Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 5 ஜனவரி, 2015

உலகை அச்சுறுத்திய 2014 - அ.மார்க்ஸ்



காலையில் செய்தித்தாளை விரித்தால்அச்சத்தை ஏற்படுத்தும் என்ன செய்தி காத்திருக்கப் போகிறதோ என அஞ்சிக் கழித்தஓராண்டு முடிந்து விட்டது. உலகெங்கிலும் தீவிரவாத அச்சுறுத்தல்கள், சிறுமிகள்பணயக் கைதிகளாகக் கடத்தப்படுதல், பள்ளிக் குழந்தைகள் கொல்லப்படுதல், சுட்டுவீழ்த்தப்படும் பயணி விமானங்கள், பலஸ்தீனிய மக்கள் மீது மீண்டும் ஒர் கொடிய போர்,எபோலா வைரஸ் தாக்குதல், ஒழித்துக்கட்டிவிட்டதாக இறுமாந்திருந்த போலியோ மீண்டும் புத்துயிர்ப்பு, ஓய்ந்து போயிருந்ததாக நம்பியிருந்த பனிப்போர் மீண்டும் தொடங்கும்அபாயம், இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கள் இத்தனைக்கும் மத்தியில்தான் இந்த 365நாட்களும் உருண்டோடிவிட்டன. 


ஸ்காட்லந்தின் தனி நாட்டுக்கோரிக்கை யாருக்கும் பயனற்ற ஒரு இரத்தக் களறியாக மாறாமல் மிகவும் அமைதியான ஒர் கருத்துக் கணிப்பின் மூலம் எதிர்கொள்ளப்பட்டது, ஸ்பெய்ன் மன்னர் ஜுஆன் கார்லோஸ் பிரிட்டிஷ் ராணியைப் போலத் தள்ளாத வயதிலும் சிம்மாசனத்தை இறுக்கப் பற்றிக் கொண்டிருக்காமல்முந்தைய ஆண்டு இத்தாலியில் போப் 16ம் பெனடிக்ட், நெதர்லான்ட்ஸ் அரசி பீட்ரிக்ஸ்,பெல்ஜியம் அரசர் இரண்டாம் ஆல்பர்ட் முதலானோர் செய்ததைப் போல தானாகவே முன்வந்து பதவி விலகிஒரு அமைதியான ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது, பலஸ்தீனத்தை இங்கிலாந்துஅங்கீகரித்தது, உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகிய இந்தியாவில் ஒரு அமைதியான தேர்தல் நடத்தப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, ரசியாவில் ஒலிம்பிக் அமைதியாக நடந்தேறியது எனயைந்த ஆண்டில் நடைபெற்ற ஓரளவு ஆறுதல் அளிக்கக் கூடிய நிகழ்வுகளெல்லாம் உலக அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை ஈடு செய்ய இயலவில்லை.

உக்ரேனில் தேர்ந்தெடுக்கப்பட்டவிக்டர் யானுகோவிச்சின் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தோடும், அல் குவேதாவிற்குப்பின் உருவாகியுள்ள பயங்கரவாத அமைப்பான "இஸ்லாமிய அரசு" (ISIS)ஈராக்கிலுள்ள ஃபலூஜா மற்றும் ரமாடியின் பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடும் விடிந்தது சென்ற ஆண்டு. அடக்குமுறை கொண்டு சமாளிக்க முயன்ற யானுகோவிச்பதவி இறக்கப்பட்டு அலெக்சான்டர் துர்சினோவ் அந்த இடத்தில் அமர்த்தப்பட்டார். இந்தஆட்சி மாற்றத்தைப் பின்னணியில் இருந்து நேட்டோ இயக்கியது ஊரறிந்த இரகசியமானாலும் ரசியா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அது சோசி ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியை நடத்துவதில் மும்முரமாக இருந்தது. ஆனால் புதிதாக உருவான ஆட்சிஉக்ரேனிலுள்ள 40 சதம் ருசிய மொழி பேசும் மக்களின் உரிமைகளின் மீது கைவைத்தபோது ரசியாவிழித்துக் கொண்டது.

1990ல் மேற்கு மற்றும் கிழக்குஜெர்மனிகள் இணைக்ககப்பட்டபோது அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் கொடுத்த வாக்குறுதிகளை மீறி, சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளை ஒவ்வொன்றாகநேட்டோவுக்குள் கொண்டு வந்தன. அங்கெல்லாம் தனது படைகளை நிறுத்தின. ஏவுகணைத் தளங்களைஅமைத்தன. இன்று உக்ரேனும் நேட்டோ வசமானால் ரசியா கிட்டத்தட்ட சுற்றிலும் ஏவுகணைத் தளங்கள் மற்றும் நேட்டோ இராணுவத்தால் சுற்றி வளைத்து முற்றுகை இடப்பட்டநாடாக மாறிவிடும். உக்ரேனின் ஒரு பகுதியான கிரீமியாவில் பெரும்பான்மையானோர் ருசியமொழி பேசுவோர். இவர்கள் புதிய ஆட்சிக்கு எதிராகத் தொடங்கிய போராட்டத்தின் ஊடாகத் தன் படைகளை மார்ச் தொடக்கத்தில் கிரீமியாவுக்குள் அனுப்பியது ரசியா. மார்ச் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 90 சதத்துக்கும் மேற்பட்ட கிரீமியர்கள்ரசியாவுடன் இணைவது என வாக்களித்ததை ஒட்டி ரசியா கிரீமியாவைத் தன்னோடு இணைத்துக்கொண்டதாக அறிவித்தது.

இது பன்னாட்டுச் சட்டங்களுக்குஎதிரானது என உலக நாடுகளின் கருத்தைத் தனக்கு ஆதரவாகத் திரட்டிய அமெரிக்கா ருசியாவைத் தனிமைப் படுத்துவதில் வெற்றிகண்டது. இன்று ரசியா மீது கடும்பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது இன்று இன்னொரு பனிப்போருக்கு வித்திட்டுள்ளது. இதற்கு மத்தியில்தான் ஜூலை 17 அன்று மலேசிய விமானம் எம் எச் 17  கிரீமியப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டு 283பேர் பலியாயினர். இதன் பின்னணி யார் என இதுவரை நிறுவப்படவில்லை.

இன்றைய உலகின் மிகப் பெரியபயங்கரவாத இயக்கமாக உருப் பெற்றுள்ள 'இஸ்லாமிய அரசுசின்' பிடி சிரியாவிலும் ஈராக்கிலும் இறுகத் தொடங்கியபின் 1,30,000 குர்திஷ் மக்கள் சென்ற செப்டம்பர் தொடங்கிஅகதிகளாக வெளியேறி துருக்கியில் தஞ்சம் புகுந்தனர்.  இதற்கிடையில் ஸ்டீவன் ஸ்காட்லாஃப், ஜேம்ஸ் ஃபோலிஎன்கிற இரண்டு அமெரிக்கப் பத்திரிகையாளர்களும் டேவிட் ஹெய்ன்ஸ் எனும் பிரிட்டிஷ்ஊழியரும் மிகக் குரூரமாக இவ்வமைப்பினால் கொல்லப்பட்ட காட்சி உலகெங்கும் வெளியானது. இதை ஒட்டி அமெரிக்கா தனது வளைகுடாக் கூட்டாளிகளான சவூதி, பஹ்ரெய்ன், ஐக்கிய அரபு எமிரேட்கள் முதலானவற்றின் துணையோடு சிரியாவில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்தபகுதிகளின் மீது விமானத் தாக்குதலை மேற்கொண்டது.

சிரியாவில் கடந்த நான்காண்டுகளாக அஸ்ஸாத் ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அஸ்ஸாத் அரசு போராடுபவர்களின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்து வந்தது. இலட்சத்திற்கும்மேற்பட்டோர் இன்று அங்கு பலியாகியுள்ளனர். அஸ்ஸாத் அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவும்அதன் வளைகுடாக் கூட்டாளிகளும் நின்றதோடு அங்கு பயங்கரவாததத்தையும் ஊக்குவித்தனர்.ஐ.எஸ் உருவாகி வளர்ந்த போதெல்லாம் கண்டு கொள்ளாத அமெரிக்கா, ஐ.எஸ் கட்டுப்பாட்டில்உள்ள எண்ணை வயல்களில் உற்பத்தியாகும் எண்ணை மீது தடை விதிக்காத அமெரிக்கா இன்றுவிமானத் தாக்குதலைத் தொடங்கியிருப்பது மனிதாபிமானத்தின் அடிப்படையில் அல்ல. மேற்குலகின்அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இன்னொரு அமைப்பு உருவாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். இந்தத் தாக்குதல் மேலும்அழிவுகளுக்கே இட்டுச் செல்லும். ஆனால் ஆப்கானிஸ்தான் தொடங்கித் தனக்குப் பிடிக்காத முஸ்லிம் அரசுகளுக்கு எதிராகப் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்துப் பின் அவற்றையேகாரணம் காட்டி ஆக்ரமிப்புப் போர்களை நிகழ்த்துவது அமெரிக்காவிற்கு வழக்கமாகிவிட்டது.

சென்ற ஏப்ரல் 2010ல்  நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சிபோக் நகர அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 276 மாணவியரை 'மேற்கத்தியக்கல்வியைப் புறக்கணிப்போம்' என்கிற பொருள் படும் "போகோ ஹராம்" எனும்அடிப்படைவாத அமைப்பு கடத்திச் சென்றது உலகின் கவனத்தை ஈர்த்த இன்னொரு நிகழ்வு.1966 தொடங்கி, மிகச் சிறிய சில இடைவெளிகள் தவிர கடந்த 40 ஆண்டுகளாக ஊழல்கள்நிறைந்த கடும் இராணுவ ஆட்சிகளின் கீழ் நைஜீரியா இருந்து வருகிறது. மேற்கத்திய கலாச்சார மற்றும் பொருளாதார ஊடுருவல்களுக்கு இந்த ஆட்சிகள் பெரிய அளவில் வழி வகுத்தன.  இதற்கு எதிர்வினையாக உருவான அமைப்புதான் போகோ ஹராம். இந்த ஆண்டு மட்டும் 2000 பேர்கள் இவ்வமைப்பினால் கொல்லப்பட்டுள்ளனர் எனக்கூறப்படுகிறது.

இந்த ஆண்டு பாலஸ்தீனியர்களுக்குஆதரவு காட்டும் ஆண்டு என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் ஒருமுறை ஏற்கனவேமுற்றுகை இடப்பட்டிருந்த துண்டு நிலமான காசாவின் சிவிலியன்கள் மீது இஸ்ரேல்வெறித்தனமாகக் குண்டு வீசித் தாக்கியதில் 2200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை உலகம் வேடிக்கை பார்த்தது. தங்கள் வேறுபாடுகளைச் சற்றே ஒத்தி வைத்துவிட்டு ஹமாசும் ஃபடாவும் இணைந்து "ஒற்றுமை அரசு" ஒன்றை அமைக்க ஏப்ரல் 23 அன்றுமுடிவெடுத்தன. சரியாக மூன்றாவது மாதம் (ஜூலை 8) தொடங்கிய இந்த 50 நாள் போரில்எண்ணிக்கையைப் பொருத்தமட்டில் இழப்பு பலஸ்தீனியர்களுக்குத்தான் என்ற போதிலும் இம்முறை பலஸ்தீனியர்களின் ராக்கெட் தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள்ளத் திணறியது குறிப்பிடத் தக்கது. உலகமே இந்தத் தாக்குதலுக்காக இஸ்ரேலைக் கண்டித்தபோதும் இந்தியவில் புதிதாகப் பதவி ஏற்ற பா.ஜ.க அரசு வாய் மூடி மௌனமாக இருந்தது. மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டுமெனில் 1967ம் ஆண்டு ஐ.நா இயற்றிய பலஸ்தீனம் மற்றும்இஸ்ரேல் என்கிற இரு தனித்தனி நாடுகளை அங்கீகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவதுதான்ஒரே வழி.

சென்ற செப் 18 அன்று நடைபெற்ற ஸ்காட்லன்ட் பிரிவினைக்கான கருத்துக்கணிப்பு தேர்தலில் பிரிவினை கூடாது,இங்கிலாந்துடன் சேர்ந்து வாழ்வது என்கிற அணியினர் 55.3 சத வாக்குகள் பெற்று வெற்றியடைந்தனர். பிரிவினை கோரியவர்கள் தோற்றுப் போன போதிலும் கூடுதலான சுயாட்சிஉரிமைகளை அவர்கள் பெற்றனர். தவிரவும் இனி பிரிவினைக் கோரிக்கைகளை இந்த முறையில்தீர்மானிப்பது என்கிற ஒரு சாத்தியம் இதன் மூலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 16 அன்று பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு இராணுவப் பள்ளியில் சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 150பேர்களை பாகிஸ்தானின் தாலிபன் அமைப்பின் தற்கொலைப் பிரிவினர் சுட்டுக் கொன்றது உலகை அதிர வைத்த இன்னொரு செய்தி. ஷியா உல் ஹக் ஆட்சிக் காலத்தில் தனது உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு எதிரிகளைச் சமாளிப்பதற்காக மத அடிப்படையிலான பயங்கரவாதம் பாக் அரசால் ஊக்குவிக்கப்பட்டது. அதன் கொடிய விளைவுகளை இன்று பாக் அரசே எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது.தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை என்கிற உறுதிமொழியை முன் வைத்து ஆட்சியைப் பிடித்த நவாஸ் அரசு அந்தத் திசையில் இயங்காமல் சட்டவிரோதக் கொலைகள், இடப் பெயர்வுகள்ஆகியவற்றைத் தொடர்ந்ததன் விளைவு இது.

பொலிவியாவில் கடும் அமெரிக்கஎதிர்ப்பாளரான ஏவா மொரேல்ஸ் மீண்டும் வெற்றி பெற்றது (அக் 13), வெனிசூலாவில்நிகோலஸ் மடுரோவின் ஆட்சிக்கெதிராக மாணவர் போராட்டம் (ஜன-பிப்), தாய்லந்தில்இரராணுவம் நடத்திய ஆட்சி கவிழ்ப்பு, ((மே 22), ஜனநாயகத்தை நோக்கிய ஹாங்காங் மாணவர்எழுச்சி (ஆக - அக்) முதலியன இந்த ஆண்டின் இன்னும் சில முக்கிய நிகழ்வுகள்.

எபோலா வைர்ஸ் தாக்குதல்உண்மையிலேயே அச்சுறுத்தக் கூடியதுதான் என்ற போதிலும், விமான நிலையத்திலேயே இன்று மேற்கொள்ளப்படும் சோதனைகள், உரிய தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் அதை உலக அளவில் அது பரவாமல் தடுத்துவிட இயலும். ஆனால் அது குறித்த ஒரு பூதாகரமான அச்சம்ஊட்டியதில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் ஒரு பங்கு வகிக்கிற்து. எபோலா வைரசைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டதாக எதிர்க் கட்சியும், வெற்றிகரமாகச் சமாளித்துவிட்டதாக ஆளும் கட்சியும் கும்மியடித்துக் கொண்டுள்ளன.

உலகை அச்சுறுத்திக் கொண்டுள்ளபயங்கரவாதத்திற்கான தீர்வு அரசியல் களத்தில் மட்டுமே சாத்தியம். ஆக்ரமிப்புப்போர்களின் மூலம் அதைச் சாத்தியப்படுத்த இயலாது என்பதை 2014 மீண்டும் ஒரு முறைநமக்கு நினைவுபடுத்தியுள்ளது.

(நன்றி தினகரன், நாளிதழ் 'வசந்தம்'  இணைப்பு 2014 Year Bokk katturai.. மற்றும் வசந்தம் இதழாசிரியர் கே.என்.சிவராமன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக