண்டும்’ என்றுகூட தீர்ப்புகள் வரலாம். ஆனால், மேல்முறையீட்டில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு சாதாரணமாக கிடைத்துவிடக் கூடாது.
இந்த வழக்கின் தீர்ப்பு, அதிமுக என்னும் பேரியக்கத்தின் ஸ்திரத்தன்மையை அசைத்துள்ளதாக கருதுகிறீர்களா?
அப்படியில்லை. இந்தியா ஜனநாயக நாடு. தற்போது நாட்டில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. ஆரம்பத்தில் நான்கூட, இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு மோடி ஏதாவது உதவி செய்வாரோ என்று நினைத்தேன். ஆனால், ‘வழக்கில் நான் தலையிட மாட்டேன். எல்லாம் சட்டப்படி நடக்கட்டும்’ என்று அவரே என்னிடம் கூறினார். இனி ஊழல் செய்பவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.
தமிழகத்தில் உங்களுக்கு எதிரான சூழல் அதிகரித்து வருகிறதே?
தமிழகத்தின் சில இடங்களில் சமூக விரோதிகள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் பேசினேன். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறினேன். அரசியலமைப்புச் சட்டத்தின் 256-வது ஷரத்தின்கீழ் தமிழக ஆளுநருக்கு உள்துறை அமைச்சர் சில ஆலோசனைகளை அனுப்பியுள்ளார். அதன் அடிப் படையில் சட்டம் – ஒழுங்கை நிலைநிறுத்த ஆளுநர் உத்தர விட்டுள்ளார். இப்போது தமிழகத்தில் அமைதியான சூழல் உருவாகியுள்ளது.
2ஜி வழக்கு தீர்ப்பு எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ஜெயலலிதா வழக்கு தீர்ப்பைப் போலவே 2ஜி வழக்கிலும் ராசா, கனிமொழி உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் தண்டனை பெறுவது நிச்சயம். இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், என்னிடம் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை சேர்க்க மறுத்தது. வலுவான ஆதரத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வழக்கில் இருந்து ப.சிதம்பரம் தப்ப முடியாது.
சோனியா, ராகுல் மீதான ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் உங்களின் அடுத்தகட்ட செயல்பாடு என்ன?
இந்த வழக்கு குறித்த என்னுடைய வாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரும் 1-ம் தேதி நடக்கவுள்ளது. அப்போது தகுந்த ஆதாரங்களை எடுத்து வைப்பேன். தீபாவளி முடிந்து டிசம்பரில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக