Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 14 ஜனவரி, 2015

நமதூரில் சுவரொட்டியால் நேற்று ஏற்பட இருந்த பிரச்சனையின் உண்மை தன்மை மற்றும் நமது நிருபரின் மன்னிப்பும் ...

யாருக்கு யார் குழி வெட்டுகிறார்கள்..
இந்த செய்தியை நாம் நேற்று விசாரித்த வகையில் நாம் வெளியிட்டோம். ஆனால் இன்று இது சம்மந்தமாக நமது நிருபர் இரண்டு தரப்பிலும் விசாரித்த வகையில் நேற்று நாம் வெளியிட்டிருந்த செய்திற்கு முற்றிலும் மாறாக அமைந்திருந்தது. உடனே நமது நிருபர் மன வேதனையோடு நாம் மிகப்பெரிய தவறு இழைத்துள்ளோம். ஆனால் இந்த செய்தியை மக்களிடம் மறைத்து விடலாம். ஆனால்
அல்லாஹ் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறான் என்ற அச்சத்தில் மீண்டும் இதன் உண்மை தன்மையை நமதூர் மக்கள் மன்றத்தில் வெளியிடுகின்றோம். இதுவும் இந்த குர்ஆன் ( 5 : 8 ) வசனத்தின் நீதியை நிலைநாட்டுங்கள் என்று அல்லாஹ் கூறி உள்ளான். கடந்த செய்தியில் உள்ள தவருக்கு நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோரிகின்றோம். ஆனால் அந்த செய்தியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் பற்றி செய்தி மட்டும் உண்மையானது.

“ஒரு போதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும் ) , எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன் ”. ( அத் தவ்பா 9 : 51 )
பிரச்சனைக்கு உள்ளான சுவரொட்டி

பொதுவாக எதிர்மறையான தலைப்புக்களை இடுவதற்கு நாங்கள் விரும்புவதில்லை. என்றாலும், சமூகத்தின் பிளவுகள் என்று வரும்போது அவை அடியோடு அழிக்கப்பட வேண்டியவை என்பதில் இருவோரு கருத்துக்கள் இல்லை அல்லவா ? இந்த செய்தியும் நமதூரை மையப்படுத்தியோ வெளியிடுகின்றோம். 

கடந்த காலங்களில் முன்னால் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் அவர்கள் கூறிய வார்த்தை மிக முக்கியமானது. தேர்தல் முறைகேடுகளை வாய் கிழிய பேசும் ஊடகங்களுக்கு அவர் கொடுத்த சவுக்கடி இதோ. “ அரசியல்வாதிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் செய்திகள் வெளியிடுவது தேர்தல் முறை கேடு தான். இதற்கான தண்டனைகள் விரைவில் அறிவிக்கப்படும் ” என்று தெரிவித்தார்.

இதைவிடத் கேவலமான விஷயம் எதுவும் உண்டா ? அவரை பேச வைத்த சம்பவம் எது தெரியுமா ?இப்போது நடந்து முடிந்த தேர்தல்கள் தான்.

 இப்போது நமதூரில் நடைபெற்ற சம்பவத்திற்கு வருவோம். நேற்று      
13-01-2015 TNTJ சார்பாக  காவல் துறைக்கு ஒரு புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் எங்கள் ஜமாத் ( TNTJ ) சார்பாக வரும் 14 தேதி பெண்கள் நிகழ்ச்சி நடத்த உள்ளோம். அதை விளம்பர படுத்தும் விதமாக ஊர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தோம். இந்த சுவரொட்டியின் மீது மேற்கு சுன்னத்துவல் ஜமாத் அவர்களுடைய போஸ்டரை எங்கள் நிகழ்ச்சி முடியும் முன்பாகவே அதன் மீது ஒட்டிஉள்ளனர். எந்த எந்த இடத்தில் மேல் போஸ்டர் ஒட்டபட்டதோ அந்த இடத்தை காவல் துறைக்கு தவ்ஹீத் ஜமாத் சார்பாக காண்பிக்கப்பட்டது.    

இரு தரப்பினர் இடத்திலும் விசாரனை செய்தனர் காவல் துறையினர். பின்னர் இரண்டு ஜமாத்தினரையும் இரவு 8 மணிக்கு மங்களமேடு காவல் நிலையத்திற்கு வரும் மாறு கூறிவிட்டு சென்று விட்டனர்.

வழக்கம் போல் சுன்னத்துவல் ஜமாத் ரொடியாக இருந்தனர். காவல் துறையினர் இடம் இருந்து பேன் வந்தது. நாங்கள் தயாராக உள்ளோம் என்றனர் சுன்னத்துவல் ஜமாத். பின்னர் TNTJ யிடம் காவல் துறையினர் நீங்க வரீங்களா என்றதுக்கு இல்லை. எங்களுக்கு நாளை மீட்டிங் உள்ளதால் நாங்கள் வர முடியாது என்று கூறிவிட்டனர்.

நமதூரில் பேச்சுவார்த்தையில் சுன்னத்துவல் ஜமாத் காவல் துறையிடம் சார் நாங்க அவங்ககிட்ட ஒட்டும் இல்லை உரவும் இல்லை. அவங்க தனி ஜமாத் தனி நிர்வாகம் அனைத்தும் தனி தனியாக வைத்துள்ளனர். எங்கள் ஜமாத்திற்கு கட்டு படுவதும் இல்லை. நாங்கள் அவர்கள் பள்ளி அருகே பேய் பேஸ்டர் ஒட்டுவதும் இல்லை. எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள ஒரே பிரச்சனை இறந்தவர்களை அடக்கம் செய்வது தான். அதிலும் சில நேரங்களில் கைகலப்பு ஏற்பட்டது.

TNTJ  இரவு 8 மணிக்கு வரமுடியாது என்று கூறியதால்  காவல் துறை பொங்கள் முடிந்த உடன் இரண்டு தரப்பினரும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மீட்டிங் உள்ளது. அந்த மீங்டிங்கில் இது சம்மந்தமாக ஓர் தீர்வு காண ஏற்பாடு செய்யலாம் என காவல் துறை சார்பாக கூறப்பட்டது.         

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.” 
( அல்குர்ஆன் 5:8 )

நமது நிருபர்

2 கருத்துகள்:

  1. oorla irukkira ella edathilaiyum neegaley(tntj)notice ottitta..avanga mela thaan otti aganum...orey edathula naalu poster otranga...thevaiya

    பதிலளிநீக்கு
  2. pooongadaaa luuuuusu epppa paaru tntj va thavara pasuratha intha newsku valaya irukku (neenga paaru vaanga endaaa tntj para use panringa)

    பதிலளிநீக்கு