Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

நமதூர் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா ? SDPI கோரிக்கை ...


பெரம்பலூர் SDPI அலுவலகத்தில் நேற்று  முன் தினம் (05.09.2014 ) மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார்.
மாநில பொது செயலாளர் நிஜாம் மொய்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கட்சியின் பணிகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் சித்தீக் பாஷா, ஹிதாயத்துல்லாஹ், 
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசூல் அகமது, முஹம்மது இக்பால், முஹம்மது பாரூக் கலந்து கொண்டனர். 
இறுதியாக மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது நன்றியுரையாற்றினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் SDPI கட்சி சார்பாக 
அரசியல் பயிலரங்கம் நடத்துவது என்றும், 
அக்டோம்ர் 02 காந்தி பிறந்த நாளில் முழு மதுவிலக்கு கோரி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என்றும், 
பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பிரச்சாரம் செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

1. பெரமபலூரில் காவேரி கூட்டு குடிநீர் வழங்க முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.வி களத்தூர் வண்ணாராம் பூண்டி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

3. லப்பைகுடிகாடு பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

மின்னஞ்சல் மூலமாக
PFI LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக