ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் செலவை விட குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா பயணித்துள்ளது என்று மேடிசன் சதுக்கத்தில் தொடர்ச்சியான கைத்தட்டல்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசிய பேச்சின் குதூகலத்தில் இருக்கும்போது, இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்காத ஒரு செய்தி வெளியானதை பலரும் கவனிக்க தவறியுள்ளனர்.
செவ்வாய், 30 செப்டம்பர், 2014
கதைகள் என்ன செய்துவிடும்!
நாம் குழந்தைகளுக்கு கதை சொல்கிறோம். அது என்ன கதையாகவும் இருக்கலாம், ஆனால் அந்தக் கதை குழந்தைகளிடம் என்ன செய்துவிடும், என்ன கொடுத்துவிடும்?
கதையின் முடிவில் நாம் கூறும் நீதி போதனை அல்லது கருத்து தான் குழந்தைகளின் மனதில் தங்கும், அதற்கு நேரடியாகவே கருத்தினை மட்டும் கூறிவிட்டு போய்விடலாமே, நேர விரையம் தானே எனலாம். குழந்தைகளுக்கு அந்த கருத்து மட்டும் செல்கிறது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.
திங்கள், 29 செப்டம்பர், 2014
எதிர்ப்பு
எதிர்ப்பு
மோடிக்கு வரவேற்பு நடக்கும் மேடிசன் சதுக்கத்துக்கு வெளியே நீதி மற்றும் பொறுப்பிற்கான ஒருங்கிணைப்புக் கூட்டணி என்ற அமைப்பில் ஒன்று கூடியவர்கள் மோடிக்கு எதிராக போராட்டத்தை நடத்தினர்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிட மாட்டேன்-நரேந்திர மோடி !
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிட மாட்டேன். வழக்கை சட்டப்படி நடத்துங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு சரியானது என்று நினைக்கிறீர்களா?
இந்த வழக்கின் ஆரம்ப காலத்திலேயே தகுந்த உண்மை யான ஆதாரங்களை முன்வைத்து தான் மனு தாக்கல் செய்திருந்தேன். வழக்கில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று ஆரம்பத்திலேயே தெரியும். தீர்ப்பு சரியானபடியே வந்துள்ளது. இது நான் எதிர்பார்த்த தீர்ப்புதான். ஆனால் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது.
ஞாயிறு, 28 செப்டம்பர், 2014
விவிஐபி செல்லில் ஜெயலலிதா; கைதி எண். 7402
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23ஆம் செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட கைதி எண். 7402.
பெண்கள் சிறைக்கு அருகில் இவரது செல் இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படுக்கை, மின்விசிறி மட்டும் தனி பாத்ரூம் வசதிகள் உண்டு. குற்றவாளிகளுக்கான வெள்ளை உடை அவருக்கும் அளிக்கப்பட்டது.
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும். இந்த மாதத்தின் முதல் பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு இல்லை.அந்த வரிசையில் ايام عشر ذي الحجة – என்னும்
“துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்”
மிகவும் முக்கியமான நாட்களாகும். ஆகவே இந்த நாட்களில் அதிகமாக நல்லமல்களை செய்ய ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் سبحانه وتعالىதன் அடியார்களுக்கு அவர்களின் குறுகிய ஆயுளில் நிறைந்த நல்லமல்களைச் செய்து மகத்தான பேறுகளைப் பெறுவதற்காக சில முக்கிய நாட்களை வழங்கியிருப்பது மிகப்பெரிய கருணையாகும்.அந்த வரிசையில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை சிறப்பித்து குர்ஆனிலும்
சனி, 27 செப்டம்பர், 2014
ஊழல் தடுப்புச் சட்டம்: இந்திய அரசியல் வரலாற்றில் 'முதல்'வர் ஜெயலலிதா
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற நாட்டின் 'முதல்' முதல்வர் என்ற பெயரை எடுத்து சிறப்பு கவனம் பெற்றுள்ளார் ஜெயலலிதா.
வியாழன், 25 செப்டம்பர், 2014
ஆசிய விளையாட்டு: தலையில் ஹிஜாப் அணிந்து விளையாட கத்தார் பெண்கள் அணிக்கு அனுமதி மறுப்பு!
தென்கொரியாவின் இன்சியான் நகரில் 17–வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கத்தார் அணியும் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில், கத்தார் மற்றும் மங்கோலிய பெண்கள் அணிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடைபெற இருந்த போட்டியில் கலந்துகொள்ளும் கத்தார் வீராங்கனைகள் ஹிஜாபுடன் மைதானாத்துக்குள் நுழைந்தார்கள். ஆனால் சர்வதேச கூடைப்பந்து கழக (FIBA) விதிப்படி தலையில் முக்காடு (ஹிஜாப்) அணிந்து விளையாட நடுவர் தடை விதித்தார்.
தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்கிறது!
2014-15ம் நிதியாண்டுக்கான மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தமிழக மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கான விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கான தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள கட்டண விவரங்களில், ஆண்டுக்கு சுமார் 6,805 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ள விவரம் தெரிய வருகிறது.
செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட மங்கள்யான்! - முதல் முயற்சியிலேயே இந்தியா சாதனை!
செவ்வாய் கிரக ஈர்ப்பு பகுதிக்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலம், இன்று காலை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை செலுத்திய பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
புதன், 24 செப்டம்பர், 2014
சிந்தனை செய் மனமே ...
செப்டம்பர் மாத விடியல் வெள்ளியில் சிந்தனை செய் மனமே என்ற கட்டுரையில் இருந்து இணையத்தை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சொல்லியதில் இருந்து எடுக்கப்பட்ட செய்தி இது ஐந்தாயிரம் ரூபாய்க்கு சுமார்ட் போனும் ஐந்து ரூபாய்க்கு இண்டர்நெட்டும் கிடைக்கும் நமது நாட்டில் இன்று பெரும்பான்மையினர் இணையத்தோடு இணைந்துள்னர் ஏ.சி.அறையில் ஓசி இன்டர்நெட்டில் என்னை போன்றவர்கள் அமர்ந்துக் கொண்டு அனைவரையும் குறை சொல்ல வசதியாக உள்ளது .இணையத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை போராட்ட களத்தில் நிற்கும் மக்கள் நமக்கு படித்து தருகின்றனர் .சமிபத்தில் இஸ்ரேல் காசா மீது மிருக தனமான தாக்குதல்நடத்தியது இதன்
செவ்வாய், 23 செப்டம்பர், 2014
திங்கள், 22 செப்டம்பர், 2014
ஊடகத்தில் நமது நிலை!
அல்லாஹ் கூறுகின்றான்:
“அவர்களை எதிர்ப்பதெற்கென நீங்கள் தயாராகி விட்டீர்களென்றால் முடிந்த அளவு எல்லா ஆற்றல்களையும் தயார் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மேலும், குதிரைப் படைகளையும் திரட்டிவையுங்கள்.
இவற்றின் மூலம் அல்லாஹ்வுக்கும், உங்களுக்கும் பகைவர்களாய் உள்ளவர்களையும் இவர்கள் அல்லாத வேறு பகைவர்களையும் நீங்கள் திகிலடையச் செய்திட வேண்டும்.” (அல்குர்ஆன்:8:60)
இன்றைய நாட்களில் உலக மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள மார்க்கம்
இஸ்லாம். அதேபோல, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் முஸ்லிம்கள். இதற்கு முக்கியக்
ஞாயிறு, 21 செப்டம்பர், 2014
கறி தின்னு நாளாச்சும்மா…
” தாயும் சிறு வயது கொண்ட மகனும் கொண்ட ஏழை குடும்பம் அது. தந்தை இல்லை.
கும்பி எரியுது குடல் காயுது கொஞ்சம் மிளகோ உள்ளியோ இருந்தால் பழையதுக்கு தொட்டுக் கொள்ளாலாம் என்ற நிலையில் கழியும் அன்றாடப் பொழுதுகள். இந்த நிலையில் சிறுவனுக்கு அந்த ஆசை வந்தது. கறி தின்று எவ்வளவு நாள் ஆகி விட்டது.
அம்மாவிடம் சொன்னான். அம்மா நெக்குருகி நின்றாள். சுதாரித்தாள். சின்னஞ்சிறு மகனின் கறி ஆசையை நிறைவேற்றிட முனைந்தாள். துணிந்தாள்.
அன்றிலிருந்து சிறுக சிறுக சேர்த்தாள். ஒரு நாள்
ஒரு எட்டு போடுவோம்!
ஒரு குழந்தை தவழ்ந்து முடிந்து, எழுந்து நிற்க முயலும் போது தன் இருப்பு நிலையினை சமநிலை செய்ய முடியாததால் கீழே விழுவதும், பின் எழுவதுமான நிகழ்வு நடைபெறும்.
எதுவரை எனில் முழுவதுமான சமநிலையோடு (Balanced Walk) நடக்கத் துவங்கும் வரையிலும் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.
நாம் அனைவருமே இந்த முயற்சியில் வெற்றி பெற்றவர்கள்தான்.
மக்களை பாடாய்ப்படுத்தும் மூட்டைப்பூச்சிகள்!
பூச்சிகளால் எப்போதும் தொல்லைதான். அதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இத்தொல்லை அதிகம். ஆனால் சுத்தம், சுகாதாரத்துக்குப் பேர் போன்ற மேற்கத்திய நாடுகளில் பூச்சிகளின் தொல்லை குறைவாக இருக்கும் என்று நாம் எண்ணுவோம். நிஜத்தில் நிலைமை அப்படியில்லை என்பதை பிரான்ஸ் காட்டுகிறது.
அந்நாட்டில் வழக்கத்துக்கு அதிகமாக மூட்டைப்பூச்சிகள் நிறைந்துள்ளதாகவும், இதனால் அந்நாட்டு நகரங்களில் மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பரவி வரும்
சனி, 20 செப்டம்பர், 2014
கடத்த வந்தவரிடம் பாஸ்வேர்ட் (password) கேட்டு தப்பிய சிறுமி!
பெங்களூரில் 'little flower'என்கிற பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியிடம் முன்பின் தெரியாத ஒரு நபர், உன்னை அழைத்துவரச் சொல்லி உன்னுடைய அம்மா என்னை அனுப்பி வைத்துள்ளார்.
வா போகலாம் என்று சொல்லி இருக்கிறார்.
உடனே அந்த சிறுமி , "password" சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்...., (அதாவது முன்பின் தெரியாத யாராவது உன்னை
காஸா போர்:இஸ்ரேலின் உறவுகளை கடுமையாக பாதித்துள்ளதாக சர்வேயில் தகவல்!
டெல்அவீவ்: இஸ்ரேல், காஸாவின் மீது நடத்திய தாக்குதல் வெளிநாட்டு உறவுகளை கடுமையாக பாதித்துள்ளதாக 45 இஸ்ரேலியர்களும் நம்புகின்றனர் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு நல்ல இடம் உள்ளது என்பதை 13 சதவீத இஸ்ரேலியர்கள் மட்டுமே நம்புகின்றனர்.அமைதியான நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சியுடன் மட்டுமே இஸ்
அண்ணா என்றொரு அறிஞர் பெருமகன்...
“எனக்கு வயது முப்பது. அறிஞர் அண்ணாவை பற்றி கேள்விப்பட்டிருந்தேன். எனினும் அவரது வரலாறை அறிந்து இருக்கவில்லை. அதற்கான ஆவல் கொண்டிருந்த நிலையில் இந்த வலைதளத்தை கண்டேன். பேருவகை கொண்டேன். அவரது சீரிய வரலாறை படித்தேன் என்பதை விட அள்ளி அள்ளிப் பருகினேன் என்பதே பொருத்தமாக இருக்கும். திராவிட இயக்கத்தின் அந்த முன்னோடி நாயகனை தமிழ்நாடு தந்த திருமகனை இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டுமே என ஏங்கினேன். இனி அவரது நூல்களையும் படிக்க எண்ணியுள்ளேன். இந்த வாய்ப்பை நல்கிய தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.”
வியாழன், 18 செப்டம்பர், 2014
10 லட்சம் குழந்தைகள் அடுத்த 24 மணி நேரத்தில் இறந்துவிடுவதாக ஐ.நா. அதிர்ச்சி!
சிரியாவில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு போர் விமானம் ஒன்றை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக அங்குள்ள ஐ.நா. கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதில் விமானம் நொறுங்கி வீட்டின் மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சிரியா ராணுவம் செவ்வாய் அன்று, ஐ.எஸ் படைகள் இருக்கும் நகரங்களில் 5 முறை தாக்குதல் நடத்தியது. இது போல
சேது சமுத்திரத் திட்டத்தை ஒழித்துக்கட்ட மோடி அரசு முடிவு?
தமிழகத்தின் கனவுத்திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைஎந்தவிதத்திலும் நிறைவேற்றுவதில்லை என்று நரேந்திரமோடி அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.“ராமர் பாலத்தை தகர்ப்பது என்றபேச்சுக்கே இடமில்லை” என்றுதிங்களன்று தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதன்மூலமாக, மத்தியகப்பல் போக்குவரத்து அமைச்சர்நிதின்கட்காரி இதை உறுதிப்படுத்தினார்.
புதன், 17 செப்டம்பர், 2014
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு
11-ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவிகள் மெüலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற செப். 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்வியில் சிறந்து விளங்கி, வசதியின்றி கல்வியை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையில், மெüலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
திங்கள், 15 செப்டம்பர், 2014
சனி, 13 செப்டம்பர், 2014
மூன்று சோம்பேறிகளும் ஒரு வழிப்போக்கனும்
ஒரு பழைய கிராமம். அதில் ஒரு கல்மண்டபம். அங்கே எப்போதும் மூன்று சோம்பேறிகள் உட்கார்ந்துகொண்டு வழிப்போக்கர்களை வம்புக்கிழுத்து நேரத்தைப் போக்கடித்துக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் அந்த வழியே ஒரு வெளியூர்க்காரர் வந்தார். சோம்பேறிகள் வழக்கம்போல் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்கள்.
ஒரு சோம்பேறி சொன்னான், “நேரம் போகவேண்டுமல்லவா. நமக்குள் ஒரு பந்தயம் வைத்துகொள்வோம். ஆளுக்கொரு கதை சொல்ல வேண்டும். அதை மற்றவர்கள் நம்ப வேண்டும். நம்பாவிட்டால் கதை கேட்டவர் கதை சொன்னவருக்கு அடிமை. சரிதானே ?”
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)