Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 15 செப்டம்பர், 2014

தேவை மதவேறுபாடா.. மனமாற்றாமா.. சகோ. பூந்தை ஹாஜா..

தேவை மதவேறுபாடா.. மனமாற்றாமா.. சகோ. பூந்தை ஹாஜா..

இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் முஸ்லீம் மக்கள் பல கருத்துவேறுபாடுகளுடன் குழப்பங்கள் நிறைந்து இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் சித்தன்போக்கு சிவன்போக்கு என்பது போல் என்ன நடந்தாலும் அவர்கள் வழிகள் வாழ்ந்து
வருகின்றனர். இன்னும் பலர் மார்க்கத்தை ஆராய்ச்சி செய்து அதன்படி வாழ்ந்து வருகிறோம் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் உன்மை நிலை என்ன? தமிழ்நாட்டில் உள்ள மார்க்க அறிஞர்கள் முஸ்லீம் மக்களுக்கு சரியான வழிகளைத்தான் போதிக்கின்றார்களா? அப்படி அவர்கள் காட்டித்தந்தார்களேயானால் ஏன் இத்தனை குழப்பங்கள், வீண் விவாதங்கள், இன்றுவறை தீராத பிரச்சணைகள், ஒற்றுமையின்மை, ஒருவறை ஒருவர் சபித்துக்கொள்ளும் நிலை என சிந்தித்து பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.. மார்க்க அறிஞர்கள் விவாதங்களில் ஈடுபடும்போது அவர்கள் நாவிலிருந்து வரும் வார்த்தைகள்.. சுப்ஹானல்லா.. அங்கே அந்த விவதாதளத்தில் அமர்ந்து கேட்க கூடிய சாமானிய மக்கள் ஒன்றும் புரியாதவர்களாகவே வெளியே வருகின்றனர். விவதாம் நடத்தும் இரு கூட்டமும் வெற்றிக்கொள்வது நம் இஸ்லாம் மார்க்கத்தில் மட்டுமே அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டுமே என்று சொல்லும் அளவுக்கு நடாத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் சுன்னத் ஜமாஅத்தினர் பதில் சொல்லமுடியாமல் திணரல், தவ்ஹீத் ஜமாத்தினர் மாபொரும் வெற்றி, என்று ஒருபக்கம், அதே விவாதமேடையை பற்றி.. தங்ஹீத் ஜமாஅத்தினரின் தடுமாற்றம், சுன்னத் ஜமாஅத்தினருக்கே வெற்றி என்று ஆங்காங்க இரு கூட்டத்தினரும் வெற்றி களியாட்டம் ஆடுவதையும் காணமுடிகின்றது. இது எங்கே இஸ்லாத்தை கொண்டு செல்கின்றது என்று ஹதீஸ்கள் வழியில் எடுத்துகூறினால் அதற்க்கு மறுப்பு சொல்லும் ஹதீஸ்களும் பதியப்படுவதையும் மக்கள் படிக்கத்தான் முடிகின்றது.
இன்று ஒரு பொருள் உதராணாமாக பல் துலக்க கூடி பல் பசை (Tooth Paste) பலதரப்பட்ட கம்பெணிகள் பல வடிவில் உற்பத்தி செய்து விளம்பரம் செய்து விற்பது போன்று இன்று பலதரப்பட்ட மார்க்க அறிஞர்களால், அவர்களுக்கு உண்டா நடைமுறையில் மார்கத்தை அறிமுகப்படுத்துவதை பார்க்கும் போது இதுவும் வியாபாரம் போல் காட்சியளிக்கின்றது மார்க்கத்தில் புதுசு புதுசா பிரச்சனைகளை உறுவாக்கி அதற்க்கு சவால் விட்டுக்கொண்டு அதை மக்கள் மத்தியில் நாங்கள் ஏன் இந்த முடிவை எடுத்தோம் என்றும் அதற்க்கு ஏதாவது எதிர் அணியிலிருந்து பிரச்சனை தோன்றினால் அதற்க்கு மறுப்பு தெரிவித்து அதை மக்கள் முன் எடுத்து செல்வதற்க்காக மின்னஞ்சல்கள், குறுந்தகடுகள், ஆண்லைன் வருத்தகங்கள், இணையத்தளங்களின் மூலம் இஸ்லாம் மார்க்கம் வியாபாரம் படு பிசியாக நடந்துக்கொண்டிருக்கின்றது. இதையாராலும் மருக்க முடியாது. அதே சமயத்தில் பள்ளிகளில் தொழுகை நடத்திக்கொண்டும் மதரசாக்களின் வேதம் கற்றுக்கொடுத்தும் அதற்க்கு கூலியாக பெரப்பட்டு அவரக்ளது ஜீவாதாரத்தை கழித்துக்கொண்டிருக்கும் ஆலிம்களை பற்றி அவதூறுகள் எழுதுவதையும் பார்க்கமுடிகின்றது. நிறைக்குடம் என்றுமே தழும்பாது அறைகுடம் தழும்பும் என்ற பழமொழிக்கு ஒற்ப்ப நடப்பதுபோல் உள்ளது. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலும், மைக்கை பிடித்தவனெல்லாம் பேச்சாளர் என்ற நிலை உறுவாகியுள்ளது. ஒருவறை ஒருவர் ஏசிக்கொள்வதும், துனைப்பெயர்கள் (பட்டபெயர்) வெய்ப்பதும், மேலும் ஹதீஸ்களில் தன்னுடைய சொந்த அதிகாரங்களை புகுத்துவதும் அப்படி செய்தால் கூடும், இப்படி செய்தால் கூடாது அந்த பள்ளியில் போய் தொழுதால் தொழுகை நிறைவேறாது.. தொப்பியில்லாமல் தொழ வரவேண்டாம் என்பதெல்லாம் வேடிக்கையாகிவிட்டது.
ஆலிம்களுகளும், அண்ணன்மார்களும், தம்பிமார்களும் மக்களுக்கு ஹதீஸ்களை எடுத்துகூறுகின்ரோம் என்ற போர்வையில் தகாதவார்த்தைகளை பிரயோகிப்பதும் அதை கேட்பவர்களுக்கு முகம் சுலிக்க வைக்கின்றது. இஸ்லாமியர்கள குறிப்பாக தமிழ்நாட்டில் சச்சரவுகள் செய்தும், உரக்க சப்தமிட்டும், கூப்பாடு போட்டும் பிற மதத்தினரை அவமதித்தும், விவதாத்திற்க்கு அழைத்தும் மேலும் எப்பொழுதுமே விரோத போக்குடன் இருக்கும் ஓட்டு மொத்த ஆலிம்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகவே இருக்கின்றன.
இஸ்லாத்தின் நெறிமுறையே மாறி. மனம் போன போக்கிலெல்லாம் மார்க்கத்தை எடுத்து மக்கள் மத்தியில் எடுத்துசெல்லப்படுகின்றன. ஒரு காலத்தில் மரணத்தை பற்றி சொற்பழிவு ஆற்றினால் மனதில் பயம் தோன்றி உறக்கம் குறையும். ஆனால் இன்று மார்க்க சம்பந்த விளக்கங்கள் எதை எடுத்தி கூறினாலும் மக்கள் மத்தியில் தோன்றுவதெல்லாம் சந்தேகமே.. சொல்வதெல்லாம் நம்ப தகுந்தவையாக இல்லை என்ற கேள்வி மனதில் தோன்றி குழப்பத்தை விளைவிக்கின்றன.
நோண்புக்காலம் வரும் போதும் பிறை பார்க்கும் நிகழ்வில் குழப்பங்களும் அதனால் மனிதர்கள் கடைபிடிக்க கூடிய பர்லான நோண்புகள் முன்னும் பின்னும், சிறப்பு தொழுகையின் ரக்காஅத்துகள் குறித்தும் உன்மைக்கு புறம்பாகவும், அதேபோல் பெருநாள் தொழுகையின் நாட்கள் ஒற்றுமையில்லாமையால் முன்னும் பின்னும் நடாத்தி வியப்பை தருகின்றது. அரசியல் தலைவர்கள் எல்லாம் எந்த நாட்களில் பெருநாள் வாழ்த்து கூறுவது என்று குழம்பும் நிலைக்கு இருந்து வருகின்றது.
அரசியில் கட்சிகளில் இஸ்லாமியருக்கு என்று பல கட்சிகள் இருந்தாலும் தமிழ்நாட்டில் இஸ்லாமியருக்காக ஆலும் அரசங்காத்தால் எந்த சலுகைகளையும் எளிதாக பெரமுடியவில்லை. இஸ்லாமிய இயக்கங்களால் நடத்தப்படும் மாநாடுகள் அரசியல் கட்சிகள் விஞ்சும் அளவிற்க்கு சிலவுகள் செய்து பெரும் விழாவாக நடத்தி இதுவறை செய்த சாதனைதான் என்ன? வீண்விரயம் செய்யப்பட்ட பொருளாதாரத்திற்க்கு வேண்டுமானால் மக்களிடத்தில் வரவு சிலவு கணக்குகள் காட்டப்படலாம். உண்ணுங்கள் பருகுகங்கள் வீண் விரயம் செய்யாதீர் என்ற உறைக்கும் இறைவனுக்கு என்ன பதில் செல்லப்போகின்றனர் இந்த தலைவர்கள். இதையெல்லாம் யார்கேட்பது… இளைஞர்கள் கையில் எதிர்காலம் இருக்கின்றது என்று சொல் மாறி நம் சமுதாய இளைஞர்களில் கையில் சிறையின் கம்பிகள் என்று பலரின் வாழ்க்கை சிரையில் காலந்தள்ளும் நிலமை.. அதை வழிநடத்தி தந்த தலைவர்கள் இன்று வெளியில் உல்லாசமாக அதுவும் வீரவசணங்கள் பேசிக்கொண்டு திரிகின்றனர். தமிழ்நாட்டின் சிறையில் உள்ள பெரும்பாலான முஸ்லீம் மக்கள், கொலை கொள்ளை கற்பழிப்பு போன்றவற்றை செய்து தண்டனையை அனுபவிப்பர்கள் அல்ல. மாறா இயக்கங்கள் நடத்தும் தலைவர்களின் வீர வசணங்கள், அனல் பறக்கும் பேச்சை கேட்டு உணர்ச்சி வயப்பட்டும் தவறான  போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்டும், இன்னும் சந்தேகத்தில் பெயரில் கைது சைய்யப்பட்டும்  அதில் சந்தேக கைதிகளாக தண்டனையை அனுபவிப்பவர்களே அதிகம். இதை மறுக்கமுடியுமா.?
என் சகோதரன் சிறையில் இருக்கின்றான் என்ற அந்த குடும்பத்தில் வேதனை படும் நபர்களுக்கு ஆருதல் அளிப்பதினால் என்ன பயன் நிகழ்ந்து விடபோகின்றது. தலைவர்களின் சொல்லை வேதவாக்காக எடுத்துக்கொள்ளும் இளைஞர்கள் மத்தியில் சிந்தித்து பேசவேண்டாமா.? உணர்ச்சிமிக்க பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவேண்டாமா?. இன்று மைக்கப்படித்தவன் எல்லாம் பழனிபாபாவாகா மாறியுறள்ளனர்.. எங்கும் உணர்ச்சிமிக்க உறைகள் நிகழ்த்தி. அதற்க்கு கைதட்டாத குறையாக அல்லாஹ் அக்பர்… அல்லாஹ் அக்பர்.. என்ற கோஷமும் விண்னை முட்டுகின்றது. இதை கேட்டுக்கொண்டிருக்கும் அல்லாஹ் அருள்பாழிப்பானா அல்லது அவன் புறத்திலிருந்து வேதணை இரங்குமா என்றெல்லாம் சிந்திப்பது கிடையாது.
இவர்களை தவிர தமிழ்நாட்டில் இன்னும் மார்க்க இயக்கங்கள் பல இருக்கின்றன. அவரக்ளும் இறைவணங்களில் ஈடுபடுகின்றனர். கண்ணுற்று பார்க்கும்போது அவர்களது சில செயல்கள் சிற்க்கானவைளாகவே உள்ளன. ஆனால் அவர்களுக்கு ஒரு பாதையை வகுத்துக்கொண்டு இறை இல்லங்களை கட்டிக்கொண்டு இறைவணக்கத்தில் அமைதியாகவே ஈடுபட்டுவருகின்றனர். சன்னி முஸ்லீம்கள், ஷியா முஸ்லீம்கள் என்று அறிந்திருந்த மக்களளிடத்தில் தவ்ஹீத் என்ற முஸ்லீம் அமைப்பும் இன்று தமிழ்நாட்டில் மூன்றாவதாக தோன்றியுள்ளன. அல்லாஹ்வையும், இறைத்தூரரையும் மட்டும் நம்பும் இந்த தவ்ஹீத் அமைப்புகள் தனித்தனியே வணக்கஸ்தளங்களை கட்டிக்கொண்டு வணக்கத்தில் ஈடுபட்டுவருவதையும் காணமுடிகின்றது. தேர்தல் நேரத்தில் மூண்றாவது அணி தோன்றி பரப்பரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அதேபோல இந்த மூண்றாவதாக இந்த இயக்கங்களும் பரப்பர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.
இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், மாரியம்மன்கோவில், காளியம்மன், கருப்பன், முருகன், பிள்ளையார் இப்படி பல கோவில் பல கடவுள்கள் இருக்கின்றன. அப்படி பல கோயில்கள் இருப்பதுபோல் வணக்கத்திற்க்கு உறியவன் இறைவன் ஒருவனே என்ற சத்தியத்தை திலைநாட்ட கூடியவரக்ளிடத்தில் இன்னும் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சுன்னத்து பள்ளி, தவ்ஹீத் பள்ளி, அஹ்மதியா, ஜாக், ஒரு இறைவனுக்கு ஏன் இத்தனை பள்ளிகளில் இப்படி பிரிந்து கிடப்பது எதை உணர்த்துகின்றது. இயக்கங்கள் என்னும் மாயையே இன்று அதிகம் தலையடுக்க ஆரம்பித்துள்ளன என்பதனையே அன்றி வேறில்லை. இவையெல்லாம் முஸ்லீம் மக்களை எங்கு கொண்டு செல்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தோமாயானால் முடிவில் நான் சுன்னத்தும் அல்ல தவ்ஹீதும் அல்ல ஒரு முஸ்லீம் என்ற உணர்வை உணரமுடியும்.. அப்படி உன்மையை அந்த நிலையை ஒவ்வொருவறும் அறிய ஆரம்பித்துவிட்டால் அல்லாஹ்வின் உள் அச்சம் தோன்றி உங்களை அது நேரா வழிக்கு அழைத்துசெல்லும். அன்று மனிதனுக்கு மோட்சமும் பிறக்கும்.
1) மாற்றுமதத்தினரை இஸ்லாம் பக்கம் அழைக்காமல் அவர்களுடன் விவாதம் தேவையற்தே. முஸ்லீம்கள் இடையில்
விவாதம் வைத்து அதற்க்கு தீரவு காணமுடியாத போது மாற்று மதத்தினருடன் ஏற்படும் விவாத்தில் என்ன பயன்.?
2) உறுவுகளுடன் சேர்ந்துவாழுங்கள் என்று இருக்கும்போது அந்த உறவுகளான அண்ணன் தம்பியிடத்திலும் அத்தா
மகனிடத்திலும் பிரிவுக்கண்டு ஒப்பாரிவைக்கும் சூழ்நிலையில் சாமானிமனிதர்கள் தள்ளப்படுவது ஏன். ?
3) ஹதீஸ்கள் அனைவராலும் விழங்கி வாழமுடியும் என்றால் மார்க்க அறிஞர்கள் எதற்க்கு?
4) ஹதீஸ்களில் தன்னுடைய சொந்த அதிகாரங்களை புகுத்துவதும் நாவிற்க்கு எட்டியதெல்லாம் எடுத்துறைப்பதும்
இவர்களுக்கு அந்த அதிகாரத்தை யார் தந்தது? இதுபோன்ற கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.
பாங்கு ஒலி எங்குறைத்தாலும் ஒரே வரிசை நடைமுறையில் உறைத்து பள்ளிக்கு தொழுவதற்க்காக அழைக்கப்படுகின்றது. தொழுகை என்பது இறைவனுக்கும் அவனது அடிமைக்கும் இடையில் ஏற்படும் வணக்க வழிபாடே.. இதில் இறைத்தூதர் காட்டிதந்த வந்த வழியில் எங்கு தொழுதாலும் (சுத்தமான இடங்களில்) அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்காததும் அவன் செயலே. தொழுகை என்பது பர்ளு, சுன்னத், நபில் என்று வேறுபட்டிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தொழுகையிலும் நாம் செய்யக்கூடி உடல் அசைவுகள் இறைத்தூதர் கண்மனி நபிகள் நாயகம் காட்டித்தந்த வழியைத்தான் நாம் சுன்னத் என்கிரோம். அதில் குறைபாடு இருந்தாலும் தொழைகை நிறேவிறிவிடும். ஆனால் அந்த குறைகளை அறிந்து அதை நிவர்த்தி செய்து தொழுதுவந்தோமேயானால் அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக்கொள்வான்..
ஒரு ஆலிம் அல்லது தொழுகை நடத்தகூடிய தகுதி உள்ளவர், அல்லது மார்க்கத்தை பற்றி நண்கு அறிந்தவர், அல்லது தொழுகை முறையை முறையாக கடைப்பிடிக்க்கூடியவர் என்று மட்டுமே நாம் பார்க்க தகுதிபெற்றுள்ளோம். மேலும் ஓவ்வொரு மனிதனும் அடுத்த மனிதருடன் 24 மணி நேரம் என்று சொல்லக்கூடிய அந்த ஒருநாள் முழுவதும் இருப்பதில்லை. இன்னும் குறிப்பாக ஒரே வீட்டில் உள்ளவர்கள் கூட ஒரே நேரத்தில் ஒவ்வொறுவறை கண்கானித்துக்கொண்டிருக்கமுடியாது. ஆலிம்களாக இருக்கட்டும், இமாம்களாக இருக்கட்டும், இன்னும் தொழகை நடத்தக்கூடிய பிற மனிதர்களாக இருக்கட்டும் அனைவரும் சராசரி மனிதர்களே.. அவர்களும் தொழுகை நேரம் போக மற்ற நேரங்களில் அவர்களுக்கு தேவையான பனிகளை செய்துக்கோண்டே இருப்பார்கள். தீயசெயல்களில் கூட ஈடுபட்டிருக்கலாம். அந்த நேரத்தில் அவரகள் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே அன்றி மனிதர்கள் அல்ல. தொழுகை நடத்தக்கூடியவர்களின் உள்ளத்தையையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே. அப்படியிருக்கும் இருக்கும்போது தொ.ழுகை நேரத்தில் மட்டும் தொழுகை நடத்துபவரை பாக்க்கும் நாம் எப்படி அவரது செயல்களை பார்க்காமல் இறைவணுக்கு பயந்து தொழது வருகிரோமே அதுவே சிறந்த வழிபாடு. இவர்கள் பின்னால் நாம் தொழுத தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொகள்வான் என்று நம்பிக்கையோடு தொழும் மனிதர்களின் இறைவணக்கத்தை இறைவன் நிச்சயமாக ஏற்றுக்கொள்வான். ஏன் ஏன்றால் இறைவனக்கம் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே நடைபெறும் சம்பாசனையே அன்றி வேறொன்றில்லை. அதற்க்குமாறாக அவர்கள் பின்னால் நின்று தொழுதால் தொழுகை கூடுமா.. இவர்கள் பின்னால் நின்று தொழுதால் தொழுகை கூடுமா என்று தர்க்கம் பண்ணிக்கொண்டிருப்பதனால் எந்த பயனும் இருக்காது. ஏன் என்றால் இமாமத்து நடத்த கூடியவர்களுடன் நாம் அவர்களுடயேனே இருப்பதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நல்லவர் கெட்டவர் என்று நாம் எப்படி முடிவு எடுக்கமுடியும். அல்குர்ஆனையும் ஹதீஸ்களையும் கரைத்து குடித்திருப்பதினாலும், வீரவசணம் பேசிவருவதினாலும் நல்லவர் என்று முடிவிக்கு நாம் எப்படி வரமுடியாதோ அதைபோல அவர்கள் இறைவனைக்கு அஞ்சி தீயவைகளை அகற்றி நண்மையை நாடி, அவனது தண்டனைக்கு நடுங்கி மார்க்கம் ஹராமாக்கி உள்ளவர்களை தவிர்த்து வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு நாம் காலம் கடந்து தொழுவருகிரோம்.
சுன்னத்பள்ளி, தவ்ஹீத்பள்ளி என்று பெயர்வைத்து வணக்கஸ்தளங்கள் பிரிந்தாலும் தொழைகை என்பது இறைவன் ஒருவனுக்கே இருக்கவேண்டுமே தவிர பிரித்த தலைவர்களுக்காக அவர்களது சொல்லுக்காக இருக்கூடாது.
நான் இருப்பது அபுதாபியில் மதினத்து ஜாயித் சாப்பிங்மாலுக்கு அருகில், அரப் தேசத்தில் 187 நாட்டுக்கும் அதிகமாக மக்கள் வசித்து வருகின்றனர் அல்லாஹ்வின் அழைப்பான பாங்கொலி கேட்கின்றது.. இதே நான் தொழுகைக்கு கிளம்பிவிட்டேன்.. நான் தொழபோகும் பள்ளியில் யார் தொழவைப்பார்கள் அவர் நல்லவரா கெட்டவரா என்று எனக்கு தெரியாது. ஒருவேளை நான் பள்ளிக்குள் நுழையுமுன் பர்ளான தொழுகை முடிந்திருக்கலாம். அதற்கு பிறகு நடத்தப்படும் தொழுகையில் வழிநடத்துபவர் ஒரு அரபியாக இருக்காலம், அல்லது ஒரு மிஸர் தேசம், இன்னும் அரபி பேசக்கூடிய நாடுகளில் உள்ளவரோ அல்லது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸில் உள்ளவர்கள் கூட இருக்கலாம். மேலும் ஒரு சாதாரண கூலி தொழிலாளியாக கூட இருக்கலாம் இன்னும் அவர் சுன்னத்ஜமாத்தா தவ்ஹீதா, எந்த மத்ஹப்பை சார்ந்தவர், கருப்பா, சிவப்பா என்றெல்லாம் எனக்கு தெரியாது. அது எனக்கு மட்டுமல்ல இந்த அரப்நாட்டின் வாசிகளோ இன்னும் பிற தேசத்து மக்களுக்கும் கூட தெரியவாய்பில்லை.  அவர்களும் இந்த பர்ளான தொழுகை நேரத்தோடு தொழாமல் தவறிவிட்டால் இரண்டாவதாக அல்லது மூன்றாதாக நடத்தப்படும் இமாமத்தில் இணைந்துக்கொள்வார்கள். காரணம் ஒரு முஸ்லீம் சகோதரன் தொழவைக்கும் தொழுகையில் குறைபாட்டை காண அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. அவர்களுடைய நோக்கமும், என்னுடைய நோக்கம் இரைவன் கட்டளையிட்டுள்ள பர்ளான தொழகையை அதுவும் ஜமாஅத்துடன் நிறைவற்றவேண்டும் அந்த என்னத்துடனே நான் பள்ளிவாசலை நோக்கி என் காலை எடுத்துவைக்கின்றேன். நான் தொழ எப்போதே ஆயத்தப்படுத்துவிட்டேன். இறைத்தூதர் காட்டிதந்த அந்த சுன்னத்தான வழிமுறைகளை பின்பற்றி தொழக்கூடியவர்களில் நானும் ஒருவன் என்ற எண்ணத்தோடு உள்ள என் தொழுகையை நிச்சயமாக அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையோடு போய்க்கொண்டிருக்கின்றேன்….
- ஆக்கம் பூந்தை ஹாஜா
மின்னஞ்சல் மூலமாக
ஹாஜா மொய்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக