Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 23 ஜனவரி, 2015

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மதச்சாயம்:கிரண் பேடி!


புதுடெல்லி: சமூக ஆர்வலரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான கிரண் பேடி, கடந்த சில நாட்களுக்கு முன்னால் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணா நகர் வேட்பாளராக கிரண் பேடி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்தது. மேலும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் கிரண் பேடியை தேர்ந்தெடுத்தது பா.ஜ.க.

இதையடுத்து, வேட்புமனு தாக்கல் செய்ய கிருஷ்ணா நகர் தொகுதிக்கு ஊர்வலமாக சென்ற கிரண்பேடி, அங்குள்ள லாலா லஜபதி ராயின் சிலையை சுத்தப்படுத்தினார். பின்னர், தான் அணிந்திருந்த கட்சியின் சின்னத்தைக் கொண்ட சால்வை ஒன்றை லஜபதி ராயின் சிலைக்கு கிரண் பேடி அணிவித்தார். கிரண் பேடியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் மற்றும் ஆத் ஆத்மி ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ”சுதந்திர போராட்ட வீரர்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள்; அவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களை பா.ஜ.க-விற்கோ, காங்கிரசுக்கோ அல்லது மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றோ பிரிப்பது சரியான செயல் அல்ல. ஆனால், பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மதச்சாயம் பூச முயற்சிக்கிறார். இது சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கும் செயலாகும். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவிட்டாலும், அவமதிக்காமல் இருக்கலாம்” என்றார்.
இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசியவாத அமைப்பு எனவும், இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதில் ஆர்.எஸ்.எஸ் பங்கு மிக முக்கியமானது என கிரண் பேடி பேசியதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஐ.பி.எஸ் அதிகாரியாக பணிபுரிந்த காலத்தில், சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டை பெற்ற கிரண் பேடி, தற்போது பல்வேறு சர்ச்சைக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக