Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

துபாயில் ஏற்பட்ட கடும் புழுதிக் காற்றும் நமது படிப்பினையும் !


 

 கடந்த சில தினங்களாக துபாய் நகரில் கடும் புழுதிக் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.


காலநிலை மாற்றத்துக்கான ஒரு அறிகுறியாகவே இந்த புழுதி மணல் காற்று வீசுவதாகவும் அடுத்து வரும் சில தினங்களில் கடும் குளீர் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



ஆனால் , இது அல்லாஹ்வின் அத்தாட்சியில் உள்ளன என உலக பொது மறையான அல்குர்ஆன் கூறுகின்றது.

சந்திரனை அடிப்படையாக வைத்துத்தான் இஸ்லாமிய நாட்காட்டி அமைக்கப்பட்டுள்ளது.


ஒரு முறை சந்திரனின் பலனைப் பற்றி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அல்லாஹ் தன் அருள்மறையில் இவ்வாறு பதிலளிக்கின்றான்.

( நபியே ! தேய்ந்து , வளரும் ) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் , அவை மக்களுக்குக் காலம் காட்டு பவையாகவும் , ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன.  (அல்(குர்ஆன் 2:189 )

காலங்களைக் கணக்கிடுவதற்கு மனிதன் நாட்கள் , மாதங்கள் , வருடங்கள் ஆகியவைகளைப் பயன்படுத்துகிறான். இது குறித்து அல்லாஹ் இப்படிக் குறிப்பிடுகின்றான்.

இரவையும் , பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி(இருளாகி)டச் செய்தோம். உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் , ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் , கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் , பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம். ( அல்குர்ஆன்17:12 )

அல்லாஹ் மேலும் கூறுகின்றான்.
அவன்தான் சூரியனைச் ( சுடர்விடும் ) பிரகாசமாகவும் , சந்திரனை ஒளிவுள்ளதாகவும் அக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு ( சந்திரனாகிய ) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான். அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை. அவன் ( இவ்வாறு ) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான். ( அல்குர்ஆன்  10:5 )


ஆக , காலங்களின் மாற்றம் எல்லாம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தான் வருகின்றன. இது நமக்கு ஓர் படிப்பினையாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.






தகவல் அமீரகத்திலிருந்து 
நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக