சனி, 31 மே, 2014
வாசிப்பு நம் சுவாசிப்பு!
கல்வித் தேடல் என்பது முஸ்லிம்களின் கடமை. இக்கடமையின் தொடக்க நிலை வாசிப்பும் எழுத்துமாகும். வாசிக்காத சமூகம் தனது வெற்றியைப் பற்றி யோசிக்க முடியாது.
வலைத்தளங்களின் வளர்ச்சியினாலும், முகநூல் போன்ற சமூகத் தளங்களின் ஆதிக்கத்தினாலும் இன்று வாசிப்புப் பழக்கம் வெகு வேகமாக விடைபெற்று வருகிறது. பிறரிடம் கேட்டு அறிந்து கொள்வதும், அத்தோடு தங்களது அறிவுத் தேடலை போதுமாக்கிக் கொள்ளும்
வரம்பு மீறுதல்...
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித்தராத விஷயங்களைச் செய்வதும்சொல்லித்தந்த விஷயங்களில் அவர்கள் கூறாத செயல்களை அதிகப்படியாக செய்வதும் அவர்கள் சொன்ன விஷயங்களுக்கு மாற்றமாக செய்வதும் வரம்பு மீறுதலாகும்.
இதைப்பற்றி அல்லாஹ் தான் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும்,பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை.அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கேட்டு விட்டார். குர்ஆன்;33;36
வெள்ளி, 30 மே, 2014
யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்?
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்ற ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபல்யமான நஜ்மா ஹெப்துல்லாஹ்வை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். ஏப்ரல் 13-ம் தேதி 1940ல் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செய்யது யூசுஃப் அலீ மற்றும் பாத்திமா யூசுஃப் அலீ ஆகியோரின் மகளாக பிறந்தார்.
தனது பள்ளிப் படிப்பை மோதிலால் விக்யான் மகாவித்யாலயாவில் (MVM) தொடங்கிய நஜ்மா விலங்கியல் துறையில் இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றவர். அதோடு தல்வார் பல்கலைக்கழகத்தில் கார்டியாக் அனாடமி துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
வியாழன், 29 மே, 2014
எல் நீன்யோ – என்ன செய்யப்போகிறோம்?
எல் நீன்யோ' (El Nino) என்பது பசிபிக் கடல் பரப்பின் மேல் ஏற்படும் ஒருவித வெப்பநிலை மாற்றம். இது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதன் காரணமாகப் பருவமழைக் குறைவு ஏற்படக்கூடிய ஆசிய நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதற்கு முன்பொருமுறை ‘எல் நீன்யோ’ வந்தபோது அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விளைச்சல் கடுமையாகக் குறைந்து, விலை ஏகமாக உயர்ந்ததை அந்த அரசுகள் மறக்கவில்லை. இதனால், மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து சமூக அமைதியும் குலைந்தது.
கஷ்மீர் 370-வது பிரிவு: தொடரும் சர்ச்சை!
புதுடெல்லி:கஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை மனம் மாற செய்யத் தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று நேற்று பொறுப்பேற்ற பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்த கருத்து உருவாக்கிய சர்ச்சை தீவிரமடைந்துள்ளது.
ஜிதேந்தர் சிங், கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ன் நன்மை தீமை குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக நேற்று தெரிவித்தார். அந்த கருத்து பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
புதன், 28 மே, 2014
தியாகத்தின் நிழலில் இஸ்லாம்!
புதிதான கொள்கையின் காற்று வீச தொடங்கிய காலம். சமத்துவமும், சகோதரத்துவமும் என்னவென்றே தெரியாமல் இன்று இந்தியாவில் ஆரிய பாசிச வர்க்கங்கள் கொலை, கொள்ளை, இனவாதத்தின் பெயரில் வீடுகளை சூறையாடுவது, சக மனிதன் என்பதை மறந்து மனிதாபிமானம் என்றால் அதன் நிறம் என்ன என்று கேட்கும் அளவிற்கு கருவில் இருக்கும் குழந்தையை வயிற்றை பிளந்தெடுத்து தீக்கிரையாக்கும் கோரர்களை போன்று கொடியவர்களை கொண்ட அரபு மண் அது.
செவ்வாய், 27 மே, 2014
தாய்மையின் அன்புக்கு 6 அடி உயர சுவர் மட்டுமல்ல எவ்வளவு பெரிய கோட்டையின் சுவர்களையும் தடைகளையும் தகர்க்கும் வல்லமை உண்டு
ஒரு சிறைத்துறை அதிகாரியின் பேட்டியின்போது. சிறையில் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் என்ற கேள்விக்கு அவர் கூறியது
அன்று அதிகாலையிலேயே அந்த சிறைச்சாலை அமளிதுமளிபட்டது காரணம் அந்த சிறையிலிருந்து ஒரு பெண் தப்பிவிட்டாள் ஆறடி உயர தடுப்புசுவற்றை தாண்டி எந்த ஆண்கைதியும்கூட இதுவரை அங்கு தப்பியதில்லை ..
கைதி தப்பி விட்டதால் காவல் பணியில் இருந்த பலருக்கும் தண்டனை கிடைக்க கூடும் என்பதால் சிறை நிர்வாகம் அப்பெண்ணை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது
நரேந்திர மோடி பதவியேற்பு விழா: வகுப்புவாத கோஷங்கள்; உலக தலைவர்கள் அதிர்ச்சி!
நரேந்திர மோடி பதவியேற்பு விழா: வகுப்புவாத கோஷங்கள்; உலக தலைவர்கள் அதிர்ச்சி!
இதுவரை இந்திய பிரதமர்கள் பதவி ஏற்பு விழாவில் இல்லாத நடைமுறையாக நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதன் முறையாக வகுப்புவாத கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது வெளிநாட்டு பார்வையாளர்களையும், விருந்தினர்களையும், மதசார்பற்றவாதிகளையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திங்கள், 26 மே, 2014
ஞாயிறு, 25 மே, 2014
துபாய் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.
துபாய் ட்ராபிக் போலீஸ் விரைவில் Google Glass பயன்படுத்தப் போகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறும் வாகன சாரதிகளது பழைய குற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், தேடப்படும் கார்களின் பின்னணி தகவல்கள் பற்றி அறிந்து கொள்ளவும், Google Glass உதவியாக இருக்கும் என துபாய் போலீஸ் நம்புவதாக, போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது, Google Glass
சனி, 24 மே, 2014
வியாழன், 22 மே, 2014
வசந்த காலம் ஆரம்பம்!
14வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்…!
எது நடக்கக் கூடாது என்று நாம் விரும்பினோமோ அது நடந்து விட்டது. நமது எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் தவிடு பொடியானது. உள்ளம் சோர்ந்து வாடி வதங்கி விட்டது. இறை தீர்ப்பை பொருந்திக் கொள்வதும், பொறுமையை மேற்கொள்வதும், எதிர்காலத்தை பற்றிய திடமான நம்பிக்கையும் மட்டுமே நம் மனக் காயத்திற்கு மருந்து என்பதால் நம்மை தேற்றிக் கொள்கிறோம்.
சட்டக் கல்வி : வழிகாட்டுதலும் சில அறிவுரைகளும்
சமூகம் அல்லது ஓர் நிறுவனத்தின் நன் நடத்தை மற்றும் நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் வழிமுறைகள்தான் சட்டம் எனப்படும். மனிதனை மனிதனாய் வாழ வைக்கவும் மற்றும் நிறுவனங்களின் முறைபடுத்தப்பட்ட இயக்கத்திற்கும் சட்டம் தேவை. அனைவரும் சுதந்திரமாகவும், பாதுகாப்புடனும், நீதியுடனும், சமமாகவும், உரிமைகளோடும், அமைதியாகவும் வாழ்ந்திட சட்டம் வழிவகை செய்கிறது.
நிதியும் நீதியும் :
நூலகம் கொண்டு ஒளி பெறட்டும் நமது இல்லங்கள் !
“கோவில் இல்லாத ஊர்களில் கூட குடியிருக்கலாம், ஆனால் நூலகம் இல்லாத ஊர்களில் குடியிருக்க கூடாது” என்பார்கள். உண்மைதான்! நூலகம் என்பது ஒவ்வொரு ஊர்களிலும் மட்டுமின்றி வீடுகளிலும் இன்றியமையாத ஒன்றாகும். உங்களுக்கு பிடித்த இன்பமான ஒர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது, “என் மனதிற்க்கு பேரின்பத்தை அள்ளி அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே” என்றார்.
முன்போரு காலத்தில் எல்லா ஊர்களிலுமே நூலகம் இருந்தது.
புதன், 21 மே, 2014
செவ்வாய், 20 மே, 2014
வாக்குப்பதிவு இயந்திரத்தில் எண்ணிக்கையை திரிக்க முடியும் – அமெரிக்க விஞ்ஞானிகள்!
இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்ற மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை திரிக்க வழி கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் மின்னணு வாக்கு இயந்திரம் எவர் கையிலும் கிடைக்காத அளவுக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் சூழ்நிலையில், இவ்வகையில் வாக்கு எண்ணிக்கையைத் திரிக்க வாய்ப்பு இல்லை என்று இந்திய தேர்தல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆதமின் மகன் அபு! திரைப்படம் சொல்லும் செய்தி!
ஆதமின் மகன் அபு!
திரைப்படம் சொல்லும் செய்தி!
மலையாளத்தில் ஆதமின்ட மகன் அபு எனும் பெயரில் வெளிவந்து பல விருதுகளைப் பெற்ற திரைப்படத்தை ஹனிபா டெக்ஸ்டைல் நிறுவனம் தமிழில் மொழிமாற்றம் செய்து உள்ளனர்!
இன்று மாலை சென்னை RKV தியேட்டரில் இதன் பிரிவியு ஷோ நடை பெற்றது! பத்திரிகையாளர்கள், திரையுலகத்தினர, சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்!
சனி, 17 மே, 2014
முகத்திரை கிழித்த பன்முகத் தேர்தல் !!!
“கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்”
என்றொரு திருக்குறள் உண்டு. நமக்கு வரும் தீமைகளிலும் ஒருவகை நன்மை உண்டு, அத் தீமை நாம் நெருக்கமாய் எண்ணும் மனிதர்களின் இயல்புகளை வெட்ட வெளிச்சமாக்கும் என்பது அதன் கருத்து. அத்தகைய சூழலை ஏற்படுத்தியது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.
ஆரியம் தழைக்கா தமிழகம்:
வெள்ளி, 16 மே, 2014
வியாழன், 15 மே, 2014
புதன், 14 மே, 2014
இன்ஜினீயரிங் கவுன்சிலிங் சில அவசியங்களும்… சில ரகசியங்களும்!
பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தின் துறையினை சரியாக தேர்ந்தெடுக்கும் முக்கிய கட்டத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்களின் தேர்வாக பொறியியலே முன் நிற்கிறது.
பொறியியல் படிப்பில் சேருவதற்காக கடந்த 3ம் தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
செவ்வாய், 13 மே, 2014
திங்கள், 12 மே, 2014
ஞாயிறு, 11 மே, 2014
அஸ்மா (ரலி) : வீரமங்கையின் வீரவரலாறு!
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் ஆருயிர் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் மூத்த மகளும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாழும்போது சுவர்க்கத்தின் நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) அவர்களின் மனைவியும், வீர தியாகி அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா (ரலி) அவர்களின் வீர வரலாற்றைப் பார்ப்போம்.
சனி, 10 மே, 2014
வியாழன், 8 மே, 2014
தேர்வு முடிவு, வாழ்க்கையின் முடிவல்ல: தோல்வியிலிருந்து மீளத் தோள் கொடுப்போம்!
தேர்வு முடிவு, வாழ்க்கையின் முடிவல்ல: தோல்வியிலிருந்து மீளத் தோள் கொடுப்போம்!
சிறந்த கல்லூரி எது ...?
I.I.T (Indian Institute of
Technology)
அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ்..... ]
CBSE என்ற கல்வி நிறுவனத்தால் வருடந்தோரும் நடத்தப்படும்
நுழைவுத்தேர்வு தான் JEE (Joint Entrance Examination), இதில் பங்கு
பெற்று நல்ல மதிப்பெண்கள் பெறுவதன் முலம்
இந்தியாவில் உள்ள தலை சிறந்த பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்து படித்து உங்கள் பிள்ளைகள் இந்திய அளவில் சிறந்த பொறியாளர் (Engineer) ஆகலாம். (இன்ஷாஅல்லாஹ்).
புதன், 7 மே, 2014
செவ்வாய், 6 மே, 2014
பொறியியல்: அண்ணா பல்கலைக் கழக விண்ணப்ப வழிமுறைகள்
அரசாங்க பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இணைந்து பொறியியல் பயில, அண்ணா பல்கலைக் கழகம் ஆண்டுதோறும் கலந்தாய்வுகளை நடத்தி வருகிறது. தற்போது அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மூன்று வழிகளில் விண்ணப்பம்…
1. நேரடியாக..
விண்ணப்ப படிவ விநியோக மையங்களில் நேரடியாக சென்று, சாதிச் சான்றின் நகல் மற்றும் ரூ. 500 (SC/ST – ரூ. 250) செலுத்தி விண்ணப்பம் பெறலாம்.
நிதியால் சுதந்திரத் “தீ”யை பற்ற வைத்த உமர் சுப்ஹானி
தேச விடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதிதிரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டிகூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ்நிதி என்றும் பெயரிட்டனர். அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தை பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென காந்திஜி அறிவித்தார்.
திங்கள், 5 மே, 2014
ஞாயிறு, 4 மே, 2014
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான்...
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான்
இந்திய சுதந்திர வரலாற்றை திப்பு சுல்தானை தவிர்த்து யாராலும் எழுதமுடியாது. அரசாண்ட இஸ்லாமிய மன்னர்களும் , ஆண்மிக உலமாக்களும், சமுதாய சிற்பிகளும், செல்வந்தர்களும், பெண்களும் சேர்ந்து போராடி பெற்ற சுதந்திரத்தை இன்று காவிகள் தான் போராடி பெற்றோம் என்று கூறிவருகின்றனர். அவர்கள் திப்புவின் வரலாற்றை கற்பனை கதை என்றூம் கூறுகின்றனர். அப்படி என்ன அவர்களுக்கு திப்புவின் மீது அவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி. அப்படி பட்ட திப்புவை பற்றி நாம் அறிந்தது என்ன?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)