Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 1 செப்டம்பர், 2014

தமிழ் முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலையும், தவறான தலைவர்களும்!



தமிழ்நாட்டில் முஸ்லிம் சமூகம் மத்தியில் கல்வி புரட்சி ஏற்படுத்துவதற்காக அறக்கட்டளை அமைத்து பல இடங்களில் நன்கொடைகள் வசூலித்து வரும் முக்கிய தலைவர் ஒருவர் தன் பேஸ்புக் பக்கத்தில் கீழ்கண்டவாறு பதிவு இட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட இரு விஷயங்கள் எவ்வளவு தூரம் சமூகத்தை ஹைஜாக் செய்து தவறாக வழிநடத்துகிறார் என்பதை புரிய முடிகிறது. இம்மாதிரியான மோசமான, தவறான தலைவர்கள் தான் குறிப்பிட்ட அளவில் சமூகத்தின் மனித வளர்ச்சி குறியீட்டிற்கு தடையாக இருக்கிறார்கள். இதோ அவரின் ஆழமான பதிவு


பொறியியல் படிக்க ஆர்வம் உள்ளவர்கள்.....

1..பிற சமூகங்கள் தேர்வு செய்யும் பிரிவை தேர்வு செய்யாமல்
முஸ்லிம்கள் தனி இலக்கோடு பயணிக்க வேண்டும்

2.பெண்கள் பொறியியல் படிப்பதை 
முடிந்த வரை தவிர்க்க வேண்டும்

//பிற சமூகங்கள் தேர்வு செய்யும் பிரிவை தேர்வு செய்யாமல்
முஸ்லிம்கள் தனி இலக்கோடு பயணிக்க வேண்டும்

பெண்கள் பொறியியல் படிப்பதை 
முடிந்த வரை தவிர்க்க வேண்டும் //

பிறசமூகங்கள் தேர்வு செய்யும் பிரிவு என்ன என்றே தெரியவில்லை. அவர் அணிந்திருக்கும் சட்டை மற்றும் தொண்டியின் டீ சர்ட் எங்கிருந்து வந்தது என்பதை அறியாத அப்பாவியாக இருக்கிறார். ஒருவேளை முஸ்லிம்களுக்கு மட்டும் தனி பொறியியல் பிரிவை உருவாக்க போகிறார்கள் என்று நினைக்கிறேன். பெண்கள் பொறியியல் படிப்பு தவிர்த்தல் என்பது அவர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஒன்று தான். வழக்கமான குரூர ஆணாதிக்கத்தின் தாக்கம் இது.

ஒரு வேளை அவர் கீழ்கண்ட புதிய பிரிவுகளை உருவாக்க கூடும்.

B.E in Heaven and Hell Technology

B.E in Black textile Technology

B.E in Arabic madarasa Engineering

தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மத்தியில் இம்மாதிரியான காமெடிகளுக்கு பஞ்சமே இல்லை.

H. Beer Muhammad.

2 கருத்துகள்:

  1. Dear H. Beer Mohammad ,
    I accept your discover the mistake from XYZ Speech , but you also doing the same mistake again , give the wrong information ,
    ஒரு வேளை அவர் கீழ்கண்ட புதிய பிரிவுகளை உருவாக்க கூடும்.
    B.E in Heaven and Hell Technology
    B.E in Black textile Technology
    B.E in Arabic madarasa Engineering.... If you know anything give suggestion . comments will pass all include me.
    1) பிறசமூகங்கள் தேர்வு செய்யும் பிரிவு என்ன என்றே தெரியவில்லை. அவர் அணிந்திருக்கும் சட்டை மற்றும் தொண்டியின் டீ சர்ட் எங்கிருந்து வந்தது என்பதை அறியாத அப்பாவியாக இருக்கிறார். ஒருவேளை முஸ்லிம்களுக்கு மட்டும் தனி பொறியியல் பிரிவை உருவாக்க போகிறார்கள் என்று நினைக்கிறேன். ----> Don't Misguide what you think wrong , if you genuine give good solution . i.e. நாம் தேர்தெடுக்கும் துறை அனைவரும் தேர்தெடுக்கும் துறையாக இருப்பின் , ஒரே துரையின் வேலை வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பது அரிது என்பதால் குறிப்பிட்டு இருக்கலாம் . உதாரணமாக : 1) Electrical , Mechanical , Civil & IT / Computer Science -- All the peoples are chose only for this course, why no one not able to select any other course in B.E. like

    பதிலளிநீக்கு
  2. Example :
    a) Aeronautical Engineering , b) Agricultural and Food Engineering ,c) Aerospace Engineering
    d) Architecture Engineering, e) Automation and Robotics
    Automation and Robotics Engineering is one of the lucrative field.
    f) Agricultural and Irrigation Engineering
    Agricultural and Irrigation Engineering is studying about the technology and methods behind augmenting the growth of crop.
    g) Bio-Medical and Instrumentation Engineer..
    Bio-Medical and Instrumentation Engineering is the special branch of engineering which deals with the application of the engineering principles and design concepts to medicine and biology.
    h) Building and Construction Engineering
    Building and Construction Engineering as a discipline deals with designing, planning, construction and management of infrastructure such as buildings, roads, bridges, dams, roads, railways etc.
    i) Etc……
    2) பெண்கள் பொறியியல் துறையை தேர்தெடுக்க கூடாது - என்பது வரவேற்க தக்கது அல்ல , மாறாக பெண்களுக்கு(அவரவர்களுக்கு ) உகந்த துறையை தேர்ந்தெடுப்பது சால சிறந்தது .

    பதிலளிநீக்கு