Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 23 ஜனவரி, 2015

வாட்ஸ்-அப்பை கூகுள் குரோமில் பயன்படுத்தலாம்!


சான் பிரான்ஸ்சிஸ்கோ: உலகெங்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் கைவசம் வைத்திருக்கின்ற வாட்ஸ்-அப் நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து நேற்று வாட்ஸ்-அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை மொபைல் போனில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்-அப் செயலியை இனி இணையதளத்திலும் பயன்படுத்தலாம். தற்போது இந்த புதிய சேவையை கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த சேவையை ஆப்பிள் நிறுவனம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோனில் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த வாட்ஸ்-அப், மேலும் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக