Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 22 செப்டம்பர், 2014

நமதூர் ஹஜ் பயணி மக்காவில் வபாத்தானார்!

நமதூர் ஜமாலிய நகர் மேற்கு மெயின் ரோடு மர்ஹூம் மொல்லா முஹம்மது உசேன் அவர்களின் மகன் ஹாஜி முஹம்மது காசிம் என்பவர் நேற்று (21/09/2014) ஞாயிற்றுக்கிழமை
மக்காவில் வபாத்தானார்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

இவர் கடந்த 15 ந்தேதி அன்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாக இவரும் இவருடைய மனைவி ஹபிபுன்னிஷா ஆகியோர் சென்றனர்.

நேற்று காலை உணவு வாங்க லிப்டில் செல்லும் போது லிப்ட் பழுதடைந்து மூச்சு திணறி லிப்டிலேயே இறந்து விட்டார்.இவர் இறந்த செய்தி நேற்று இரவே தெரிய வந்தது.

அவரின் சிரு பெரு பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பதோடு ஜன்னதுல் நயீம் என்ற சுவனத்தை தந்தருளவும் குடும்பத்தார்களுக் சாந்தியையும் சபுரையும் தந்தருளவும் அனைவர்களும் துவாசெய்வோமாகவும் என்று கேட்டு கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக