தகவல் :சவுதியில் இருந்து நமது நிருபர்
செவ்வாய், 31 ஜூலை, 2012
“ஒளரங்கசீப்”பின் உணர வைக்கும் உயில் !
முகலாய மன்னர்களில் நீண்டகாலம் ஆட்சிப் புரிந்தவர் ஒளரங்கசீப். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ( 1657 – 1707 ).
'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னங்கள் எல்லாம் கட்டக்கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்கக்கூடாது. நான் குல்லாக்கள் தைத்து விற்ற பணம் 4 ரூபாய் 2 அணா. தலையணைக்கடியில் இருக்கிறது. என் உடலைப் போத்துவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துங்கள். அந்தப் பணத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்தவித ஆடம்பரமும் கூடாது. இது போக திருக்குர்ஆன் எழுதி, விற்றுச் சேர்த்த பணம் ரூ. 350 என் கைப்பையில் உள்ளது. அது புனிதமான பணம். அதை ஏழைமக்களுக்கு கொடுத்துவிடுங்கள்'.
'என் கல்லறை அழகோ ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் எளிமையாக மண்ணால் மூடப்பட வேண்டும். ஊர்வலமோ இசை போன்றவையோ எதுவும் கூடாது. கல்லறையில் பசுமையாக செடிகள் வளரட்டும்' என்று எழுதியிருந்தார்.
உடல் மிகவும் மோசமான வேளையிலும் தவறாமல் தொழுகை நடத்தினார். குர்ஆன் படித்தார். இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.
1707, மார்ச் 3, அஹமத் நகரில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில் படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி : ஒளரங்கசீப் வரலாறு
படம் : கூகிள்
'நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னங்கள் எல்லாம் கட்டக்கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்கக்கூடாது. நான் குல்லாக்கள் தைத்து விற்ற பணம் 4 ரூபாய் 2 அணா. தலையணைக்கடியில் இருக்கிறது. என் உடலைப் போத்துவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துங்கள். அந்தப் பணத்திற்கு மேல் செலவழிக்கக் கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்தவித ஆடம்பரமும் கூடாது. இது போக திருக்குர்ஆன் எழுதி, விற்றுச் சேர்த்த பணம் ரூ. 350 என் கைப்பையில் உள்ளது. அது புனிதமான பணம். அதை ஏழைமக்களுக்கு கொடுத்துவிடுங்கள்'.
'என் கல்லறை அழகோ ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் எளிமையாக மண்ணால் மூடப்பட வேண்டும். ஊர்வலமோ இசை போன்றவையோ எதுவும் கூடாது. கல்லறையில் பசுமையாக செடிகள் வளரட்டும்' என்று எழுதியிருந்தார்.
உடல் மிகவும் மோசமான வேளையிலும் தவறாமல் தொழுகை நடத்தினார். குர்ஆன் படித்தார். இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தார்.
1707, மார்ச் 3, அஹமத் நகரில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில் படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி : ஒளரங்கசீப் வரலாறு
படம் : கூகிள்
தாருஸ்ஸலாம் பள்ளிவாசல் புதிய தோற்றம்
தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் கீழ் வளாகத்தில் டைல்ஸ் கல் பதித்ததை முற்றிலும் அகற்றிவிட்டு புதியதாக கிரனைட் கல் பதித்திருப்பதை பார்க்கலாம். மேலும் நமதூரில் முதன்முறையாக பள்ளிவாசலில் தொழுமிடத்தில் தொலைகாட்சி இங்குதான் வைத்திருக்கிறார்கள். இதில் பெண்கள் பகுதியில் நேரடியாக வெள்ளிகிழமை பயான் மற்றும் மற்ற பயானை பெண்கள் பார்க்க தோதுவாக வைத்திருக்கிறார்கள். இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால் CCTV கேமராவும் இந்த பகுதியில் பதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிய நிறுவகத்தின் பெயர்களையும் கரும்பலகையில் பொறிக்கப்பட்டு வெளிபள்ளியில் வைத்திருக்கிறார்கள்.
நமது நிருபர்
பள்ளிவாசல் கட்டப்படுமா?
நமதூர் பஸ் ஸ்டாப்பில் புதியதோர் பள்ளிவாசல் கட்டப்படுமா?
நமதூர் தஞ்சாவூர் ஹோட்டல் பின்புறம் காலிமனை ஒன்று மேற்கு பள்ளிவாசலுக்கு சொந்தமாக உள்ளது. இதில் பள்ளிவாசல் கட்டினால் அங்குள்ள கடைவாசிகளுக்கும், பயணிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால் அந்த நிருவாகதிடமும் இதைப்பற்றி கோரிக்கையையும் வைத்துள்ளார்கள். பொதுமக்களின் நலனைகருதி நன்மையை எதிர்பார்த்து அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டித்தரவேண்டும். அப்படி கட்டித்தரும் போது நமதூர்மக்கள் அனைவரும் இதில் ஒன்றிணைந்து மேற்கு கிழக்கு என்று பார்க்காமல் நன்மையைமட்டும் எதிர்பார்த்து நன்கொடை அழித்து உதவும்படி நமது சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது........
நமது நிருபர்
ETA வில் வேலை வாய்ப்பு
The Group would like to recruit fresh graduate engineers (Electrical and Civil) and diploma engineers (Mechanical and Electrical) for their ongoing projects in UAE and Saudi Arabia.
Interested candidates should meet the following selection criteria,
Graduate Engineers:
1. Should have passed with 1st Class and history arrears should not exceed six
2. Should have valid India passport
3. Good communication skills in English
Diploma Engineers:
1. Should have passed with 1st Class
2. Should have valid India passport
3. Good communication skills in English
Eligible candidates should send their CVs along with Semester wise marks sheets and provisional certificate to the following Email ID:etahrdtech@gmail.com
திங்கள், 30 ஜூலை, 2012
குர்ஆனில் விஞ்ஞானம்
கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்-) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்- பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம் உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்- பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்- (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்- இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்- அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. அல்குர்ஆன் 22:5
பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்- பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்- பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்- பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்- பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். அல்குர்ஆன் 23:14
இவ்வசனத்தில் கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது 'பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் இரண்டு மூன்று மாதங்கள் அவற்றுக்கான வடிவத்தை பெருவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.
இதைத் தான் 'பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்?
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி
இரெனா ஹன்டோனோ Irena Handono
நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு
கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றே...ார்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.
சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.
பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.
''இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்'' என்று எங்களுக்கு விளக்கினார்கள்.
இந்தோனேசியாவில்,
* ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
* முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
* வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
* ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
* தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் ''இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்'' என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், ''நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்'' என்று கூறினேன்.
சனி, 28 ஜூலை, 2012
பிரேசிலில் மிக வேகமாக வளரும் இஸ்லாம்!
ரியோடி-ஜெனீரா:பிரேசிலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரேசிலின் ரியோடி ஜெனீரா நகரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது.
பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட பிரேசில் சமூகம் இஸ்லாத்தின் பால் கவரப்படுவதற்கோ, இஸ்லாத்தின் சின்னங்களை அணிவதற்கோ எவ்வித தடைகளையும் விதிப்பதில்லை என இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இளம்பெண் ஃபாத்திமா கூறுகிறார்.
அஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொலை!
குவஹாத்தி:ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.
கூவமாக மாறிவரும் நமதூர்
நமதூரில் பாதாள சாக்கடை இல்லாதமையால் வாய்க்கால் நீர் அசுத்தமாகி வருகிறது. இதனால் அந்த ஓரங்களில் குடியிருப்பவர்களுக்கும், அந்தவழியாக சென்றுவருபவர்களுக்கும், மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த நிலை நீடித்தால் நமதூரில் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை உடனடியாக அரசாங்கத்திடம் சேர்க்கும் விதத்தில் சேர்த்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், பாதாள சாக்கடை திட்டம் உடனடியாக அமுலுக்கு கொண்டுவரும்படியும், நமதூர் பஞ்சாயத் அலுவலர் பரமேஸ்வரியையும், துணை தலைவர் பாரூக் அவர்களும் முயற்சி எடுப்பார்களா? என்பது நமதூர் கவுன்சிலர்களுக்கே தெரியாமல் இருப்பது நமக்கு வேடிக்கையாக உள்ளது.
நடப்பு தலைவர் பாரூக் அவர்கள் இந்த பாதாள சாக்கடை திட்டத்தை முன்னிருத்திதான் நமதூர் மக்களிடையே ஒட்டு சேகரித்தார், ஜமாஅத் ஆதரவோடும் வெற்றியும் பெற்றார். ஆகையால் பொதமக்கள் விடும் கோரிக்கை என்னவென்றால், சொன்ன வாக்குறுதியில் இந்த திட்டத்தை மட்டும் அமுல்படுத்தி நமதூருக்கு பதலசாக்கடை திட்டம் ஏற்படுத்தி தந்தாலே போதும், வேறு எதுவும் வேண்டாம் என்பது நமதூர் பாமர மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதை சம்மந்த பட்ட அவர்கள் நமதூர் இரண்டு ஜமாதுக்களையும் அழைத்து பொதுமக்களின் முன்னிலையில் இத்திட்டம் எந்தநிலையில் உள்ளது, மேற்கொண்டு எப்படி அமுல்படுத்துவது என்று பேசி முடிவெடுத்தால் மட்டுமே இதை அமுல்படுத்த முடியும் என்பது நமது கருத்தாக உள்ளது.
நமது நிருபர்.
வெள்ளி, 27 ஜூலை, 2012
தவ்ஹீத் மர்கசுடைய கஞ்சி
நமதூர் தவ்ஹீத் மர்கசுடைய நோன்பு திறக்கும் இப்தார் கஞ்சி தமிழகம் தெரியும் அளவிற்கு தண்ணீராக உள்ளது என்று பொதுமக்கள் கூறினார்கள். இதை நமது நிருபர் ஆராய்ந்து பார்த்ததில் உண்மை என்று தெரியவந்தது. பொது மக்கள் கொடுக்கும் பணத்திற்கு நிறைய அரிசி போட்டு சிறந்த முறையில் கஞ்சி செய்தால் நல்லது என்று நோன்பு திறக்க வருபவர்களும் கஞ்சி வாங்கி செல்பவர்களும் கூறுகின்றனர்.
இதில் நாம் உணவை (கஞ்சியை) குறைகூறவில்லை. மாறாக சிறந்த தரத்தோடு சுவையோடும் வைத்தால் பொதுமக்களுக்கு நல்லது என்றுதான் குறிப்பிடுகிறோம். என்னென்றால் இந்த கஞ்சி பொதுமக்களுடைய பணத்திலிருந்து தயார்செயயப்பட்டது என்பதை நாம் உணரவேண்டும்.
நமது நிருபர்.
வியாழன், 26 ஜூலை, 2012
ஹலாலான உழைப்பின் சிறப்பு
இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.
உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
மாற்றுத்திரனாளிகளை பள்ளிக்கூடம் சேர்ப்போம் !
மாற்றுத்திரனாளிகளை பள்ளிக்கூடம் சேர்ப்போம் பேரணி இன்று பேருந்துநிலையம் சந்தைத்திடலில் உள்ள பள்ளிகூட குழந்தைகளும் ஆசிரியர்களும் இணைந்து நமதூர் முழுவதும் வலம்வந்தனர். இந்த பேரணி அந்த பள்ளிகூடத்தில் தொடங்கி கிழக்கு மைன்ரோடு வழியாக கிழக்கு நடுத்தெரு உள்ளேசென்று மேற்கு மைன்ரோடு வழியாக பள்ளிக்கூடம் சென்றடைந்தது இதை கடைக்காரர்களும் மற்றும் பொதுமக்களும் ஆர்வத்தோடு பார்த்தனர்.
நமது நிருபர்.
பாதையை சரிசெயவார்களா?
பிலால் பள்ளிவாசல் எதிரே துபாய் அவதார் நகை கடை அருகே உள்ள சந்தில் பொதுமக்களுக்கு அபாயம் விளைவிக்ககூடிய வகையில் பாதைஉள்ளது இதை தினமும் பார்க்கும் பஞ்சாயத் அலுவலரும் அந்த ஏறிய கவுன்சிலரும் கண்டும் காணாமல் இருப்பது பொதுமக்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. இந்தவையாக பள்ளி குழந்தைகளும் பொதுமக்களும் வாகனத்தில் செல்லமுடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள், இதை உடனடியாக சரி செய்வார்களா சம்மந்தப்பட்டவர்கள்.
நமது நிருபர்.
கைதானால் , காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி ?
பிடிப்பானை வழக்குகளில் , பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து , அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் ( குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 71 ).
சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும் , பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும் , பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.
ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு , பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு ( குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436 ).
புதன், 25 ஜூலை, 2012
இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்! – நீண்ட ஆய்விற்கு பிறகு அமெரிக்க பேராசிரியர் தகவல்!
வாஷிங்டன்:உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராக கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் தாம் இயேசு முஸ்லிம் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறார். was jesus a muslim? என்ற தனது புதிய நூலில் அவர் இதனை தெளிவுப்படுத்துகிறார்.
எங்கள் நோன்பு ஏற்றுக்கொள்ளப்படுமா..???
சவுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்திய ஒரு மார்க்க
அறிஞரிடம் சோமாலியாவை சேர்ந்த ஒரு நபர் கேட்ட கேள்வி நாங்கள் சுஹூர்(நோன்பு
இருப்பதற்காக உண்ணும் உணவு) மற்றும் இப்தார் (நோன்பு திறப்பு) நேரத்திலும்
உண்ணாமல் இருக்கிறோம் எங்கள்
நோன்பு
ஏற்றுக்கொள்ளப்படுமா..???
இந்த கேள்வியை கேட்டதும் அந்த அறிஞர் அழுதுவிட்டார்......
செவ்வாய், 24 ஜூலை, 2012
ஓர் வேண்டுகோள்.நல்ல தலைமையை மட்டுமே தேர்ந்தெடுப்போம் !
அன்பான முஸ்லிம் சமுதாயத்திற்கு ஓர் வேண்டுகோள்.
தயவுசெய்து தங்கள் இயக்கம் (ஜமாஅத்) பெரியதா? அல்லது உங்கள் இயக்கம் பெரியத என்று வீண் விவாதம் செய்யவேண்டாம். ஏனென்றால் தங்களின் பேச்சு திறமாலும், அறிவுதிரமையாலும் எதிரே உள்ளவர்கள் தோற்றுப்போகலாம். ஆனால் வெற்றிபெற்றவர்கள் யார் என்பதை அல்லாஹ் தான் முடிவுசெய்யவேண்டும்.
இப்படி மற்றவர்களையும் கேவலபடுத்தி தங்களைதாங்கலேவும் கேவலபடுத்தி கொள்ளவேண்டாம்.
நல்ல தலைவர் யார் என்பதை தேர்ந்தேடுபீர்! இப்படி அநியாயக்காரர் யார் என்பதை தெர்தேடுக்காதீர்! இதன் மூலம் நமக்குள் பகமைதான் வளரும்.
உங்களிடையே கருத்து வேறுபாடு இருந்தால் அழகிய முறையில் விவாதம் செயுங்கள் - (திருக்குர்ஆன்)
நமது நிருபர்
லப்பை பைத்துல்மால் நிர்வாக குழு
அஸ்ஸலாமு அழைக்கும்
நமதூரில் லப்பை பைத்துல்மால் நேற்றைய முன்தினம் நிர்வாக குழு கூடியது. இதன்மூலம் ஒரு சில முடிவுகளும் எடுக்கப்பட்டது.
* நமதூரில் இருக்ககூடிய வி ஐ பி களிடம் பணம் வசூல் செய்து ஏழை எளிய மக்களுக்கு உதவுதல்.
* வெளிநாடுகளில் இருக்ககூடிய நமதூர் வி ஐ பி களிடம் பணம் வசூல் செய்து வட்டியில்லா கடன் திட்டத்தை அமுல்படுத்துவது.
போன்ற போன்ற செய்திகள் பேசப்பட்டது.
வெளிநாடுகளில் இருக்ககூடிய நமதூர் வாசிகள் இந்த விசயத்தில் தொடர்புக்கொள்ள ராயல் சம்சு, மெடிகல் இல்யாஸ், மற்றும் லிம்ரா ப்ரொவ்சிங் செனட்டர் நூருல்லாஹ் அவர்களை நியமனம் செய்துள்ளார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் இவர்களை தொடர்புகொண்டு மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
நமது நிருபர்
குழந்தை கடத்தல் திருடி நமதூரில் பிடிபட்டாள்.
பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை தங்கள் குழந்தைகள் பற்றி அல்லது வேறு யார்குலந்தைகள் பற்றியும் ஆள் தெரியாத நபர் விசாரித்தால் அவர்களிடம் கூறவேண்டாம் என கேட்டுகொள்ளபடுகிறது.
திருமாந்துறை கைகாட்டியில் நமது முஸ்லிம் பெண்ணிடம் தங்கள் குழந்தையை பற்றி ஆள் தெரியாத ஒருவள் எங்கே படிக்கிறது எப்போது பள்ளி செல்லும் என்று விசாரித்தாள். அந்த குழந்தையின் தாய்க்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டது. அந்த குழந்தை நமதூரில் உள்ள ஒரு பள்ளிகூடத்தில் படிப்பதை அறிந்த அவள் அந்த குழந்தை செல்லும் பேருந்திலேயே ஏறிக்கொண்டாள். இதை பார்த்து நன்கு சந்தேகம் அறிந்த அந்த குழந்தையின் தாய் அடுத்த மினி பேருந்திலேயே அவளையும் அந்த குழந்தையையும் பின் தொடர்ந்தார்கள்.
ஃபலஸ்தீனர்களுக்கு விசா இல்லாமல் எகிப்தில் நுழைய அனுமதி!
கெய்ரோ:எவ்வித ஆவணங்களும் இல்லாமல் வருகை தரும் ஃபலஸ்தீன் மக்கள் எகிப்தில் நுழையவும், தங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை காலை முதலே ஏர்போர்ட்டுகளிலும், இதர இடங்களிலும் ஃபலஸ்தீன் மக்கள் விசா இல்லாமலேயே நுழைய துவங்கியுள்ளனர். கெய்ரோ ஏர்போர்டின் பாதுகாப்பு பிரிவு இத்தகவலை தெரிவித்துள்ளது. வெறும் பாஸ்போர்ட் மட்டுமே பரிசோதித்து அதில் ஸ்டாம்ப் செய்யப்படுகிறது.
டென்மார்க்கில் 21 மணிநேர நோன்பு!
கோபன்ஹெகன்:டென்மார்க்கில் முஸ்லிம்கள் இவ்வாண்டு 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். உலகிலேயே அதிக மணிநேரம் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் ஆவர்.
அதேவேளையில் அர்ஜெண்டினாவில் வாழும் முஸ்லிம்கள் 9 மணிநேரமே நோன்பை நோற்கின்றார்கள். லத்தீன் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு என்பதால் இவர்களுக்கு உலகிலேயே குறைந்த அளவே நோன்பு நோற்றால் போதும். ஏனெனில் இங்கு பகல் குறைந்த நேரம் ஆகும்.
திங்கள், 23 ஜூலை, 2012
குட்டி கருத்து கதை
ஒரு ஊரில் அண்ணன் தம்பி இவர்கள் இருந்தனர். இவர்கள் குடும்பங்களில் பல வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. காரணம் அண்ணன் ஒரு ஜமாஅத் தம்பி ஒரு ஜமாஅத்.
ஆனால் இவர்களும் ஒரே கட்சியில் தான் பல வருடங்களாக இருக்கின்றனர். ஒருநாள் இவர்களுடைய கட்சி தலைவருக்கு அவமானம் இகழ்ந்தமையால் இருவரும் ஒரே கட்சியில் ஒரே இடத்தில் அவர்களுடைய கட்சிக்காக போராடுகின்றனர். இதில் அவர்களை காவல்துறை கைது செய்து சிறைசாலையில் அடைதானர்.
அந்த சிறைசாலையில் ஒரு மார்க்க பற்றுள்ள ( தவறான தீர்ப்பு மூலம் சிறைக்கு வந்த ) நபர் அந்த இரண்டு நபர்களையும் சந்தித்தார்.
அவர்களின் குடும்பங்களையும் பற்றி நான்றாக தெரிந்து கொண்டார். பிறகு அவர்களிடம் எதற்காக நீங்கள் சிறைக்கு வந்தீர்கள் ? என்று கேட்டார் அவர்கள் இருவரும் என்னுடைய கட்சிக்காக என்றனர். அப்போது மார்க்க பற்றுள்ள அந்த நபர் கேடற்றார் என்றைகாவது உங்கள் ஜமாதுக்காக, இஸ்லாத்திற்காக, நம்மை படைத்த அல்லாஹ்விற்காக வேண்டி நீங்கள் ஒன்றினைதீர்களா ?
அவர்கள் இருவரும் (அவமானத்தில்) ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.
அவர்சொன்னார் நீங்கள் யாருக்காக சிறைசாலை வந்தீர்களோ அவர்கள் மூலம் உங்களுக்கு (அல்லது) உங்கள் குடும்பங்களுக்கு என்ன நன்னமை ஏற்பட்டது? ஆனால் அல்லாஹ்விற்காக நீங்கள் அன்புகூர்ந்து அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொன்னாலே அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் நன்மையை கொடுப்பான்.
அல்லாஹ்விற்காக உங்கள் இரு ஜமாத்துக்கள் மூலம் நீங்கள் ஒன்றிணைத்தால் நமது சமுதாயத்திற்கு இம்மையிலும் வெற்றி மறுமையிலும் வெற்றிகிடைக்கும் என்றார்.
அவர் கூறிய அடுத்த சில வினாடிகளில் உடனே இருவரும் சலாம் கூறி முந்தி கொண்டனர். ( ஒற்றுமையோடு விடைபெற்றனர்)
அந்த மார்க்க பற்றுள்ள நபருடைய பணிகள் அந்த சிறைச்சாலை முழுவதும் தொடர்ந்தாது.
ஒரு முஸ்லிம் இருந்தாலும் ஆயிரம் நன்மை இறந்தாலும் ஆயிரம் நன்மை!
நமது நிருபர்
ஞாயிறு, 22 ஜூலை, 2012
நிகாப் அணிந்த பெண்கள் நடத்தும் தொலைக்காட்சி சானல்: எகிப்தில் மாறும் காட்சிகள்!
கெய்ரோ:நிகாப் அணிவது அடிமைத்தனம் என்று எங்களை அவமதிப்பதால் நாங்கள் என்ன வீடுகளில் சென்று ஒடுங்கி விடுவோமா? எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்கள் எகிப்தின் துணிச்சல் மிக்க முஸ்லிம் பெண்கள்.
முகம் முதல் கால்பாதம் வரை மறைக்கும் புர்கா அணிந்த பெண்கள் அரபுலகில் நடந்த, நடக்கும் புரட்சிகளில் முக்கிய பங்கினை ஆற்றியதை நாம் கண்டுவருகிறோம். எகிப்திலும், யெமனிலும், லிபியாவிலும் தற்பொழுது சிரியாவிலும் புரட்சிகளில் நிகாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் பங்காற்றி வருகின்றார்கள்.
அரபு வசந்தத்தின் இறுதி மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலையாக அமையும்! – இஸ்மாயீல் ஹானிய்யா!
காஸ்ஸா:அரபுலகில் நடந்துகொண்டிருக்கும் வசந்த புரட்சிகள் தற்போதைய சூழலுடன் ஒடுங்கிவிடும் என கருத வேண்டாம் என ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காஸ்ஸாவில் உள்ள மஸ்ஜிதுல் அமீனில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியது:
சனி, 21 ஜூலை, 2012
சுவனத்தில் வாசல்கள் திறக்கின்றன!
“உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். வளமான மேன்மையான நகரமும் உண்டு; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (சூரா ஸபா:15-வது வசனம்)
சிறந்த மனிதர், சிறந்த சமூகம், சிறந்த தேசம், கருணையான இறைவன் என்ற இஸ்லாத்தின் சித்தாந்தத்தை விவரிக்கும் திருக்குர்ஆன் வசனத்தை தான் மேலே கண்டோம்.
பழுதடைந்த மின்கம்பம்....
நமதூர் கிழக்கு 6ஆம் நம்பர் வாடு கவுன்சிலர் தாஜுதீன் அவர்கள் பழுதடைந்த மின்கம்பதினை சரிசெய்ய வேண்டி அரசு மின் ஊழியர் அவர்களோடு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கம்பம் ஆசியா குழந்தைகள் பள்ளி அருகாமையில் உள்ளது. அந்த கம்பம் முற்றிலும் கீழே அரித்து சாய்ந்து கொண்டே வருகிறது.
வாடு கவுன்சிலர் வீட்டின் அருகிலேயே ஆபத்தை விளைவிக்ககூடிய இப்படிப்பட்ட கம்பம் இருந்தால் அதை பார்த்துகொண்டு சும்மா இருப்பாரா ? அல்லது மக்கள்தான் சும்மா விடுவார்களா ?
பேச்சுவார்த்தை முடிவில் அரசு அலுவலர் கான்கிரீட் கொண்டு இதை நாங்கள் உடனடியாக சரிசெய்து விடுகிறோம் புதியகம்பம் பிறகு வைக்கிறோம் என்று உறுதி அளித்தனர்.
அரசு அலுவலர் அலட்சியமாக இருந்தாலும் இப்படிப்பட்ட கவுன்சிலர் அவர்களை பணி முடிக்கும் வரை தொந்தரவு செய்வார்கள் என்பது பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
நமது நிருபர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)