Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 1 செப்டம்பர், 2014

லப்பைக்குடிக்காடு பகுதியில் தே.மு.தி.க. சார்பில் நலத்திட்டம் வழங்கும் விழா!

லப்பைக்குடிக்காட்டில் நடைபெற்ற விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் துரை.காமராஜ் தலைமை வகித்து மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ மாணவியருக்கு அன்னதானம் மற்றும் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கினார்.
அதை தொடர்ந்து திருமாந்துரை கிராமத்தில் கிளை செயலாளர் சங்கர் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் துரை.காமராஜ் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு பேனா உபகரணங்கள் வழங்கினார்.

கழனிவாசல், ஆடு துறை, அத்தியூர், பள்ள காழிங்கராயநல்லூர், மேட்டு காழிங்கராயநல்லூர், கீழப்பெரம்பலூர், வயலூர், அந்தூர், ஆகிய கிராமங்களில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு பேனா உபகாரணங்கள் மற்றும் முதியோர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கபட்டது.
நிகழ்ச்சியில் வேப்பூர் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், அவைதலைவர் கணபதி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கண்ணுசாமி, சிவகுமார், பொதுகுழு உறுப்பினர் ரவிக்குமார், தொழிற்சங்க நிர்வாகி சேகர், மணிமாறன்,
கேப்டன் மன்ற துணை செயலாளர் மலர்மன்னன், மாவட்ட மகளிரணி வைரமணி, மாவட்ட பேச்சாளர் கருணாநிதி, ஒன்றிய நிர்வாகி அந்தூர் பச்சமுத்து அண்ணாதுரை கோவிந்தன், வெங்கடேஷ், செந்தில்குமார், லப்பைக்குடிக் காடு பேரூர் கழக நிர்வாகிகள் கமால்பாஷா, பாத்ருதின், மகளிர் அணி நிர்வாகிகள் பாஜ்லுன்னிஷா, முபசிராபேகம், ஆசம்மா, பரிதபேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக