Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 6 செப்டம்பர், 2014

திமுகவும் இந்துத்துவமும்!

“முதுகெலும்பில் ஏதோ பிரச்சனை என்பது வதந்தியாகத்தான் இருக்க வேண்டும். முதுகெலும்பே இல்லாத ஜென்மம். திமுகன்னாலே இப்படித்தானா இல்லை இப்படித்தான் திமுகவேயா?”
“ஒரு இந்து திமுகவில் இருப்பதற்கும் உலகின் மிக இழிவான செயலை செய்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.”
“திமுகவை விட கேவலமான கட்சி திமுகவினரை விட கேவலமான ஜன்மங்கள் – இவற்றை பார்க்கவே முடியாது… திராவிடத்தின் ஒரே சாதனை இந்த கேவல ஈன பிறவிகள்தான்.”

- அரவிந்தன் நீலகண்டன்
ஆசிரியர் தினத்திற்கு குரு உத்சவ் என்று பெயர் மாற்றம் செய்து வந்த அறிவிப்பிற்கு ‘ஆரிய சூழ்ச்சி இது’ என்று தெரிவித்த கண்டனத்திற்கும் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் பெயரால் வாழ்த்து வந்ததை மறுத்து தி.மு.க வெளியிட்ட அறிக்கைக்கும் இந்துத்துவ வெறியர்கள் ஆற்றிய எதிர்வினைதான் மேலே உள்ளது.

இதில் கவனிக்க வேண்டியது, தி.மு.க இத்தோடு இந்தப் பிரச்சினையை மறந்து விடும். ஆனால் இந்துத்துவவாதிகள் இதை விட மாட்டார்கள். தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிரச்சாரத்தை தீவிரப் படுத்துவார்கள். தங்கள் ஆதரவாளர்களை அதிகப்படுத்துவார்கள். ஊடகங்களும் அதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கும். கடந்த காலத்திலும் இதுவே நடந்தது.
தி.மு.கவிற்கும் இந்துத்துவத்திற்கும் உள்ள வித்தியாசம், தி.மு.க தனது கொள்கைகளை மேடைகளில் மட்டுமே பேசி வருகிறது. இந்துத்துவமோ தனது விஷக் கருத்துக்களை அடி மட்ட மக்கள் வரை கொண்டு செல்கிறது.
மேலே இதை எழுதிய அரவிந்தன் நீலகண்டன் பற்றி கூற வேண்டி உள்ளது. நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பிள்ளை சமூகத்தை சேர்ந்தவன். அதி தீவிர இந்துத்துவவாதி. இப்படி சொல்வதை விட வெறி பிடித்த என்ற சொல்லாட்சிதான் சரியாகும். இந்துத்துவக் கொள்கையில் ஆழ்ந்த அறிவு கொண்டவன். ஆரம்பத்தில் திண்ணை போன்ற இணைய தளங்களிலும் பின்பு வலைப்பூவிலும் எழுதி வந்தான். அப்போது முஸ்லிம்கள் இவனை எதிர் கொண்டார்கள்.
பின்பு தமிழ் ஹிந்து என்ற இணையதளத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறான். இந்த இணைய தளத்தில் இந்து மதம் அல்லது இந்துத்துவம் பற்றியக் கட்டுரைகளை விட இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான கடும் வெறுப்பைக் கொட்டும் வெறிக் கட்டுரைகளே அதிகம் இருக்கும். சமூக நல்லிணக்கத்தில் உண்மையில் அக்கறை கொண்ட ஒரு அரசு இருக்குமானால் கண நேரம் கூட தாமதிக்காமல் இந்த இணைய தளம் முடக்கப்பட்டிருக்கும். அந்த அளவு அபாயகரமான ஒரு இணைய தளம்.
இப்போது இவன் தினமலரில் இந்துத்துவக் கட்டுரைகள் எழுதி வருகிறான். அவ்வப்போது விஜய் டி.வி.இல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறான். பிரபல எழுத்தாளர்களை கொண்டு தனது நூல்களை வெளியிட்டு வருகிறான். சமீபத்தில் இவனுடைய ஒரு நூலை ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் வெளியிட்டவர் பா. ராகவன். ஆமாம். ‘நிலமெல்லாம் ரத்தம்’ எழுதிய அந்த பா.ராதான். ஃபாலஸ்தீனை பற்றி ஓரளவு தமிழ் சமூகம் அறிந்து கொள்ள உதவிய அந்தப் பா.ரா இப்போது இவனுடைய நட்பால் ஒரு முழுமையான இந்துத்துவவாதி.
இப்போது நடைபெற்ற போரில் ஃபாலஸ்தீனின் காஸா கொழுந்து விட்டு எரிந்த போது இங்கே உள்ள இந்துத்துவவாதிகள் இஸ்ரேலை ஆதரித்து இணையப் பிரச்சாரம் செய்தனர். திண்ணை தளம் முதல் ஜெயமோகன் வரை அதை செய்தனர். இந்த அரவிந்தனும் செய்தான். அப்போது அதை அருமை என்று தட்டிக் கொடுத்தார் இந்தப் பா.ரா.
இன்னொரு முக்கியமான விசயம். எழுத்தாளர் ஜெயமோகனின் நெருங்கிய நண்பன். ஜெயமோகனை இணையத்திற்கு அழைத்து வந்து அதை கையாள கற்பித்தவன். இப்படி கொடி கட்டிப் பறக்கிறது இந்துத்துவவாதிகளின் மக்கள் தொடர்பு யுக்தி.
நமது தலைப்பிற்கு வருவோம், தி.மு.க இந்த தேர்தலில் தனிமைப்படுத்த பட்டதற்கு இந்துத்துவவாதிகளின் பெரும் பங்கு உண்டு. பா.ஜ.க ஜெயிப்பதை விட தி.மு.க தோற்பதை அவர்கள் விரும்பினார்கள். இப்போது மீண்டும் ஒரு அருமையான சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் தி.மு.க தங்களுக்கு எதிரான இவர்களின் செயல் பாட்டை உணரவில்லை. ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று சொன்ன ஹெச். ராஜாவிற்கு வாழ்த்து சொல்வதும் மோடியிடம் குழைவதுமாக இருக்கிறது தி.மு.க தலைமை. முஸ்லிம்களுக்கெதிரான அதே வெறுப்பையும் பகையையும் காட்டுகிறார்களே என்று நமக்குத்தான் இவர்கள் மீது பரிவு ஏற்படுகிறது. பெரியார் என்ற ஆளுமையின் தாக்கம் தெரிகிறது.
இந்துத்துவத்தை எதிர்கொள்ள என்ன திட்டம் தி.மு.க விடம் உள்ளது?. திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளை மீண்டும் முழு வீச்சுடன் மக்களிடம் கொண்டு செல்லும் வீரியமான பிரச்சார திட்டமா? இந்தப் பணியில் அனைத்து சமூகத்தையும் ஒருங்கினைத்து இந்துத்துவத்தை தனிமைப் படுத்தும் நுட்பமா? அல்லது இந்துத்துவத்திற்கு அடி பணியும் சமரசமா?
இதைப் பொறுத்துதான் தமிழக எதிர்கால அரசியல் களம் இருக்கும்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக