Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

எதிரொலி!!!!

அப்பாவும் மகனும் காலாற மலையின் முதுகில் நடந்து கொண்டிருந்தனர். திடீரென்று மகன் கால் இடறி தரையில் விழுந்தான்.
“ஆ........அப்பா..............” காயம்பட்டு துடித்த சிறுவன் அலறினான்.

“ஆ........அப்பா..............” சிலநொடிகளில் மலைப்பகுதியிலிருந்து திரும்பி வந்த ஒலி அந்தச் சிறுவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஒன்றும் புரியவில்லை, ஆர்வமிகுதியில் “யாரது.................?” கத்தினான் உரத்த குரலில்,
“யாரது .........?” திரும்பி வந்து அவனைக் கேட்டது.
இம்முறை கோபம் கொண்டான். தன் வலியினை யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்று “சனியனே.............” கடுஞ்சொல் கொண்டு கத்தினான்.
மீண்டும் அவனுக்கு “சனியனே.........” எதிராய் வந்தது.
கண்ணில் நீர் சேர, “அப்பா.... பாருங்க யாருன்னு தெரியல, என்னை கிண்டல் செய்கிறார்கள், வலிக்குது” என்றான் உடைந்த குரலில்..
“என் செல்ல மகனே, நடப்பதை உன்னிப்பாக கவனி!” அப்பா தைரியமூட்டினார்.
சரி, இப்ப பார்க்கலாம் என்று, “எனக்கு உன்னைப் பிடிக்கும்.”
அதே மகிழ்வுடன் “எனக்கு உன்னைப் பிடிக்கும்” என்ற குரல் திரும்பி வந்தது.
“நீதான் முதலிடம் பிடிப்பாய்.............” திரும்பவும் மலையினூடே வந்த குரல் “நீதான் முதலிடம் பிடிப்பாய்.................” என்றது.
ஆச்சர்யமடைந்தாலும் புதிரான இந்த நிகழ்வுக்கு தன் தந்தையிடம் விளக்கம் கேட்டான்.
சிரித்துக் கொண்டே அப்பா சொன்னார், “அன்பு மகனே இதனை எதிரொலி என்று எல்லோரும் சொல்லுவர். ஆனால் உண்மையிலேயே வாழ்க்கை என்பதும் இதுபோன்றுதான்.
வினாவிற்கு விளக்கம் விளங்காமல் விழித்த சிறுவனை, அருகில் இருத்தி அப்பா சொன்னார், “நீ எதைச் சொல்கிறாயோ அல்லது செய்கிறாயோ அதுவேதான் உன்னிடம் வந்து திரும்பிச் சேரும். அதாவது நமது வாழ்க்கை என்பது நமது செயல்பாடுகளின் பிரதிபலிப்பே ஆகும்.
உன்னை எல்லோரும் விரும்ப வேண்டும் என்று நினைக்கிறாயா? நீ எல்லோரையும் மனதார விரும்பிக் கொண்டிருக்கிறாயா? என்று பார்.
உன்னுடைய நண்பர்கள் திறமையானவர்களாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? உன் திறமையினை வளர்த்துக்கொள்” என்று பதில் தந்தார்.
“இந்த வாழ்க்கைக்கு எதைக் கொடுக்கிறாயோ; அதையினையே வாழ்க்கை உனக்குக் கொடுக்கும்” என்று முடித்தார் அப்பா.
முகநூலிருந்து ரஃபீக் சுலைமான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக