Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 17 செப்டம்பர், 2014

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு

11-ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவிகள் மெüலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற செப். 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்வியில் சிறந்து விளங்கி, வசதியின்றி கல்வியை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையில், மெüலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், பெரம்பலர் மாவட்டத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி மதங்களைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு ரூ. 12,000 கல்வி உதவித் தொகை இரு தவணைகளில் (11-ம் வகுப்பிற்கு ரூ. 6,000, பிளஸ் 2 வகுப்பிற்கு ரூ. 6,000) வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற சிறுபான்மையின மாணவிகள் 10-ம் வகுப்பில் குறைந்த பட்சம் 55 சத மதிப்பெண்கள் பெற்று நிகழாண்டில் (2014- 2015) மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11-ம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். வருமானச் சான்றிதழ், ஓய்வூதிய ஆணை, ரூ. 20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் இதர விவரங்களை ட்ற்ற்ல்:ம்ஹங்ச்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கல்வி நிலைய தலைமை ஆசிரியர், தாளாளர் தங்கள் கல்வி நிலையத்தில் 11-ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவிகளிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து, அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிறசேர்க்கை 1-ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பமிட்டு விண்ணப்ப படிவம் மற்றும் பிறசேர்க்கை 1 மற்றும் 2-ல் குறிப்பிட்டுள்ள படிவங்களுடன் The Secretary, Maulana Azad Education Foundation (Ministry of Minority Affairs, Government of India). Chelms Ford Road, New Delhi-110055 என்ற முகவரிக்கு செப். 30-ம் தேதிக்குள் சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக